"நாம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். பகவத்-கீதே நம் உடலமைப்புக்குரிய நிலைப்பாட்டை மிக நேர்த்தியாக விளக்குகிறது: இந்த்ரியாணி பராண்யாஹு: ( BG 3.42). இந்திரியாணி. இந்திரியாணி என்றால் புலன்கள். பௌதீக வாழ்க்கை என்பது என்ன? நான் ஏன் இந்த உலகில் இருக்கிறேன், எதற்காக? என் புலன் இன்பத்திற்காகவா என்பது போல. அவ்வளவுதான். இதுவே உடலமைப்புக்குரிய முதல் நிலைப்பாடு. ஒவ்வொரு மிருகமும், ஒவ்வொரு உயிரினமும், சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும், பாதுகாப்பதற்கும், இனச்சேர்க்கை செய்வதற்கும் மும்முரமாக இருக்கின்றன. அதாவது உடல் தேவைகள் , புலன்கள். முதலாவதாக, நமது வாழ்க்கைக்கான முக்கிய காரணி புலன்கள். ஆகவே பகவத்-கீதை கூறுகிறது, இந்த்ரியாணி பராண்யாஹு: எனது பௌதீக வாழ்க்கை என்பதே புலனின்பம். அவ்வளவுதான். "
|