TA/Prabhupada 0031 - என் வாக்குப்படி, என் பயிற்சிப்படி வாழுங்கள்
Room Conversation 1 -- November 10, 1977, Vrndavana
பிரபுபாதர்: இரண்டு விஷயங்கள் உள்ளன: வாழ்வு அல்லது சாவு. அப்போது நான் மரணம் அடைந்தால் அதில் என்ன தவறு? மேலும் மரணம் ஏற்பட்டால் அது இயற்கை தானே.
ஜெயபதாகா: உங்களுக்கு, ஸ்ரீல பிரபுபாதரே, உயிருடன் இருப்பதிலும், இறப்பதிலும் எந்த வித்தியாசமும் இல்லை ஏனென்றால் நீங்கள் உன்னத நிலையில் இருக்கிறீர்கள், ஆனால் எங்களுக்கு, நீங்கள் உங்கள் உடலைவிட்டுப் பிரிந்தால், உங்கள் சகவாசத்தை இழந்து விடுவோமே. ஆக அது எங்களுடைய பெரும் துர்பாக்கியம்.
பிரபுபாதர்: நீங்கள் என் வாக்குப்படி, என் அளித்த பயிற்சிப்படி வாழுங்கள்.