"அனைத்து வேலையும் யாதெனில் கிருஷ்ணரிடம் எவ்வாறு ஈடுபாடு கொள்வது என்பதுதான். அந்த ஈடுபாட்டை ஒரு நொடியில் பெற்றுவிட்டீர்கள் என்றால், ஒ, பிறகு வேலை ஒரு நொடியில் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் அந்த ஈபாடு பல வருடங்களுக்கு ஏற்படவில்லை என்றால், அது மிகவும் கஷ்டம். ஒரே சோதனை நீங்கள் எவ்வாறு கிருஷ்ணர் மேல் உங்கள் ஈடுபாட்டை ஏற்படுத்தினீர்கள். நீங்கள் அதைப்பற்றி அக்கறையுடன் இருக்கிறீர்களா, அது சில நொடிகளில் ஏற்படும். நீங்கள் அதைப்பற்றி அக்கறையுடன் இல்லையெனில், அது பல ஜென்மத்திலும் நிறைவேறாது. ஆகவே அது உங்களுடைய அக்கறையை பொறுத்துள்ளது. கிருஷ்ணர் பௌதிக விஷயம் அல்ல அதாவது அதற்கு தேவைப்படுவது சில குறிப்பிட்ட நேரம் அல்லது... அல்ல. ஒரே விஷயம் யாதெனில் மய்ய் ஆஸக்த-மனா꞉ (ப.கீ. 7.1). உங்கள் முழு ஈடுபாட்டையும் கிருஷ்ணருக்காக பயன்படுத்த வேண்டும்."
|