TA/Prabhupada 0013 - இருபத்து-நான்கு மணிநேர ஈடுபாடு



Lecture on BG 2.49-51 -- New York, April 5, 1966

யோக: கர்மஸு கெளஷலம். கெளஷலம் என்றால் சிறப்பறிவுத் திறம். எடுத்துக்காட்டாக இரண்டு வேலை தெரிந்த நபர்களை எடுத்துக்கொள்வோம். ஒருவன் நல்ல கைதேர்ந்தவனாக இருப்பான்; மற்றொருவனுக்கு அந்த அளவுக்கு திறமை இருக்காது. இயந்திரங்களை இயக்குபவர்களும் அப்படித்தான். இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்படலாம். திறமை குறைவானவன், அதை சரிகட்ட ஒரு நாள் முழுவதும் முயற்சி செய்வான், ஆனால் கைதேர்ந்தவன் வந்து பார்த்த உடனேயே கோளாறு என்ன என்பதை புரிந்துகொள்வான். இந்த பக்கம், அந்த பக்கம் ஏதோ கம்பியை கோர்ப்பான், இயந்திரம் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பித்து விடும். ஹ்ரூம், ஹ்ரூம், ஹ்ரூம், ஹ்ரூம், ஹ்ரூம், ஹ்ரூம். புரிகிறதா ? சில சமயங்களில் நம்முடைய இந்த டேப் ரெக்கார்டர் சரியாக வேலை செய்யாது, நின்றுவிடும், பிறகு திரு கார்ள் அவர்களோ அல்லது வேறு யாராவதோ வந்து இதைப் சரிகட்டுவார்கள். ஆக எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு சிறப்பறிவு தேவைப்படுகிறது. ஆக கர்ம, கர்ம என்றால் செயல். நாம் செயல்புரிந்து தான் ஆகவேண்டும். வேலை செய்யாமல் நம்முடைய இந்த உடம்பும் ஆன்மாவும் கூட சேர்ந்து இருக்கமுடியாது. இது ஒரு தவறான கருத்து; அதாவது ஒருவன்..., ஆன்மீக உணர்வை அடைவதற்கு ஒருவன் செயல்புரிவதை நிறுத்தியாகவேண்டும். அப்படி கிடையாது. அவன் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும். ஆன்மீக உணர்வில் அக்கறை இல்லாதவர்கள், அவரது வேலையில் எட்டு மணி நேரம் மட்டுமே ஈடுபட்டிருக்கலாம், ஆனால் ஆன்மீக உணர்வை அடைவதில் ஈடுபட்டிருப்பவர்கள், ஓ, அவர்கள் இருபத்தி-நான்கு மணி நேரமும் ஈடுபட்டிருப்பார்கள். அதுதான் வித்தியாசம். அத்துடன் அந்த வித்தியாசம் என்னவென்றால்... நாம் பார்க்கிறோம், பெளதீக தளத்தில், வாழ்வின் உடலளவிலுள்ள உணர்வில், வெறும் எட்டு மணி நேரம் வேலை செய்தாலே உங்களுக்கு களைப்பாக இருக்கும். ஆனால் ஆன்மீக குறிக்கோளுடன், நீங்கள் இருபத்தி-நான்கு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால்... துரதிருஷ்டவசமாக, நம் கைவசம் இருபத்தி-நான்கு மணி நேரம் தான் உள்ளது. அப்படி செயல்புரிந்தும் நீங்கள் களைப்படைய மாட்டீர்கள். நான் நிஜமாகத் தான் சொல்கிறேன். இது என்னுடைய சொந்த நடைமுறை அனுபவம். இது என்னுடைய சொந்த நடைமுறை அனுபவம். இதோ நான் இங்கு எப்பொழுதும் ஏதோ செய்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், ஏதோ ஒன்று படித்துக் கொண்டோ எழுதிக்கொண்டோ இருக்கிறேன், இருபத்தி-நான்கு மணி நேரமும். எனக்கு பசி எடுக்கும் பொழுது, நான் ஏதாவது உண்பேன். மற்றும் எனக்குத் தூக்கம் வரும்பொழுது, நான் படுக்கப் போய்விடுவேன். மற்றபடி எப்பொழுதும் நான் சோர்வு அடைந்ததில்லை. நான் இப்படிச் செய்கிறேனா இல்லையா என்று நீங்கள் திரு பால் அவர்களிடம் கேட்கலாம். நான் இவ்வாறு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் சோர்வு அடைவதில்லை. அதுபோலவே, ஒருவனுக்கு இந்த ஆன்மீக உணர்ச்சி ஏற்பட்டால் அவன் களைப்பை உணரமாட்டான்... அதற்கு மாறாக, அவனுக்கு உறக்கம் வெறுப்பை தரும், தூக்கம் வரும்போது, "ஓ, இந்த தூக்கம் எனக்கு சரியான தொல்லையாக இருக்கிறதே." பார்த்தீர்களா? தூங்கும் நேரத்தைக் குறைக்க நினைப்பான். பிறகு... நாம் வழிபாடு செய்யும் பொழுது, வந்தே ரூப-ஸநாதனௌ ரகு-யுகெள ஸ்ரீ ஜீவ-கோபாலகெள. இந்த ஆறு கோஸவாமிகள், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால், இந்த விஞ்ஞானத்தை கலந்துறையாட நியமிக்கப்பட்டவர்கள். இதைப் பற்றி இவர்கள் ஏராளமான இலக்கியங்களை எழுதி இருக்கிறார்கள். பார்த்தீர்களா? இதை கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இவர்கள் தினசரி தூங்கியது வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டும்தான், அதற்கு மேல் அல்ல. அதையும் சில சமயங்களில் அவர்கள் தவிர்த்துவிடுவார்கள்.