"சுகதேவ் கோஸ்வாமீ கூறுகிறார், ததஷ் ச அனுதினம். அனுதினம் என்றால் 'நாட்கள் கடந்துச் செல்லும்.' பிறகு அதன் அறிகுறி என்னவாக இருக்கும்? இப்பொழுது, நங்க்ஷ்யத்ய். நங்க்ஷ்யத்ய் என்றால் படிப்டியாக குறைகறது, மறைந்துவிடும். எது குறைகறது? இப்பொழுது, தர்ம, மதம் சார்ந்த; சத்தியம், உண்மை; ஷௌசம், சுத்தப்பத்தம்; க்ஷமா, மன்னித்தல்; தயா, கருணை; ஆயு꞉, வாழ்க்கையின் நீடிக்கும் காலம்; பல, பலம்; மேலும் ஸ்ம்ருʼதி, ஞாபகம். இந்த எட்டும், தெரிந்துக் கொள்ள முயலுங்கள். முதல் விஷயம் மதம். கலியுகம் செயல்புரிய தொடங்கியதும், மக்கள் அதிகமாக மதம் சார்பற்றவர்களாக மாறுவார்கள். மேலும் அதிகமான பொய்யன்களாக மாறுவார்கள். அவர்கள் உண்மை பேசுவதை மறந்துவிடுவார்கள். ஷௌசம், சுத்தப்பத்தம், அதுவும் குறைந்துவிடும்."
|