"தர்மாவிருத்தோ காமோ (அ)ஸ்மி அஹம் (BG 7.11): "தர்மத்தினால் அங்கீகரிக்கப்பட்ட காமமும் நானே." அது கிருஷ்ணர். காமத்தை நிறைவேற்றிக் கொள்ளல்- அதன் அர்த்தம் பூனையைப் போன்று நாமும் சுதந்திரமானவர்கள் என்பதல்ல. இது என்ன சுதந்திரம்? அந்த சுதந்திரம் நாய்களுக்கும் பூனைகளுக்கும் உண்டு. வீதியில் பாலுறவில் ஈடுபடும் அளவிற்கு அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. உங்களுக்கு அவ்வளவு சுதந்திரம் இல்லை. ஒரு தங்குமிடத்தை தேடிக்கொள்ள வேண்டும். இந்த சுதந்திரம் வேண்டுமா? இது சுதந்திரமே இல்லை. இது நரகத்திற்கு செல்வதாகும். இது சுதந்திரமன்று. காம வாழ்வு வேண்டுமெனில், ஒரு கிரகஸ்தராக ஆகுங்கள் என்று வேத சாஸ்திரங்கள் கட்டளையிடுகின்றன. நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள், பின்னர் பொறுப்புக்கள் மிகவும் வந்துவிடும். இந்த காம வாழ்வு சலுகை அனுமதிக்கப்பட்டுள்ளது, இதனால் மற்றவர்களுக்கு சேவை செய்தாக வேண்டும். அதுவே ஏற்படும் பொறுப்பு."
|