TA/Prabhupada 0048 - ஆரியர்களின் நாகரீகம்
Lecture on BG 2.2-6 -- Ahmedabad, December 11, 1972
அனாரிய-ஜஸ்தம், "வாழ்க்கையின் முற்போக்குச் சிந்தனையுடைய ஒருவருக்கு மிகவும் பொருத்தமற்றது." ஆரியன். ஆரியன் என்றால் முற்போக்குச் சிந்தனை உடையவர். ஆகையால் அர்ஜுனனின் போர்க்களத்தில் வாட்டமுற்றச் செயல் ஆரியன் அல்லாதவர்க்கு மிக பொருத்தமானதாக விவரிக்கப்படுகிறது. ஆரியன், ஆரியன் நாகரிகத்தைப் பற்றி பகவத் கீதையில் விவரிக்கப்பட்டதிற்கு ஏற்ப, அங்கே நான்கு பகுதிகள் முழுமுதற் கடவுளால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே விவரித்தப்படி, தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா.6.3.19). எந்த முறையான சமய செய்முறையும் நன்கு புரிந்துக் கொள்ளப்படவேண்டும்: "இது இறைவனால் வழங்கப்பட்டது." மனிதனால் எந்த சமய முறையையும் உருவாக்க முடியாது. ஆகையால் இந்த ஆரியன் முறை, முற்போக்குச் சிந்தனை முறை, அது சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகச: (ப.கீ.4.13). கிருஷ்ணர் கூறுகிறார், "சமூக வரிசைப்படி திறமையான நிர்வாகத்திர்காக இது என்னால் அறிமுகப்படுத்தப்பட்டது." பிராமண, க்ஷத்ரிய, வைஷ்ய, சூத்ர. அர்ஜுனன் க்ஷத்ரிய வம்சத்தைச் சேர்ந்தவர். ஆகையினால் அவர் போர்க்களத்தில் போரிட தயங்குவது, அரியர்களுக்கு பொருந்தாது. அரச பரம்பரையினர் வன்முறையைத் தவிர்ப்பது, இது நன்மை அளிக்காது. க்ஷத்ரியர்கள் போர்களத்தில் போர் புரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, கொலை செய்வது அவர்களுக்கு பாவம் ஆகாது. அதேபோல் பிராமணர், அவர் உயிர் பலியிடும் பொழுது, சில சமயங்களில் மிருகங்கள் பலியிடப்படுகின்றன; ஆகையால் அவர் பாவம் செய்கிறார் என்று அர்த்தம் அல்ல. இந்த மிருக பலியிடுதல் மிருகங்களை உண்பதற்காக செய்யப்படவில்லை. இது வேத மந்திரத்தைச் சோதனை செய்வதற்காகச் செய்யப்பட்டது. அதாவது பலியிடுவதில் ஈடுபட்டுள்ள பிராமணர்கள், அதாவது வெத மந்திரத்தை சரியான முறையில் ஜபிக்கிறார்களா, அந்த சோதனைக்கு ஒரு விளங்கை பலியிட்டு, மறுபடியும் அதே விளங்கிற்கு புதிய இளமையான வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. அதுதான் மிருக பலியிடுதல். சில சமயங்களில் குதிரைகள், சில சமயங்களில் பசுக்கள் பலியிடப்பட்டன. ஆனால் இந்த யுகத்தில், கலியுகம், அவை தடை செய்யப்பட்டன. ஏனென்றால் அது போன்ற யாக்நிக-பிராமணர் இல்லை. அனைத்து வகையான பலியும் இந்த யுகத்தில் தடை செய்யப்பட்டது. அஸ்வமெதாம் கவாலம்பாம் சந்நியாசம் பல-பைதிரிகம் தெவரெனா சுதொத்பத்திம் கலெள பண்ச விவர்ஜயெத் (.ஸி.ஸி.ஆதி.17.164) அஸ்வமெதா பலியிடுதல், கொமெதா பலியிடுதல், சந்நியாச, அத்துடன் தேவர மூலம் குழந்தை பெறுதல், கணவரின் இளைய சகோதரர், இவை யாவும் இந்த யுகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.