TA/Prabhupada 0008 - "நான் ஒவ்வொருவருக்கும் தந்தை" என்று கிருஷ்ணர் உரிமைக்கோருகிறார்
Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973
இந்தியாவில் குறைந்தபட்சம் மகாத்மாக்கள், துறவிகள், ஞானிகள் ஆச்சார்யர்கள், ஆன்மீக அறிவை நுட்பத்திறன் வாய்ந்த நிறைவான முறையில் பயில்வித்தார்கள், ஆனால் நாம் அதன் நன்மையை அறிந்து பயன்படுத்திக் கொள்வதில்லை. அத்தகைய சாஸ்திரங்களும் அவற்றின் வழிகாட்டுதலும் இந்தியர்கள், இந்துக்கள், பிராமணர்களுக்கு மட்டும் என எண்ணுவது தவறு. இவை ஒவ்வொருவருக்கும் உரியவை. ஏனென்றால் கிருஷ்ணர் கூறுகிறார் (பகவத் கீதை 14.4) ஸர்வ யோனிஷு கெளந்தேய ஸம்பவந்தி மூர்தய: ய: தாஸாம் மஹத் ப்ரஹ்ம யோனிர் அஹம் பீஜ-ப்ரத: பிதா "நான்தான் அனைவருக்கும் தந்தை" என கிருஷ்ணர் உரிமைக்கோருகிறார். ஆகையினால் நமக்கு அமைதியும் சந்தோஷமும் ஏற்படுத்த மிகவும் அக்கறையுடையவராக இருக்கிறார். தன் மகன் நல்ல ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதை பார்க்க விரும்பும் ஒரு தந்தையைப் போல தான். கிருஷ்ணரும் நாம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கையை அமைக்க விரும்புகிறார். ஆகையினால் அவர் சில சமயங்களில் இந்த உலகத்திற்கு வருகிறார். (பகவத் கீதை 4.7) யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி. இதுவே கிருஷ்ணரின் வருகையின் குறிக்கொள். ஆகையால் கிருஷ்ணருக்கு சேவை செய்பவர்களும், அவருடைய பக்தர்களும், கிருஷ்ணரின் சமய இயக்கத்தில் சேரவேண்டும். கிருஷ்ணரின் இயக்கத்தைப் ஏற்று செயற்படவேண்டும். அதுவே சைதன்ய மஹாபிரபுவின் கருத்துரு. ஆமார அக்ஞாய குரு ஹநா தார ஏய் தேஷ யாரெ தேக தாரே கஹ, க்ருஷ்ண உபதேஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128) க்ருஷ்ண-உபதேஷ. வெறும் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருப்பதை பிரசாரம் செய்யுங்கள். அதுவே ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். சைதன்ய மஹாபிரபு கூருகிறார். பாரத-பூமிதெ மனுஷ்ய ஜன்ம ஹைல யார ஜன்ம ஸார்தக கரி பர-உபகார. (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 9.41) ஆக பர-உபகாரம் என்பது இந்தியர்களின் கடமை. இந்தியர்களின் கடமை மற்றோரை பயன்படுத்தி சுரண்டுவது அல்ல. அது இந்தியர்களின் வேலையல்ல. இந்திய வரலாறு அனைத்தும் பர-உபகாரம் நிறைந்தது. முற்காலத்தில், உலகத்தின் பல பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொள்ள வருவார்கள். ஏசு கிறிஸ்து கூட அங்கு சென்றார். சீனாவிலிருந்தும் வேறு பல நாடுகளிலிருந்தும், சென்றதாக வரலாறு கூறுகிறது. நமக்குச் சொந்தமானதை நாமே மறந்துவிடுகின்றோம். நாம் எவ்வளவு அக்கரையற்றவர்கள். இவ்வளவு மகத்துவமான இயக்கம், கிருஷ்ண உணர்வு, உலகம் எங்கும் இயங்கிக்கொண்டு இருக்கிறது, ஆனால் நம் இந்தியர்கள், நம் அரசாங்கத்தினர் இதன் அருமை புரியாமல் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளவதில்லை. அது நமது துரதிருஷ்டம். ஆனால் இது சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கைக் இலக்கு. அவர் கூறுகிறார், எந்த இந்தியரும், பாரத பூமிதெ மனுஷ்ய ஜன்ம, மனிதனாக பிறந்திருந்தால், வேத இலக்கியத்தின் நன்மைகளை மேற்கொண்டு, தன் வாழ்க்கையை பக்குவப்படுத்தி மற்றும் அந்த அறிவை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். அதுதான் பர-உபகார. ஆக இந்தியர்கள் இதைச் செய்ய முடியும். மக்கள் இதை உண்மையிலேயே பாராட்டுகிறார்கள். இந்த ஐரொப்பிய, அமெரிக்க இளைஞர்கள், அவர்கள் பாராட்டுகிறார்கள். எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த... இந்த இயக்கத்தினால் அவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள் என்று தினமும் எனக்கு டஜன் கணக்கில் கடிதங்கள் கிடைக்கின்றன. நடைமுறையில் அதுதான் உண்மை. இது உயிரிழந்த மனிதனுக்கு மறுபடியும் உயிர் ஊட்டுவதைப் பொல் தான். ஆதலால் குறிப்பாக நான் இந்தியர்களையும், மேன்மைக்குறிய தங்களையும் கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்து, உங்கள் வாழ்க்கையையும் மற்றவர்கள் வாழ்க்கையையும் வெற்றியடையச் செய்ய முயலுங்கள். அதுவே கிருஷ்ணரின் நோக்கம், அவரது வருகைக்கான காரணம். மிக்க நன்றி.