TA/Prabhupada 0028 - புத்தரும் இறைவனாவார்

From Vanipedia


புத்தரும் இறைவனாவார்
- Prabhupāda 0028


Lecture on Sri Isopanisad, Mantra 1 -- Los Angeles, May 3, 1970

கர்கமுனி: (படித்துக் கொண்டே:) "சைவ உணவு உண்பதால் மட்டுமே, ஒருவன் இயற்கையின் சட்டத்தை மீறிச் செல்வதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளலாம் எனக் கருதுவது தவறானது. காய்கறிகளுக்கும் உயிர் உண்டு. ஓர் உயிர் மற்றொரு உயிருக்கு உணவாகிறது, அதுதான் இயற்கையின் நீதி. சுத்தமான சைவ உணவு உண்பவன் என மார்பு தட்டிக் கொள்ள தேவையில்லை. முழுமுதற் கடவுளின் இருப்பை உணருவது தான் முக்கியம். இறைவனை உணர்ந்தறிவதற்கு மிருகங்களிடம் மேம்பட்ட உணர்வு கிடையாது, ஆனால் மனிதனுக்கு..." பிரபுபாதர்: அதுதான் முக்கியமான கருத்து. எடுத்துக்காட்டாக, பௌத்த மதத்தினர் இருக்கிறார்கள், அவர்களும் சைவ உணவு உண்பவர்கள். பௌத்த சமயத்தினர்களின் கொள்கைப்படி... இக்காலத்தில் அனைத்தும் நிலைகுலைந்துவிட்டது, ஆனால் பகவான் புத்தரின் பிரச்சாரம், குறைந்தபட்சம் இந்த பாதகர்கள் செய்யும் மிருகவதையை நிறுத்தி வைப்பதற்காகத் தான். அஹிம்ஸா பரமொ தர்ம. பகவான் புத்தரின் அவதாரம், ஸ்ரீமத் பாகவதத்திலும் மற்ற பல வேத இலக்கியங்களிலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. சுர-த்விஷாம். அவர் அரக்கர்களை ஏமாற்ற வந்தார். அரக்கர்கள்... அவர் அரக்கர்களை ஏமாற்றும் வகையில் ஒரு திட்டமிட்டார். அவர் எப்படி ஏமாற்றினார்? அரக்கர்கள், இறைவனுக்கு எதிராக நடந்துகொள்வார்கள். அவர்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள். ஆகையால் புத்த பகவான் பிரசாரம் செய்தது என்னவென்றால், "ஆம், இறைவன் இல்லை. ஆனால் நான் என்ன சொல்கிறேனோ அதை நீங்கள் பின்பற்றுங்கள்." "ஆம், ஐய்யா." ஆனால் அவர் கடவுள். இது ஏமாற்றுதல். ஆம். அவர்களுக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஆனால் அவர்கள் புத்தரை நம்புகிறார்கள், மற்றும் புத்தர் கடவுள் ஆவார். கேசவ-த்ருத-புத்த-சரீர ஜய ஜகதீச ஹரே. ஆக அதுதான் அரக்கனுக்கும் பக்தருக்கும் இடையே உள்ள வித்தியாசம். கிருஷ்ணர், கேஷவர், எப்படி இந்த அயோக்கியற்களை ஏமாற்றுகிறார் என்பதை ஒரு பக்தனால் பார்க்கமுடிகிறது. ஒரு பக்தனால் இதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அரக்கர்கள், அவர்கள் நினைக்கிறார்கள், "ஓ, நமக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை." (சிரிப்பு) புரிகிறதா? ஸம்மோஹாய ஸுர-த்விஷாம் (ஸ்ரீமத் பாகவதம் 1.3.24). இதற்கு சரியான சமஸ்கிருத வார்த்தை ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் பார்த்திருப்பீர்கள், இதைப் படித்தவர்கள்: ஸம்மோஹாய, அதாவது ஸுர-த்விஷாம் என்றோரை திசை திருப்புவதற்காக. ஸுர-த்விஷாம் என்றால் வைஷ்ணவர்களுக்காக வெறுப்பு கொண்டவர்கள். நாத்திகர்கள், அரக்கர்கள், அவர்கள் மனதில் எப்பொழுதும் பக்தர்களுக்காக வெறுப்பு இருக்கும். அதுதான் இயற்கையின் சட்டம். நீங்கள் இந்த தந்தையைப் பாருங்கள். தந்தை ஓர் ஐந்து வயது மகனுக்கு எதிரியானார். அவனுடைய குற்றம் என்ன? அவன் ஒரு பக்தன். அவ்வளவுதான். அப்பாவி பையன். அவன் வெறும் ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தால் கவரப்பட்டிருந்தான். அவன் தந்தையே அவன் தீவிர விரோதி ஆனார்: "இந்த பையனைக் கொன்று விடுங்கள்." ஆக ஒரு தந்தையே விரோதியாக மாறும் பொழுது, மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. ஆகையால் நீங்கள் ஒரு பக்தர் ஆனவுடன், இந்த உலகமே உங்களுக்கு விரோதியாகிவிடும் என்பதை நீங்கள் எப்பொழுதும் எதிர்ப்பார்க்கலாம். அவ்வளவுதான். ஆனால் நீங்கள் அவர்களைச் சமாளிக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் இறைவனின் சேவகர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்கள் குறிக்கோள் அவர்களுக்கு அறிவூட்டுவதாகும். ஆகையால் நீங்கள் சும்மா இருக்கக் கூடாது. பகவான் நித்யானந்தரைப் போல், அவர் காயப்பட்டு இருந்தார், இருப்பினும் அவர் ஜகாய்-மாதாய் இருவரையும் மீட்டெடுத்தார். அதுதான் உங்களுடைய கொள்கையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் நாம் ஏமாற்ற வேண்டும், சில நேரங்களில் நாம் காயப்பட நேரிடும் - இப்படி பல விஷயங்கள். மக்கள் எப்படி கிருஷ்ண உணர்வு உள்ளவர்களாக மாறுவார்கள் என்பது தான் ஒரே நோக்கம். அதுதான் நமது குறிக்கோள். எப்படியாவது இந்த அயோக்கியர்கள், இப்படியோ அப்படியோ, ஏதோ ஒரு வழியில் கிருஷ்ண உணர்வு உள்ளவர்களாக மாற்றப்பட வேண்டும்.