TA/Prabhupada 0046 - நீங்கள் மிருகங்களாகாதீர்கள் - நடுநிலை தேவை



Morning Walk -- May 28, 1974, Rome

யோகேஸ்வரா: அவர் செல்வதற்கு முன், பகவான் எனக்கு ஒரு பட்டியல் கேள்விகள் விட்டுச் சென்றார். தங்களிடம் சிலவற்றை கேட்கலாமா? பிரபுபாதர்: ஆம். யோகேஸ்வரா: அடிக்கடி அதிகமாக நிகழும் ஒரு பிரச்சனை தீவிரவாதிகளின் பிரசன்னம், ஆதாவது, ஆடவர்கள் சில அரசியலுக்காக ஊக்குவிக்கப்படுவது, அதிகமாக அரசியல் காரணமாகத்தான். பிரபுபாதர்: ஆம், அனைத்து அடிப்படை கொள்கைகளையும் நான் முன்பே விவரித்துவிட்டேன். ஏனென்றால் அவர்கள் மிருகங்கள். ஆகையால் சமயத்தில் கொடிய மிருகங்கள். அவ்வளவுதான். மிருகங்கள், பலவிதமான மிருகங்கள் அங்கே உள்ளன. புலியும் சிங்கமும், அவை கொடிய மிருகங்கள். ஆனால் நீங்கள் விளங்குகள் சமுதாயத்தில் வாழ்கிறீர்கள். ஆகையால் விளங்குகள் சமுதாயம், சில, மற்றொரு மிருகம் வருகிறது மிகவும் கொடியது, அது அதிக திகைப்புடையதாகாது. அனைத்திற்கும் மேலாக, நீங்கள் விளங்குகள் சமுதாயத்தில் வாழ்கிறீர்கள். ஆகையால் நீங்கள் மனிதர்களாகிறிர்கள், சிறந்த பண்புடன், இது ஒன்றே தீர்வு. நாம் ஏற்கனவே பிரகடனம் செய்தோம், இது விளங்குகளின் சமுதாயம். சில கொடிய மிருகங்கள் வெளியே வந்தால், எங்கே அந்த திகைப்பு? அனைத்திற்கும் மேல் இது விளங்குகள் சமுதாயம். இரண்டிலொன்று புலியோ அல்லது யானை வந்தால், அவைகள் அனைத்தும் மிருகங்கள். ஆனால் நீங்கள் மிருகங்கள் ஆகாதீர்கள். நடுநிலையாகுங்கள். அதுதான் தேவைப்படுகிறது. மனித இனம் விவேகமுள்ள விளங்குகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த விவேகமுள்ள நிலைக்கு வந்தால், அதுதான் தேவைப்படுகிறது. நீங்களும் மற்றொரு மிருகமாக இருந்தால், வேறு விதமான மிருகம், அது உங்களுக்கு உதவி புரியாது. நீங்கள் உண்மையிலேயே மனிதனாக வரவேண்டும். ஆனால், துர்லபாம் மானுஸம் ஜென்ம தத் அபி அதுருவம் அர்ததாம். (ஸ்ரீ.பா. 7.6.1) இந்த மக்களுக்கு வாழ்க்கையில் குறிக்கோள் கிடையாது. மனிதனின் குறிக்கொள் என்ன, அவர்களுக்குத் தெரியாது. ஆகையால் அவர்களுடைய மிருக மனப்பாங்கு அனுசரிக்கப்பட்டுள்ளது, இந்த வழி, அந்த வழி, இந்த வழி, அந்த வழி. உதாரணத்திற்கு அவர்கள் நிர்வான நடனம் காணச் செல்வது போல். அந்த விளங்கு மனப்பாங்கு, அவர் தன் மனைவியை தினமும் நிர்வாணமாக பார்த்துக் கொண்டிருக்கிறார், இருப்பினும் அவர் நிர்வாண நடனம் பார்க்க போய்க் கொண்டிருக்கிறார், அத்துடன் கொஞ்சம் கட்டணம் கொடுக்கிறார். ஏனென்றால் அவர்களுக்கு இந்த மிருகத் தன்மையை தவிர வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. அப்படித்தானே? ஆகையால் மற்றொரு பெண் நிர்வாணமாக இருப்பதை பார்ப்பதில் என்ன பலன்? நீங்கள் தினமும் பார்க்கிறீர்கள், ஒவ்வொரு இரவும், உங்கள் மனைவி நிர்வாணமாக. ஏன் நீங்கள், ஏனென்றால் அவர்களுக்கு வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. மிருகங்கள். புன: புனஸ் சர்வித - சர்வணானாம் (ஸ்ரீ.பா. 7.5.30) அது ஒரு நாய், அதற்கு சுவை என்றால் என்ன என்று தெரியாது. அது வெறுமனே மெல்லுகிறது, ஒரு எலும்பை இந்த பக்கம், அந்த பக்கம், இந்த பக்கம், அந்த பக்கம். ஏனென்றால் அது ஒரு மிருகம். அதற்கு வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆகையால் இந்த முழு சமுதாயமும் ஒரு விளங்கினம். குறிப்பாக மேற்கத்தியர்கள். அத்துடன் அவர்கள் விளங்கினத்தின் இயற்கை குணத்தில் நாகரிகத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அப்படி என்றால் "நான் இந்த உடம்பு, என் வாழ்க்கையின் முக்கியமான உபயோகம் என் உணர்வுகளை திருப்திபடுத்துவது." இதுதான் மிருகம். "நான் இந்த உடம்பு." உடம்பு என்றால் உணர்வுகள். "அத்துடன் உணர்வுகளை திருப்திபடுத்துவதே உயர்ந்த பூரணத்துவம்." இதுதான் அவர்களுடைய நாகரிகம். ஆகையால் நீங்கள் உண்மையான மனித நாகரிகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது, ஒரு மிருகம், பலவிதமான வடிவத்தில், வேறுபட்ட கொள்திறனுடன், வெளியே வருகிறது. அனைத்திற்கும் மேலாக, அது ஒரு மிருகம். அடிப்படை கொள்கை மிருகத்தன்மையானது. ஏனென்றால் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார், "நான் இந்த உடம்பு." நாய் நினைத்துக் கொண்டிருப்பதுபோல், "நான் ஒரு நாய், மிகுந்த கொழுத்த வலிமையான நாய்," அதனால் மற்றொரு ஆடவன் நினைக்கிறார், "நான் பெரிய தேசத்தான்." ஆனால் அதன் அடிப்படை கொள்கை என்ன? ஒரு நாயும் தன் உடம்பின் அடிப்படையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறது, அத்துடன் இந்த பரந்த தேசமும் உடம்பின் அடிப்படையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாய்க்கும் இந்த பரந்த தேசத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே வித்தியாசம் என்றால் மனித இனம், இயற்கையின் அன்பளிப்பால், அவர் சிறந்த உணர்வுகளை பெற்றுள்ளார். அத்துடன் அவருக்கு இந்த சிறந்த உணர்வுகளை பயன்படுத்த, அதிகரமோ, அல்லது கல்வி அறிவோ இல்லை, எவ்வாறு ஆன்மீகத்தில் முன்னேறி இந்த பௌதீக உலகிலிருந்து வெளியேறுவது அதைப் பற்றி அவருக்கு உணர்வில்லை. அவர் வெறுமனே அந்த சிறந்த அறிவாற்றலை மிருகத்தனத்திற்கு பயன்படுத்துகிறார். இதுதான் அதன் அர்த்தம். சிறந்த அறிவாற்றலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான கல்வி அறிவு அவருக்கு இல்லை. ஆகையினால் அவர் அதை மிருகத்தனத்தில் மட்டும் பயன்படுத்துகிறார். அத்துடன் உலக மக்கள் அனைவரும், மேற்கத்தியர்களை பார்க்கும் பொழுது, "அவர்கள் முன்னேற்றமடைந்தவர்கள்." அது என்ன? மிருகத்தனத்தில் முன்னேறுகிறார்கள். அடிப்படை கொள்கை மிருகத்தனமாகவே இருக்கிறது. அவர்கள் வியப்படைகிறார்கள். அவர்களைப் போலவே செய்கிறார்கள். ஆகையால் அவர்கள் மிருகத்தனத்தை விரிவாக்குகிறார்கள், மிருகத்தனமான நாகரிகம். இப்பொழுது நாம் மனித நாகரிகத்தின் நலனுக்காக இதை நடுநிலையாக்க வேண்டும்.