TA/Prabhupada 0003 - ஆடவனும் பெண்ணே



Lecture on SB 6.1.64-65 -- Vrndavana, September 1, 1975

தாம் ஏவ தோஷயாம் ஆஸ
பித்ருயேணார்த்தேன யாவதா
க்ராம்யைர் மனோரமை: காமை:
ப்ரஸீதேத யதா ததா
(ஸ்ரீமத் பாகவதம் 6.1.64)

ஒரு பெண்ணை பார்த்தப்பின், அவன் இருபத்து நான்கு மணிநேரமும் அவளைப் பற்றிய காமம் நிறைந்த நினைப்பிலேயே இருந்தான். காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத-ஞானா: (பகவத்-கீதை 7.20). ஒருவன் காமத்திற்கு அடிமையாகும் பொழுது, தன்னிடம் இருக்கும் அறிவுத்திறன் அனைத்தையும் இழக்கிறான். உலகம் முழுவதும் இந்த காம இச்சைகளின் அடிப்படையில் இயங்குகிறது. இதுதான் பௌதிக உலகம். நான் காம வசப்பட்டு இருக்கிறேன், நீங்கள் காம வசப்பட்டு இருக்கிறீர்கள், அனைவருமே, அதனால் எனது விருப்பங்கள் நிறைவேறாதபோது, உங்களது விருப்பங்கள் நிறைவேறாதபோது, நான் உங்கள் விரோதியாகிறேன், நீங்கள் என் விரோதியாகுறீர்கள். நீங்கள் நல்ல முன்னேற்றம் அடைவதைக் கண்டு எனக்கு பொறாமை ஏற்படும். நான் நல்ல முன்னேற்றம் அடைவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதான் பெளதிக உலகம், பொறாமை, காம இச்சைகள், காம, க்ரோத, லோப, மோஹ, மாத்ஸ்ர்ய. இதுவே பெளதிக உலகின் அடிப்படையாகும்.

அதனால் அவன் அப்படி... அவன் பிராம்மணனாக பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான். ஸம, தம, ஆனால் முன்னேற்றம் தடைபட்டது ஒரு பெண்ணின் மீது பற்று கொண்டதனால். அக்காரணத்தினால், வேத பண்பாட்டைப் பொறுத்தவரை, பெண் என்பவள், ஆன்மீக முன்னேற்றத்திற்கு இடையூறாக கருதப்படுகிறாள். இந்த நாகரீகத்தின் முழு அஸ்திவாரமே எவ்வாறு இதைத் தவிர்ப்பது... பெண்... பெண் மட்டும் தான் பெண் என்று நீங்கள் நினைக்காதீர்கள். ஆணும் ஒரு பெண்தான். பெண்ணின் சகவாசம் மட்டுமே கண்டிக்கப்பட்டது, ஆண் சகவாசம் அல்ல என்று நினைக்ககூடாது. பெண் என்ற வார்த்தைக்கு அனுபவிக்கப்படுகிறவர் எனப் பொருள், ஆண் என்றால் அனுபவிப்பாளர் எனப் பொருள். ஆக, இந்த மனப்பான்மை தான் கண்டிக்கப்படுகிறது. நான் ஒரு பெண்ணை என் சுகத்திற்காக பார்த்தால், நான் ஒரு ஆணாக என்னை எண்ணுகிறேன். அதுபோலவே ஒரு பெண் ஒரு ஆணை தன் சுகத்திற்காக நாடினால் அவளும் ஒரு ஆண் (மனப்பான்மை உடையவள்) தான். பெண் என்றால் அனுபவிக்கப்படுகிறவர் எனப் பொருள், மற்றும் ஆண் என்றால் அனுபவிப்பவர் எனப் பொருள். ஆக யாரொருவருக்கு இன்பம் அனுபவிக்கும் மனப்பான்மை இருக்கிறதோ, அவர் ஆண் எனக் கருதப்படுகிறார். ஆக இங்கு இரு பாலினங்களும் நாடுவது... எல்லோரும் திட்டமிடுகிறார்கள் "நான் எப்படி அனுபவிக்கலாம்?" ஆகையால் செயற்கையாக அவன் 'புருஷ' (சமஸ்கிருதம்). வாஸ்தவத்தில் நாம் எல்லோரும் ப்ரக்ரிதி, ஜீவ, பெண்ணாக இருக்கட்டும் ஆணாக இருக்கட்டும். இது வெளித்தோற்றமே.