"என்னுடைய நிகழ்கால செயல் இன்னொரு படத்தை முன்னோக்கி உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எப்படியெனில் என்னுடைய கடந்த கால செயல்கள் மூலம் இந்த உடலை உருவாக்கிக் கொண்டது போல. என்னுடைய நிகழ்கால செயல்கள் மூலம் என்னுடைய அடுத்த உடலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஆத்மாவின் உடல் மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் கிருஷ்ண உணர்வு வழிமுறையை ஏற்றுக் கொண்டால், கர்ம-க்ரந்தி-நிபந்தனம் சிந்தந்தி. இந்த முடிச்சு, ஒன்றன்பின் ஒன்றாக வெட்டி அகற்றப்படும். அது நன்றாக இருக்கிறதென்றால்... பாகவதம் கூறுகிறது, யத்-அனுத்யாஸினா. வெறுமனே இந்த செய்முறையை, அனுத்யாஸினா யுக்தா: பின்பற்றுவதால், கர்ம-பந்த-நிபந்தநம், எமது செயல்களின் விளைவுகளின் சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக சிந்தந்தி, வெட்டி அகற்றப்படுகின்றன. கோவிதா꞉, ஒரு புத்திசாலி மனிதனொருவன், தஸ்ய கோ ந குர்யாத் கதா-ரதிம். ஏன் ஒரு புத்திசாலி மனிதன் தன்னை கிருஷ்ணரைப் பற்றிய தலைப்புகளை கேட்பதில் ஈடுபடுத்திக் கொள்ள கூடாது? இதில் ஏதாவது சிரமம் உண்டா?"
|