TA/Prabhupada 0030 - கிருஷ்ணர் வெறுமனே ஆனந்தம் கொண்டிருக்கிறார்



Sri Isopanisad, Mantra 2-4 -- Los Angeles, May 6, 1970

"முழுமுதற் கடவுள், தன்னுடைய இருப்பிடத்தில் நிலையாக இருந்தாலும், மனதைவிட வேகமானவர். மற்றும் அவர் பயணம் செய்யும் வேகத்திற்கு யாவராலும் ஈடு கொடுக்க முடியாது. சக்தி வாய்ந்த தேவர்களும் அவரை அணுக முடியாது. அவர் ஒரு இடத்தில் இருந்தாலும், காற்று, மழை ஆகியவற்றை வழங்கும் தேவர்களும் அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனர். எந்த திறனானாலும், அவர் அனைவரையும் விஞ்சினவர்." இதுவும் ப்ரம-ஸம்ஹிதாவில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது: கோலோக ஏவ நிவாசதி அகிலாத்ம-பூதஹ (பிரம்ம ஸம்ஹிதா 5.37). கிருஷ்ணர் எப்பொழுதும் கோலோக விருந்தாவனத்தில் நிவாசம் செய்திருந்தாலும், அவர் எதுவும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவர் வெறும் தன்னுடைய துணைமையர்கள், கோபியர்கள், மாட்டிடைய தோழர்கள், அவருடைய தாய், தந்தை, இவர்களின் சகவாசத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். சுதந்திரமாக, முற்றிலும் கவலை இல்லாமல். மேலும் அவரது துணைமையர்கள் ஒரு படி அதிகமாகவே சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால் துணைமையர்கள் ஆபத்தில் இருக்கும் பொழுது, அவர்களை காப்பாற்றுவது எப்படி என்று கிருஷ்ணருக்கு கொஞ்சம் பற்றார்வம் உண்டாகும், ஆனால் அவரது இணைந்தோருக்கு எந்த கவலையும் கிடையாது. "ஒ, நம்முடன் தான் கிருஷ்ணர் இருக்கிறாரே." பாருங்கள். (உள்ளூர்ச் சிரிப்பு) அவரது நெருங்கியோர், அவர்களுக்கு பதட்டமே கிடையாது. எது நடந்தாலும் சரி, நீங்கள் கிருஷ்ணர் புத்தகத்தில் படிப்பீர்கள் - எத்தனையோ ஆபத்துக்கள். சிறுவர்கள், கிருஷ்ணருடன் தினமும் அவர்களுடைய பசுமாடுகள் மற்றும் கன்றுகளுடன் சென்று, காட்டில் யமுனா நதிக் கரையில் விளையாடுவார்கள், பிறகு கம்ஸன் அவர்களை வதம் செய்ய ஏதோ ஒரு அரக்கனை அனுப்புவான். நீங்கள் பார்த்திருப்பீர்கள், நீங்கள் ஓவியங்களிலும் பார்க்கலாம். அவர்கள் இதில் வெறும் மகிழ்ச்சி அடைவார்கள், ஏனென்றால் அவர்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. அதுதான் ஆன்மீக வாழ்க்கை. அவஷ்ய ரக்ஷிபே கிருஷ்ண விஷ்வாஸ பாலன. இந்த உறுதியான நம்பிக்கை, அதாவது "எந்த அபாய நேரத்திலும், கிருஷ்ணர் என்னைக் காப்பாற்றுவார்," இதுதான் சரணாகதி. சரணாகதியில் ஆறு கட்டங்கள் உள்ளன. முதலாவதாக பக்தித் தொண்டுக்கு எது சாதகமோ அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; பக்தித் தொண்டுக்கு சாதகம் இல்லாத எதையும் நாம் நிராகரிக்க வேண்டும். அடுத்தது எனன்வென்றால் பகவானின் இணைந்தோருடன் நாம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். கிருஷ்ணரின் இணைந்தோர் பலர் உள்ளனர். நீங்கள் அவர்களிடம்... அது, ஆனால் அப்படி பாவனை செய்யவேண்டாம். நீங்கள் பக்தியில் முதிர்சியடைந்தபின் கிருஷ்ணருடன் உங்களுடைய உறவு என்ன என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். அதன்பின் நீங்களே அந்த குறிப்பிட்ட நேரிங்கியொருடன் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டால் சரி. அதற்கு அடுத்த கட்டம் நம்பிக்கை, அதாவது "கிருஷ்ணர் எனக்கு பாதுகாப்பு அளிப்பார்." உண்மையில், அவர் எல்லோருக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் உண்மை. ஆனால் மாயையால் வசப்பட்டு, நம் தற்காப்பிற்கு முற்றிலும் நாம் தான் பொறுப்பு, நாமே தான் முற்றிலும் நம் உணவுக்கான ஏற்பாட்டை செயகின்றோம், என நினைக்கின்றோம். இல்லை. அது உண்மையல்ல.