TA/Prabhupada 0045 - ஞானத்தின் குறிக்கோள் ஞேயம் என்று அழைக்கப்படுகிறது



Lecture on BG 13.1-2 -- Paris, August 10, 1973

ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷெத்ரம் க்ஷெத்ரஜ்ஞமேவ ச ஏதத்வேதிதுமிச்சாமி ஞானம் ஞேயம் ச கேசவ (ப.கீ.13.1-2) இது மனித இனத்தின் விசேஷ சலுகை, அதாவது அவர்களால் இயற்கையை உணர்ந்து கொள்ளமுடிகிறது, இந்த பாரபட்சமற்ற சிரிஷ்டி, அதன் இயற்கையை அனுபவிப்பவர், அத்துடன் அவர் முழுமையாக அறிந்துக்கொள்ள ஞானத்தின் குறிக்கோள் என்ன என்பதை, ஞேயம். அங்கே மூன்று பொருள்கள் உள்ளன, ஞேயம், ஞாத, ஞான ஞானத்தின் குறிக்கொள், இதனை அறிந்தவர் ஞாத என்று அழைக்கப்படுகிறார். அத்துடன் ஞானத்தின் குறிக்கொள், ஞேயம் எனப்படுகிறது. அத்துடன் ஒருவர் புரிந்துக்கொள்ள கூடிய செயல்முறை ஞான எனப்படுகிறது, நாம் ஞானத்தைப் பற்றி பேசிய உடனடியாக, அங்கே மூன்று பொருள்கள் இருக்க வேண்டும்: ஞானத்தின் குறிக்கொள், அதை அறிந்துக்கொள்ள முயற்சிப்பவர் அத்துடன் அந்த ஞானத்தின் குறிக்கோளை அடைய காரணமான செயல்முறை. ஆகையால் சிலபேர், எவ்வாறு என்றால் ஜட விஞ்ஞானிகள் போல், அவர்கள் வெறுமனே ப்ரக்ரிதி பற்றி அறிந்துக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு புருஸா யார் என்று தெரியாது. ப்ரக்ரிதி என்றால் அனுபவிக்கப்படுவது, புருஸா என்றால் அனுபவிப்பாளர். உண்மையிலேயே அனுபவிப்பாளர் கிருஷ்ணர். அவர்தான் மூலமான புருஸா. அது அர்ஜுனரால் ஒப்புக்கொள்ளபடும்: புருஸாம் சாஸ்வதாம். "தாங்கள் மூலமான அனுபவிப்பாளர், புருஸாம்." கிருஷ்ணர் அனுபவிப்பாளர், அத்துடன் நாம் எல்லோரும், உயிர்வாழிகள், அத்துடன் ப்ரக்ரிதி, இயற்கை, அனைத்தும், கிருஷ்ணரால் அனுபவிக்கப்படுபவை. அது கிருஷ்ணருடையது. மற்றொரு புருஸா, நாம் உயிர்வாழிகள். நாம் புருஸா அல்ல. நாமும் ப்ரக்ரிதி. நாம் அனுபவிக்கப்படுகிறவர்கள். ஆனால் இந்த ஜட நிலையில், நாம் புருஸாவாக முயற்சிக்கிறோம், அனுபவிப்பாளர். எவ்வாறு என்றால் எப்பொழுது ப்ரக்ரிதி, அல்லது உயிர்வாழிகள், புருஸாவாக விரும்புகிறார்களோ, அதுதான் ஜட நிலைமை. ஒரு பெண் ஒரு ஆடவனாக முயற்சித்தால், அது எவ்வாறு இயற்கைக்கு புறம்பானதோ, அதுபோலவே உயிர்வாழிகள் இயற்கையாகவே அனுபவிக்கப்படுகிறவர்கள். இந்த உதாரணங்கள், நாம் பல முறை கூறியுள்ளோம், அதாவது, இந்த விரல்கள் சில சுவையான உணவுப் பண்டங்களை கைப்பற்றுகிறது, ஆனால் உண்மையிலேயே விரல்கள் அதை அனுபவிப்பவர் அல்ல. விரல்கள் உண்மையான அனுபவிப்பாளருக்கு உதவி செய்யலாம், குறிப்பிடப்பட்ட வயிற்றுக்கு, அது சில சுவையான உணவுப் பொருள்களை எடுத்து வாயினுள் போடுகிறது, அது வயிற்றினுள் சென்றதும், உண்மையான அனுபவிப்பாளர், பிறகு அனைத்தும் ப்ரக்ரிதி, உடலின் அனைத்துப் பகுதியும், உடம்பின் அனைத்து உறுப்புக்களும், திருப்தி அடைவதை உணர்கின்றன. ஆகையால் அனுபவிப்பவர் வயிறுதான், வேறு எந்த உறுப்பும் அல்ல. ஹிதொபனிஸத்தில் ஒரு கதை இருக்கிறது, ஹிதொபதெஸா, இதிலிருந்து எசப்ஸ் நீதிக்கதை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கதை இருந்தது: உதரென்டிரியானாம். உதாரா என்றால் வயிறு, அத்துடன் இன்டிரிய என்றால் உணர்வு. உதரென்டிரியானாம் பற்றி ஒரு கதை உள்ளது. உணர்வுகள், அனைத்து உணர்வுகளும் ஒன்றாக கூடி ஒரு கூட்டததில் சந்தித்தன. அவைகள் சொன்னது அதாவது: "நாம் வேலை செய்யும் உணர்வுகள்." (பக்கத்தில்): அது ஏன் திறந்திருக்கிறது? "நாம் வேலை செய்துக் கொண்டிருக்கிறோம்." கால்கள் சொன்னது: "ஆம், நான், ஒரு நாள் முழுதும், நடந்துக் கொண்டிருக்கிறேன்." கைகள் சொன்னது: "ஆம், நான் நாள் முழுவதும் வேலை செய்துக் கொண்டிருக்கிறேன், எங்கெல்லாம் உடல் சொல்கிறதோ: "நீ இங்கு வந்து உணவை எடு" "சமைப்பதற்கு பொருள்கள் கொண்டுவருவது. நானும் சமைக்கிறேன்." பிறகு கண்கள், அவை சொல்கின்றன அதாவது: "நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்." அனைத்து உறுப்புக்களும், உடலின் உயரத்திற்கு, அவை வேலை நிறுத்தம் செய்கின்றன அதாவது, "நாங்கள் இனிமேல் உண்ணுதலை மட்டும் செய்யும் வயிற்றுக்கு வேலை எதுவும் செய்யப் போவதில்லை. நாம் எல்லோரும் வேலை செய்கிறோம், இந்த மனிதனும், மற்றும் இந்த வயிறும் மட்டும் உண்ணுகின்றன." பிறகு, இந்த வேலை நிறுத்தம், சும்மா முதலாளிகளும் தொழிலாளிகளும் போல, தொழிலாளி வேலை நிறுத்தம் செய்கிறார், இனி வேலை செய்யப் போவதில்லை. ஆகையால் அனைத்து உறுப்புக்களும், உடலின் பகுதிகளும் வேலை நிறுத்தம் கடைபிடிக்கிறார்கள், பிறகு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் சந்தித்த பொழுது, அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள் அதாவது: "நாம் ஏன் பலவீனமாகிக் கொண்டிருக்கிறோம்? நம்மால் இப்பொழுது வேலை செய்ய முடியவில்லை." கால்களும் சொன்னது: "ஆம், நான் பலவீனத்தை உணர்கிறேன்." கைகளும் பலவீனத்தை உணர்கிறது, அனைவரும். ஆகையால் இதன் காரணம் என்ன? அதன் காரணம், பிறகு வயிறு சொல்கிறது: "ஏனென்றால் நான் உணவு உண்பதில்லை. ஆகையால் நீங்கள் பலமாக இருக்க வேண்டுமென்றால் எனக்கு உண்ண உணவு அளிக்க வேண்டும். இரண்டிலொன்று, ஆகையால் நான் தான் அனுபவிப்பாளன். நீங்கள் அனுபவிப்பாளன் அல்ல. நீங்கள் என் மகிழ்ச்சிக்காக பொருள்களை கொடுத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அதுதான் உங்கள் நிலைப்பாடு." ஆகையால் அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்: "ஆம், நாங்கள் நேரடியாக அனுபவிக்க முடியாது. அது இயலாததாகும்." வயிற்றின் வழியாகத்தான் நாம் அனுபவிக்க முடியும். நீங்கள் ஒரு ரசகுல்லாவை எடுங்கள், உங்கள், விரல்கள் அதை அனுபவிக்க முடியாது. நீங்கள் அதை வாய்க்கு கொடுங்கள், அது வயிற்றுக்கு போனதும், உடனே அங்கே சக்தி கிடைக்கிறது. விரல்கள் மட்டும் அனுபவிக்கவில்லை, கண்கள், உடலின் அனைத்து பகுதிகள், அவை திருப்தி அடைவதுடன் சக்தியும் பெறுகின்றன. அதேபோல், உண்மையான அனுபவிப்பாளர் கிருஷ்ணர். கிருஷ்ணர் சொல்கிறார்: போக்தாரம் யக்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம் ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஞாத்வாமாம் சாந்தி ம்ருச்சதி (ப.கீ.5.29).