TA/Prabhupada 0038 - ஞானத்தை வேதத்தின் மூலம் அறிந்துக் கொள்கிறோம்



Lecture on BG 7.1 -- Hong Kong, January 25, 1975

இப்பொழுது, கிருஷ்ணர் அங்கே இருக்கிறார். நம்மிடம் கிருஷ்ணரின் சித்திரம், கிருஷ்ணரின் ஒளிப்படம், கிருஷ்ணரின் கோயில், கிருஷ்ணரின் பலவிதமான தோற்றங்கள் இருக்கின்றன. இவை போலியானதல்ல. கற்பனையில் உருவாக்கியதல்ல. மாயாவாதி தத்துவஞானி நினைப்பது போல், அதாவது "நீங்கள் உங்கள் மனத்தில் கற்பனை செய்யலாம்." இல்லை. இறைவனை கற்பனைச் செய்ய முடியாது. அது மற்றொரு முட்டாள்தனம். இறைவனை எவ்வாறு நீங்கள் கற்பனைச் செய்ய முடியும்? பிறகு இறைவன் உங்கள் கற்பனையின் காரணிப் பொருளாகிவிடுவார். அவர் ஒரு வஸ்து அல்ல. அவர் இறைவன் அல்ல. கற்பனைச் செய்யப்படும் எதுவும் இறைவனாக முடியாது. இறைவன் உங்களுக்கு முன் தோன்றினார், கிருஷ்ணர். அவர் இங்கு இந்த கோளத்திற்கு வந்தார். தடாத்மானம் ஸ்ரீஜாமை அஹம், சம்பவாமி யுகே யுகே. ஆகையால் இறைவனைப் பார்த்தவார்களிடம் இருந்து தகவல்களை சேகரித்துக் கொள்ளுங்கள். தத்வித்தி பரணிபாதேன பரிப்ரஸ்னென ஸேவயா உபதேக்ஷ்யந்திதே ஞானம் ஞானிநஸ் தத்வ-தர்சினஹ (ப.கீ.4.34). தத்வ-தர்சினஹ. நீங்கள் பார்க்கவில்லை என்றால், உங்களால் உண்மையின் தகவலை எப்படி மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்? ஆகையால் இறைவனைக் காண முடிகிறது, சரித்திரத்தில் மட்டும்தான் காண முடியும் என்பதில்லை. சரித்திரத்தில், கிருஷ்ணர் இந்த கோளத்தில் வந்திருந்தது, குருஷேத்திர போரின் சரித்திரமாகும் அங்கேதான் பகவத் கீதை கூறப்பட்டது, அது சரித்திரம் வாய்ந்த உண்மைச் சம்பவம். ஆகையால் நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சரித்திரத்திலும் காணலாம் சாஸ்திரங்கள் வழியும் காணலாம் சாஸ்தர-சக்சுஸா. உதாரணத்திற்கு தற்சமயத்தில், கிருஷ்ணர் உடல் சார்ந்து தோன்றவில்லை, ஆனால் சாஸ்திரங்களின் மூலமாக கிருஷ்ணர் யார் என்பதை புரிந்துக் கொள்கிறோம். ஆகையால் சாஸ்தர-சக்சுஸா. அதாவது நாம் நேரடியாக பார்த்து அறிந்துக்கொள்வது அல்லது சாஸ்திரத்தின் வழியாக அறிந்துக் கொள்கிறோம். நேரடியாக அறிந்துக் கொள்ளக் கூடிய ஆற்றலைவிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்துக் கொள்வது சிறந்தது. ஆகையினால் நம் அறிவு, வேத நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்களின் அறிவு, வேதத்தில் இருந்து பெற்றதாகும். அவர்கள் எந்த விதமான அறிவையும் உற்பத்தி செய்வதில்லை. ஒரு சம்பவம் வேதத்தில் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டால், அது உண்மைச் சம்பவமாகும். ஆகையால் கிருஷ்ணர் வேதத்தின் மூலம் அறிந்துக் கொள்ளப்படுகிறார். வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஹ (ப.கீ.15.15). அது பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி கற்பனைச் செய்ய முடியாது. ஒரு வேளை சில அயோக்கியர்கள் "நான் கற்பனைச் செய்துக் கொண்டிருக்கிறேன்," என்று சொன்னால் அது அயோக்கியத்தனம். நீங்கள் கிருஷ்ணரை வேதத்தின் மூலம்தான் காண முடியும். வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஹ (ப.கீ.15.15). அதுதான் வேதத்தைப் படிப்பதன் நோக்கமாகும். ஆகையினால் அது வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் அறிவு வேதாந்தமாகும்.