TA/Prabhupada 0049 - நாம் இயற்கையின் சட்டத்தின் பிடியில் கட்டுப்பட்டு இருக்கிறோம்
Arrival Talk -- Aligarh, October 9, 1976
ஆகையால் இந்த சங்கீர்தன மிகவும் மேன்மைபொருந்தியது. அது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆசீர்வாதம். பரம் விஜயதெ ஸ்ரீ கிருஷ்ண-சங்கீர்தனம். இது அவருடைய ஆசீர்வாதம்: வெறுமனே சங்கீர்தனம் இந்த யுகத்தில். வேத இலக்கியத்தில், வேதாந்த சூத்திரத்தில் இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. ஷப்தாத் அனாவ்ரத்தி. அனாவ்ரத்தி. விடுதலை. நம்முடைய தற்சமய நிலை அடிமை படுத்துதல். நாம் இயற்கை சட்டத்தின் பிடியில் கட்டுப்பட்டு இருக்கிறோம். நாம் அறியாமையால் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்யலாம் - அது நமது அறியாமை- ஆனால் உண்மையிலேயே நாம் இயற்கை சட்டத்தின் பிடியில் கட்டுப்பட்டு இருக்கிறோம். ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ அஹங்கார விமுடாத்மா கர்த்தாஹமிதிமன்யதே. (ப.கீ.3.27) நாம் இயற்கை சட்டத்தின் பிடியில் கட்டுப்பட்டு இருக்கிறோம், ஆனால் முட்டாள்கள், விமுடாத்மா, போலி தன்மானத்தினால், அத்தகையவர்கள், தான் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இல்லை அது அல்ல. ஆகையால் இது கருத்து வேறுபாடு. ஆகையால் இந்த கருத்து வேறுபாடு தூய்மை படுத்தப்பட வேண்டும். அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள். ஆகையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சிபார்சு செய்தார். அதாவது நீங்கள் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஜபித்தால், பிறகு முதல் தவனையின் பயன் சேத்தொ-தர்பண-மார்ஜணம் (ஸி.ஸி.அந்திய20.12). ஏனென்றால் கருத்து வேறுபாடு என்பது மனதிற்குள். மனம் தெளிவாக இருந்தால், மனசாட்சி தெளிவாகும், பிறகு கருத்து வேறுபாடு இருக்காது. ஆகையால் இந்த மனசாட்சி தூய்மை படுத்தப்பட வேண்டும். அத்துடன் அதுதான் ஹரே கிருஷ்ண ஜபித்தலால் ஏற்படும் நன்மையின் முதல் பகுதி. கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த-ஸங்க பரம் வ்ரஜேத் (ஸ்ரீ.ப.12.3.51). வெறுமனே கிருஷ்ணரின், க்ருஷ்ணஸ்ய, கிருஷ்ணரின் தெய்வீகமான பெயரை, ஹரே கிருஷ்ண என்று ஜபித்தல். ஹரே கிருஷ்ண, ஹரே ராம, ஒரே பொருள். ரமருக்கும் கிருஷ்ணருக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை. ராமாதி-மூர்திஸு கலா-நியமென திஷ்தான் (பி.ச.5.39). ஆகையால் உங்களுக்குத் தேவை. தற்சமய நிலை கருத்து வேறுபாடு உடையது, அதாவது "நான் இந்த பௌதீக இயற்கையின் உற்பத்தி பொருள்," "நான் இந்த சரீரம்." "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் பிராமண," "நான் ஷ்த்ரிய," அதுவும் ஏனையனவும். பல பதவிப்பெயர். ஆனால் நாம் அவற்றில் ஒருவருமில்லை. இதுதான் தூய்மைப் படுத்தல். செதொ-தர்பண. நீங்கள் நன்றாக புரிந்துக் கொள்ளும் பொழுது அதாவது, "நான் இந்தியன் அல்ல, நான் அமெரிக்கன் அல்ல, நான் பிராமண அல்ல, நான் ஷத்ரிய அல்ல"- அதாவது "நான் இந்த சரீரம் அல்ல"- அப்போது ஆன்மா அஹாம் ப்ரமாஸ்மி ஆகும். ப்ரஹ்மபூத: ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி (ப.கீ.18.54). இதுதான் தேவை. இதுதான் வாழ்க்கையின் வெற்றி.