"ஆக ஒரு கிருஷ்ணர் மேலும் ஒரு கோபி, அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காட்சி, அந்த காட்சி காண... பிறகு ராஸ நடனம் நிறுத்தப்படுகிறது, மேலும் கிருஷ்ணர் கோபிகளுடன் உரையாடுவார். கிருஷ்ணர் கோபிகளிடம் கூறுவார் "என் அன்பான தோழிகளே, இந்த அமைதியான நடுஇரவில் நீங்கள் என்னிடம் வந்திருக்கிறீர்கள். இது சரியல்ல, ஏனேன்றால் தன் கணவனை திருப்திபடுத்துவதுதான் அனைத்து மனைவிமார்களின் கடமை. அகையால் உங்கள் கணவன், அமைதியான இரவில் வந்ததிற்கு உங்களைப் பற்றி என்ன நினைப்பார்? ஒரு பெண்ணின் கடமை தன் கண்வனை விட்டுக்கொடுக்காமல் இருப்பதே, அவன் சிறந்த குணமற்றவன் அல்லது அவன் துரதிஷ்டசாலியாக, அல்லது வயோதிகனாக, அல்லது நோயாளியாக இருந்தாலும். இருப்பினும், கண்வன் மனைவியால் வணங்கப்படுகிறான்."
|