TA/Prabhupada 0032 - நான் பேச வேண்டியது எதுவாயினும், என் புத்தகங்களின் வழியாக பேசிவிட்டேன்



Arrival Speech -- May 17, 1977, Vrndavana

பிரபுபாதர்: ஆக என்னால் பேச முடியவில்லை. உடல் மிகவும் க்ஷீணமாக உணர்கிறேன். நான், சண்டிகார் நிகழ்ச்சி மற்றும் மற்ற சில இடங்களுக்கு செல்ல திட்டம் இருந்தது, ஆனால் நான் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன் ஏனென்றால் என் உடல் நலம் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நான் விருந்தாவனத்திற்கு செல்வது சிறந்தது என நினைத்தேன். மரணம் ஏற்பட்டால், அது இங்கேயே நடக்கட்டும். புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் சொல்லவேண்டியதை எல்லாம் என் புத்தகங்களில் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்து, உங்களுடைய பணியை செய்ய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நான் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அது முக்கியமல்ல. கிருஷ்ணர் நித்தியமாக வாழ்கிறார், அதுபோலவே, உயிர்வாழிகளும் நித்தியமாக வாழ்கிறார்கள். ஆனால் கீர்திர் யஸ்ய ஸ ஜீவதி: "இறைவனுக்குச் சேவை செய்தவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்." நீங்கள் கிருஷ்ணருக்கு பணி புரிவது எப்படி என்பதை கற்றவர்கள், மேலும் கிருஷ்ணருடன் நாம் நித்திய வாழ்வு பெறுவோம். நம் வாழ்க்கை நித்தியமானது. ந ஹன்யதே ஹன்யாமானே ஷரீரே (பகவத் கீதை 2.20). இந்த உடம்பின் தற்காலிகமான மறைவு முக்கியமல்ல. உடல் என்றால் மறையத்தான் செய்யும். ததா தேஹான்தரப் ப்ராப்தி: (பகவத் கீதை 2.13). ஆக கிருஷ்ணருக்கு தொண்டு செய்து நிரந்தரமாக வாழுங்கள். மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜேய்!