"பகவான் சைதன்யருக்கு முன்பு பகவான் கிருஷ்ணரின் லீலா ஸ்தலங்கள் மறக்கப்பட்டு இருந்தன. 'இப்பகுதிகளில் கிருஷ்ணர் பிறந்து தனது லீலைகளை நடத்தினார்' என்பது மட்டுமே மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட அவ்விடங்கள் அகழப்படவில்லை. ஆனால் சைதன்ய மகாபிரபு சனாதன கோஸ்வாமியை அனுப்பிய பின்னர், மதுரா-பிருந்தாவனம் எனப்படும் நிலப்பகுதியின் முக்கியத்துவம் மிக மிக முக்கியம் அடைந்தது. அந்த நகரம் முக்கியத்துவம் பெறக் காரணம் சனாதன கோஸ்வாமியாவார். ஏனென்றால் சனாதன கோஸ்வாமி அங்கு சென்று ஆலயத்தை நிறுவுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தார். சனாதன கோஸ்வாமி, ரூப கோஸ்வாமிக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆலயங்கள் நிறுவப்பட்டன, இப்போது குறைந்தது ஐயாயிரம் ஆலயங்களாவது அங்கு இருக்கும்."
|