TA/Prabhupada 0033 - மஹாபிரபுவின் பெயர் பதித-பாவன
Morning Walk -- October 4, 1975, Mauritius
புஷ்ட கிருஷ்ண: இன்றைய அரசாங்கங்கள் மிகுந்த அட்டூழியமான, பாவச் செயல்களை ஆதரிக்கின்றன. ஆக பொதுமக்களை சீர்திருத்துவது எப்படி சாத்தியமாகும்?
பிரபுபாதர்: அரசாங்கம் பிழையற்றது என்று சொல்ல விரும்புகிறீர்களா ?
புஷ்ட கிருஷ்ண: இல்லை.
பிரபுபாதர்: பிறகு என்ன? அவர்கள் நீக்கப்படவேண்டும். இன்றைக்கு அரசாங்கம் என்றால் எல்லாம் அயோக்கியர்கள். அவர்கள் துஷ்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அத்துடன் அவர்களும் துஷ்டர்கள். அதுதான் பிரச்சனை. நீங்கள் எங்குச் சென்றாலும், நீங்கள் துஷ்டர்களைத்தான் சந்திப்பீர்கள். மந்த. பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மந்த. நம்மிடமே பல துஷ்டர்கள் இருக்கிறார்கள். சும்மா இந்த அறிக்கையை பாருங்கள். அவர்கள் சீர்திருத்தப்படுவதற்காக வந்திருக்கின்றனர், அவர்களும் அயோக்கியர்கள் தான். அவர்களால் தங்களுடைய கேடு விளைவிக்கும் செயல்களை கைவிட முடியவில்லை. எனவேதான் பொதுவாக, மந்த: "எல்லாம் தீயவை." என அனைவரையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால் நம்மிடத்தில் தீயது அனைத்தும் சீர்திருத்தப்படுகிறது; வெளியே சீர்திருத்தம் எதுவும் கிடையாது. இங்கே அவர்கள் நல்லவர்களாக மாறுவதற்கான நம்பிக்கை இருக்கிறது, ஆனால் வெளியே அந்த நம்பிக்கை கிடையாது. அதுதான் வித்தியாசம். மற்றபடி எல்லோரும் தீயவர்கள் தான். அது யாராக இருந்தாலும் சரி, வித்தியாசம் பார்க்காமல் நீங்கள் சொல்லலாம். மந்தாஹா ஸுமந்த-மதயோ (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). ஆக அரசாங்கம் மட்டும் எப்படி யோக்கியமாக இருக்க முடியும்? இதுவும் ஆரோக்கியமானது தான். மஹாபிரபுவின் பெயர் பதித-பாவன; அவர் எல்லா தீய மனிதர்களையும் மீட்டெடுக்கின்றார். கலியுகத்தில் நல்ல மனிதர்களே கிடையாது - எல்லோரும் அயோக்கியர்கள். அயோக்கியர்களை சமாளிப்பதற்காக நீங்கள் உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்.