TA/Prabhupada 0050 - மறுபிறவி என்ன என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்
Lecture on BG 16.5 -- Calcutta, February 23, 1972
இயற்கை, கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று, நமக்கு பல வாய்ப்புக்கள் கொடுக்கிறது, பிறப்பு, இறப்பு என்னும் சிக்கலில் இருந்து விடுபட பல வாய்ப்புக்கள் கொடுக்கின்றன: ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி து:க்கதோஷானு தர்ஷனம் (ப.கீ.13.9). வாழ்க்கையில் தொல்லை கொடுக்கும் இந்த நான்கு சம்பவத்தை அறிந்துக் கொள்ள ஒருவர் அறிவாளியாக இருக்க வேண்டும்: ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி. அதுதான் முழுமை பெற்ற வேத தத்துவம் - இந்த பிணைப்பிலிருந்து எவ்வாறு வெளியேறுவது. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது அதாவது "நீங்கள் இதைச் செய்யுங்கள், நீங்கள் அதைச் செய்யுங்கள்," ஆகையால் கட்டுப்பாடான வாழ்க்கை, ஆகையால் இறுதியில் அவர் வெளியே வந்துவிடலாம். ஆகையினால் பகவான் கூறுகிறார், தைவீ ஸம்பத் விமொக்ஷாய (ப.கீ.16.5). நீங்கள் தைவீ ஸம்பததில் முன்னேற்றம் அடைந்தால் இந்த தகுதிகள், விவரித்தது போல்- அஹிம்ஸா, சத்த்வ-ஸம்சுத்தி, அஹிம்ஸா, பல மாதிரி பொருள்கள், பிறகு நீங்கள் வெளியேறுவீர்கள், விமொக்ஷாய. துரதிஷ்டவசமாக, நவீன நாகரிகத்தில், விமொக்ஷாய என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் சரியான குருடர்கள். விமொக்ஷாய என்று சில பதவிகள் இருக்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது. அடுத்த பிறவி என்ன என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அங்கே கல்வி திட்டம் இல்லை. நான் உலகம் எங்கிலும் பயணம் செய்கிறேன். ஆத்மா மறு பிறவி எடுக்கும் என்பதை கற்பிக்க எந்தவொரு கல்வி நிலையமும் இல்லை, ஒருவருக்கு எவ்வாறு சிறந்த வாழ்வு அமையும். ஆனால் அவர்கள் நம்பவில்லை. அவர்களுக்கு ஞானம் இல்லை. அதுதான் ஆசுரீ சம்பத். அது இங்கே விவரிக்கப்படும். ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுராஸுரா: ப்ரவ்ருத்திம். ப்ரவ்ருத்திம் என்றால் ஈர்ப்பு அல்லது பிணைப்பு. எவ்வகையான காரியங்களில் நாம் பிணைப்படையலாம், எவ்வகையில் நாம் பிணைப்பற்று இருக்க வேண்டும், அது, அசூரர்கள், அவர்களுக்குத் தெரியாது. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுராஸுரா: ந ஷெளசம் சாபி சாசாரோ ந ஸத்யம் தேஷூ வித்யதே (ப.கீ.16.7) இவர்கள்தான் அசூரர்கள், தங்கள் வாழ்க்கை எவ்வாறு எந்த திசை நோக்கி நடத்தப்பட வேண்டும், என்று அவர்களுக்குத் தெரியாது. அதை ப்ரவ்ருத்தி என்கிறோம். எத்தகைய வாழ்க்கையிலிருந்து அவர்கள் விலகி இருக்க, விட்டுவிட வேண்டும், நிவ்ருத்தி. ப்ரவ்ருத்திஸ் து ஜீவாத்மன. அது மற்றொன்று. பூனம். நிவ்ருத்திஸ் து மஹாவலாம். அனைத்து சாஸ்திரா, அனைத்து வேதம் வழிகாட்டுவது இவைகளுக்கே ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி. அவர்கள் படிப்படியாக பயிற்சி செய்கிறார்கள். எவ்வாறு என்றால் லொகெ வ்யவாயாமிஷ-மத்ய-ஸேவா நித்யா சுஜந்தொஹ. உயிர் வாழிகளுக்கு இயற்கையாகவே ஆசை உள்ளது, வ்யவாயா, பாலின்ப வாழ்க்கை; அத்துடன் மத்ய செவாஹ, போதைப் பொருள்; ஆமிஸா செவாஹ, மற்றும் மாமிசம்-உண்பது. இயற்கையான உள்ளுணர்வு அங்கே இருக்கிறது. ஆனால் அசூரர்கள், அதை நிறுத்த முயலவில்லை. அவர்கள் அதை அதிகமாக்க முயல்கிறார்கள். அதுதான் அசூர வாழ்க்கை. எனக்கு சில நோய்கள் இருக்கின்றன. நான் அதை குணப்படுத்த வேண்டுமானால், பிறகு டாக்டர் எனக்கு சில மருந்துக் குறிப்புகள் கொடுக்கிறார். அதை "நீங்கள் எடுக்க மாட்டீர்கள்." உதாரணத்திற்கு நீரிழிவு நோயாளி. அவர் தடை செய்யப்படுகிறார் அதாவது "சக்கரை எடுக்கக் கூடாது, மாச்சத்து எடுக்கக் கூடாது." நீவிருத்தி. அதேபோல், சாஸ்த்ரா நமக்கு வழி காட்டுகிறது அதாவது நீங்கள் இந்த பொருளை ஏற்றுக்கொள்ளலாம், அத்துடன் இந்த பொருளை ஏற்றுக்கொள்ளக் கூடாது, சாஸ்த்ரா. எவ்வாறு என்றால் நம் சமுதாயத்தில் நாம் மிகவும் அவசியமான நிவ்ருத்தி-ப்ரவ்ருத்தி, தேர்ந்து எடுத்து இருக்கிறோம். ப்ரவ்ருத்தி - நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம், "மணமாகாமல் உடலுறவு கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது, ஆமிஸா-சேவா." ஆமிஸா-சேவா நித்யா சுஜந்தொஹ. ஆனால் சாஸ்த்ரா சொல்கிறது உங்களால் தவிர்க்க முடிந்தால், நிவ்ருத்திஸ் து மஹாவலாம், பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாகும். ஆனால் நாம் தயாராக இல்லை. நீங்கள் ப்ரவ்ருத்திஸ் ஏற்றுக்கொள்ள தயாராகாமலும் நிவ்ருத்திஸ் நிராகரிக்க தயாராகவும் இல்லை என்றால் பிறகு நீங்கள் அசூரா என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். கிருஷ்ணர் இங்கு கூறுகிறார், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுராஸுரா: (ப.கீ.16.7). அவர்களுக்குத் தெரியாது "ஒ அது என்ன?" அவர்கள் சொல்கிறார்கள், பெரிய, பெரிய சுவாமிகள் கூட சொல்வார்கள், "ஒ அதில் என்ன தவறு? நீங்கள் எதையும் சாப்பிடலாம். அது ஒரு சமாச்சாரம் அல்ல. நீங்கள் எதுவும் செய்யலாம். நீங்கள் வெறுமனே எனக்கு கட்டணம் கொடுங்கள், நான் உங்களுக்கு சில சிறப்பு மந்திரங்கள் கொடுக்கிறேன்." இவைதான் நடந்துக் கொண்டிருக்கிறது.