"மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (BG 18.65). கிருஷ்ணர் கூறுகிறார் "என்னைப் பற்றியே எப்போதும் உன் மனதில் நினைத்துக் கொண்டிரு." மன்-மனா. மனா என்றால் மனம். மன்-மனா பவ மத்-பக்தோ, "மேலும் எனது பக்தனாகு. என்னை உனது எதிரியாக எண்ண வேண்டாம்." சில சமயங்களில் கிருஷ்ணர் எதிரியாக நினைக்கப்படுகிறார். அத்தகைய எண்ணம் உபயோகமற்றது. உபயோகமற்றதன்று. நிச்சயமாக கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்த எதிரிகள் முக்தி அடைந்தனர். ஏனென்றால், எப்படியோ கிருஷ்ணரை பற்றி நினைத்தார்கள்தானே. ஆனால், அவ்வழியில் அன்று."
|