TA/670327 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கவனமாக கேட்டால், தியானநிலை ஏற்பட வேண்டும். அடுத்து பூஜை. 'பூஜை' என்றால் வழிபாடு. இந்த யுகத்திற்கான எளிமையான வழிபாட்டு முறை நாம் செய்வது போன்றது- உச்சாடனம், கேட்டல், சில பழங்களையும் மலர்களையும் நிவேதனம் செய்து இந்த தீபத்தை காட்டுதல். இது எளிமையானது, அவ்வளவுதான். வேத இலக்கியங்களின் படி அறுபத்து நான்கு வகையான உபசாரங்கள் வழிபாட்டுக்காக உண்டு. அது இந்த யுகத்திற்கு சாத்தியமானதன்று. எனவே இது போதுமானது. இந்த வழிமுறை பூரண சத்தியத்தை புரிந்து கொள்ள வைக்கும். ஏகேன மனஸா, ஒருநிலைப்படுத்தப்பட்ட அவதானத்துடன், வேறெந்த விடயத்தின் மீதும் கவனத்தை திசை திருப்பாமல் இருப்பது எனும் இக்கொள்கையை பின்பற்றுங்கள். கேட்கவும், உச்சாடனம் செய்யவும், நினைக்கவும், வழிபடவும்... எனும் இந்த ஏகேன மனஸா கொள்கையைை பின்பற்றினால், இது எளிய வழிமுறை. இதுவே ஸ்ரீமத் பாகவதத்தின் தீர்ப்பாகும்."
670327 - சொற்பொழிவு SB 01.02.14-16 - சான் பிரான்சிஸ்கோ