"இப்போழுது உங்கள் தொழிலின் மூலம் நீங்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறீர்கள். எல்லோரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள். ஒரு மனிதன், சாதாரண உழைப்பாளி, அவனும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறான், மேலும் சிறந்த தொழில் அதிபர், அவரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார். ஆனால் பகவத் கீதை கூறுகிறது அவர்கள் எந்த புலநுணர்வில் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள்? அவர்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்வது உடலாலா அல்லது புலநுணர்வாலா. ஆனால் உங்கள் புலன்களை எத்தனை நேரத்திற்கு உங்களால் திருப்திப்படுத்த முடியும்? உங்கள் ஆர்வம் வேறு: புலநுணர்வல்ல. உங்கள் ஆர்வம் யாதெனில் நீங்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆக அது பகவத் கீதையில் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் இந்த ஆன்மா."
|