"எனவே உங்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் உள்ளது. முழுமுதற்கடவுளின் அங்கமாகவும் பகுதியாகவும் இருப்பதால், உச்சத்திற்கு முழுமுதற்கடவுளுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆகவே சுதந்திரத்தின் பண்பு உங்களிடமும் உள்ளது. தங்கத்தைப் போலவே: தங்கத்தின் துகள் தங்கமாக இருப்பதைப் போல. அதேபோல், நீங்கள் கிருஷ்ணரின் துகள்கள்களாக இருபதனால், கிருஷ்ணரின் அனைத்து குணங்களையும் மிக நுண்ணிய அளவில் பெற்றிருக்கிறீர்கள், ஆனால் எல்லா குணங்களையும் தான் பெற்றுள்ளீர்கள். கிருஷ்ணரைப் போலவே ..., கடவுள் முழுமையாக சுதந்திரமுடையவர், எனவே நீங்களும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்கள். உங்கள் ஆவல் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் நீங்கள் கட்டுண்டவர்கள், நீங்கள் கட்டுண்டவர்கள். உங்கள் ஆன்மீக வாழ்க்கையை மீண்டும் பெறும்போது, நீங்களும் கிருஷ்ணரைப் போலவே சுதந்திரமாகி விடுவீர்கள். "
|