"உண்மையில், கடவுள், நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு அந்த உறவின் அடிப்படையில் செயல்பட்டு வாழ்வின் லட்சியத்தை அடைவது ஆகியவையே தர்மம் எனப்படும். சம்பந்த, அபிதேக, பிரயோஜனம் இவை மூன்றுமே தர்மம் எனப்படும். வேதங்கள் முழுவதும் 3 நிலைகளாக பிரிக்கப்படுகிறது. சம்பந்தம்: நமக்கும் கடவுளுக்கும் ஆன தொடர்பு என்ன? அதுவே சம்மந்தம் எனப்படும். அதன்பின் அபிதேயா, அந்த உறவின் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும் அதுவே அபிதேய. ஏன் செயல்பட வேண்டும்? ஏனெனில் நமக்கு வாழ்க்கையில் லட்சியம் இருக்கின்றது அதனை அடைய வேண்டும். அந்த லட்சியம் என்ன? அந்த லட்சியம் தானம் வீடுபேறு அடைவது. அதுவே வாழ்வின் குறிக்கோள்."
|