TA/Prabhupada 0044 - சேவை என்றால் நீங்கள் எஜமானரின் கட்டளைக்கு கீழ்படிதல்
Lecture on BG 4.1 -- Montreal, August 24, 1968
ஆகையால் அப்படி என்றால் அவர் கிருஷ்ணரின் வழிமுறைகளை பின்பற்றுகிறார். அவ்வளவுதான். அவர் பொருட்படுத்தவில்லை அதாவது "நான் கிருஷ்ணரின் எதிரியாகப்போகிறேன்" என்று. அவருடைய கோட்பாடு யாதெனில் அவர் பின்பற்றுகிறார். "நீங்கள் என் விரோதியாகுங்கள்," என்று கிருஷ்ணர் கூறினால், நாம் அவர் விரோதியாகலாம், அதுதான் பக்தி-யோகா. ஆம். நான் கிருஷ்ணருக்கு திருப்தி அளிப்பேன். எவ்வாறு என்றால் ஒரு முதலாளி வேலையாளிடம் வினவுகிறார், அதாவது "நீ என்னை இங்கே மோது." ஆகையால் அவர் இவ்வாறு மோதுகிறார். ஆகையால் அது சேவையாகும். மற்றவர்கள் பார்வைக்கு, "ஓ, அவர் மோதுகிறார் அத்துடன் அவர் நினைக்கிறார், 'நான் சேவை செய்கிறேன்'? என்ன இது? அவர் மோதிக்கொண்டிருக்கிறார்." ஆனால் எஜமானர் அதை விரும்புகிறார் "நீ என்னை மோது." அதுதான் சேவை. சேவை என்றால் நீங்கள் எஜமானரின் கட்டளைக்கு கீழ்படிதல். அது எவ்விதமாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. பகவான் சைதன்ய வாழ்க்கையில் ஒரு அருமையான உதாரணம் இருந்தது, அதாவது அவருக்கு தனிப்பட்ட உதவியாளராக கோவிந்தா என்பவர் இருந்தார். ஆகையால் பகவான் சைதன்ய பிரசாதம் உண்ட பிறகு, கோவிந்தா உண்பார். ஒரு நாள், பகவான் சைதன்ய பிரசாதம் உண்ட பிறகு, அவர் வாசற்படியில் படுத்தார். என்ன என்று கூறுவது? வாசற்படி? கதவு? வாசற்படி. ஆகையால் கோவிந்தா அவரை தாண்டிச் சென்றார். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, கோவிந்தா வழக்கப்படி அவர் கால்களை பிடித்துவிடுவார். ஆகையால் கோவிந்தா பகவான் சைதன்யாவைத் தாண்டிச் சென்று அவர் கால்களை பிடித்துவிட்டார். பிறகு பகவான் சைதன்ய தூங்கிக் கொண்டிருந்தார், அதன்பின்பு அரை மணி நேரம் கழித்து. அவர் விழித்துக் கொண்ட பொழுது, அவர் பார்த்தார், "கோவிந்தா நீ இன்னும் பிரசாதம் உண்ணவில்லை?" "இல்லை எஜமானே." "ஏன்?" "நான் தங்களை தாண்டிச் செல்ல முடியாது. தாங்கள் இங்கே படுத்து இருந்தீர்கள்." "பிறகு எவ்வாறு நீ வந்தாய்?" "நான் தாண்டி வந்தேன்." "நீ எவ்வாறு முதலில் தாண்டி வந்தாயோ, அதேபோல் ஏன் மறுபடியும் தாண்டவில்லை?" "அது நான் தங்களுக்குச் சேவை செய்ய வந்தேன், ஆனால் இப்பொழுது நான் பிரசாதம் உண்ண செல்வதற்காக தங்களை தாண்டக் கூடாது. அது என் கடமையல்ல. அது எனக்காகவானது. அத்துடன் இது தங்களுக்கானது." ஆகையால் கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்காக நீங்கள் அவருடைய எதிரியாகலாம், நண்பனாகலாம், நீங்கள் எதுவும் ஆகலாம். அதுதான் பக்தி-யோகா. ஏனென்றால் உங்கள் குறிக்கோள் எவ்வாறு கிருஷ்ணரை சந்தோஷப்படுத்துவது. உடனடியாக கருத்து தோன்றுகிறது, உங்களுடைய புலன்களை திருப்திபடுத்த, பிறகு நீங்கள் ஜட உலகிற்கு, உடனே வந்துவிடுவீர்கள். கிருஷ்ண-பஹிர்முக ஹனா போகா வான்ஸா கரெ நிகதா-ஸ்தா மாயா தாரெ ஜாபதியா டாரெ (ப்ரெம-விவர்தா) கிருஷ்ணரை நாம் மறந்த உடனடியாக, நம்முடைய புலன்களின் திருப்திக்காக நாம் செய்ய விரும்பும் காரியங்கள், அதுதான் மாயா. அத்துடன் புலன்களின் திருப்திக்கான காரியங்களை நாம் உடனடியாக கைவிட்டு விட்டு ஆனைத்தையும் கிருஷ்ணருக்காகச் செய்தால், அதுதான் மோட்சம்.