"ஆத்மா கிருஷ்ணரின் உற்பத்தி. எனவே முடிவாக, அவரே நம்முடைய பாசத்துக்குரிய நெருங்கிய நண்பன். யார் மீதாவது அன்பு செலுத்த முயற்சிக்கிறோம். அந்த நபர் கிருஷ்ணருடைய திரிபுபட்ட பிம்பம் ஆவார். ஒரு குழந்தையைப் போல, குழந்தை தாயின் முலையை தேடி அலைந்து கொண்டு அழுகிறது. யாராவது குழந்தை தூங்கினாலும் அது திருப்தி அடைவதில்லை. ஏனென்றால் "எனக்கு என் தாய் வேண்டும்" என்பதை வெளிப்படுத்திக் கொள்ள அதற்கு தெரியாது. இதேபோல் நாமும் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்துவதற்கு திரிபுபட்ட வழியில் முயன்று வருகிறோம். ஆனால் கிருஷ்ணரைப் பற்றி எந்தவித தகவலும் நம்மிடம் இல்லை என்பதால், கிருஷ்ணருடனான நம்முடைய உறவை மறந்து விட்டதால், இந்த உடல் அந்த உடல் என அவற்றின் மீது அன்பு செலுத்துகிறோம்."
|