"இந்த பௌதிக உலகில் நிரந்திரமாக இருப்பதற்காக நாம் பல திட்டங்களை செய்கிறோம், ஆனால் துரதிருஷ்டமாக நாம் எதிர் விளைவுகளை சந்திக்கின்றோம். இங்கு ஒரு வைஷ்ணவ கவிஞரால் பாடப்பட்ட அருமையான பாடல் ஒன்று உள்ளது. அவர் கூறுகிறார், ஸுகேரே லகிய ஏ பரோ பகினு அனலே புரிஅ கேலா: "நான் இந்த வீட்டை சந்தோஷமாக வாழ நிறுவினேன். துரதிருஷ்டமாக, அது தீக்கு இரையாகிவிட்டது, ஆகையால் அனைத்தும் முடிந்துவிட்டது." இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த பௌதிக உலகில் வசதியாக, அமைதியாக, நிரந்தரமாக வாழ்வதற்காக நாம் பல திட்டங்களை செய்கிறோம், - ஆனால் அது சாத்தியமல்ல. மக்கள் இதை புரிந்துக் கொள்வதில்லை. அவர்கள் பார்க்கிறார்கள், அனுபவிக்கிறார்கள், சாஸ்திரத்தில்; வேதங்களில் நாம் போதனைகளை பெறுகிறோம் அதாவது எதுவும் அழிந்துபோகாமல் இருக்காது. இந்த பௌதிக உலகில் அனைத்தும் அழிவைக்காணும். மேலும் நாம் உண்மையிலேயே பார்க்கிறோம் அதாவது அழிவின் பிரதிநிதி எப்போழுதும் தயாராக இருக்கிறார்கள்."
|