"கிருஷ்ணர் கூறுகிறார், அபி சேத் ஸு-து₃ராசார꞉. நியமத்துக்கு உட்படாத சில கெட்ட பழக்கங்களை சில பக்தர்களிடம் கண்டாலும், அவர் ஒரு பக்தர் என்பதால், அவர் கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபட்டிருப்பதால், அவர் ஒரு சாது ஆவார். அவரது முற்பிறவி காரணமாக சில கெட்ட பழக்கங்களை அவர் கொண்டிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் அவை நின்றுவிடும். காரணம் அவர் கிருஷ்ண உணர்வினை ஏற்றுக் கொண்டுள்ளார், எல்லா முட்டாள்தனமான பழக்கங்களும் நின்றுவிடும். சுவிட்ச் ஆனது ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கிருஷ்ணரிடம் வந்தவுடன் அவரை கெட்ட பழக்கங்களுக்கு தூண்டிய அந்த சுவிட்ச் உடனே ஆஃப் ஆகிறது. ஹீட்டரை (மின்சார வெப்பமாக்கி) போன்று. சுவிட்சை ஆஃப் செய்தாலும், அது இன்னமும் வெப்பமாகவே இருக்கும். ஆனால் சிறிது சிறிதாக வெப்பநிலை கீழிறங்கி குளிர்ச்சியடைகிறது.
|