TA/670317 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவின் துணையுடன், நிறைவான கிருஷ்ண உணர்வில், எவரேனும் பக்தி தொண்டு செய்தால், பிறகு அவர் படிப்படியாக ரதி பெறுவார். ரதி என்றால் அன்பு, விருப்பம், பகவானின் மீது பற்று. இபோது நமக்கு கருப்பொருளில் பற்று உள்ளது. ஆகவே நாம் முன்னேற்றம் அடையும் போது, படிப்படியாக கருப்பொருள் பற்றிலிருந்து விடுபட்டு, முழுமையாக பகவான் மீது பற்று கொண்ட தளத்திற்கு செல்வோம். ஆக பற்று, அதுதான் என்னுடைய இயல்பான உள்ளுணர்வு. நான் பற்றிலிருந்து விடுபட முடியாது. நான் கருப்பொருளில் அல்லது ஆன்மீகத்தில் பற்று கொள்ள வேண்டும். நான் ஆன்மீகத்தில் பற்று கொள்ளவில்லை என்றால், பிறகு நான் கருப்பொருளில் பற்று கொள்ள வேண்டும். நான் ஆன்மீகத்தில் பற்று கொணடால், பிறகு கருப்பொருளின் பற்று நீங்கிவிடும். இதுதான் செயல்முறை."
670317 - சொற்பொழிவு SB 07.07.32-35 - சான் பிரான்சிஸ்கோ