"இந்த வாழ்க்கையின் பூரணத்துவம் யாதேனில் தன்னணுர்தல், நான் யார். இதுதான் ஆரம்பம். நான் ஏன் கஷ்டப்படுகிறேன்? இந்த வேதனைக்கு ஏதாகிலும் தீர்வு உள்ளதா? மேலும் பல விஷயங்கள் உள்ளன. இந்த கேள்விகள் தோன்றவேண்டும். ஒரு மனிதன் இந்த கேள்விகளுக்கு விழிப்புடன் இருக்கவில்லை என்றால், அதாவது "நான் யார்? நான் ஏன் கஷ்டப்படுகிறேன்? நான் எங்கிருந்து வந்தேன், மேலும் நான் எங்கு செல்ல வேண்டும்?" பிறகு அவன் விலங்கின் தரத்தில் இருப்பதாக கருதப்படுகிறான். ஏனென்றால் மிருகங்கள், இத்தகைய கேள்விகள் கேட்பதில்லை. மனித இனத்தில்தான் இத்தகைய கேள்விகள் இருக்கின்றன."
|