TA/Prabhupada 0053 - முதல் வேலையாக நாம் செவியால் கேட்க வேண்டும்
Lecture on SB 2.1.5 -- Delhi, November 8, 1973
ஆகையால் நாமும் ப்ரக்ரிதி. நாமும் இறைவனின் சக்தி. ஏனென்றால் நாம் கருப்பொருளின் வளத்தை பயன் படுத்த முயற்சிக்கிறோம், ஆகையினால் பௌதிக்கப் பொருள்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. இல்லையெனில், அதற்கு மதிப்பு இல்லை, பூஜியம். ஆனால் நம் வர்த்தகம், அது இங்கு வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது, ஏனென்றால் நாம் இப்பொழுது இந்த கருப்பொருளுடன் சிக்கலில் இருக்கிறாோம். கருப்பொருள் நம்முடைய வேலையில்லை. நம்முடைய ஒரே வேலை சங்கதியிலிருந்து எப்படி வெளியே வருவது. அதுதான் நம்முடைய உண்மையான வேலை. உங்களுக்கு அந்த வேலை வேண்டும் என்றால், பிறகு அதன் நிபந்தனை இங்கு இருக்கிறது. அது என்ன? ஸ்ரோதவ்ய: கீர்திதவ்யஸ் ச. நீங்கள் கேட்க வில்லையெனில், உங்களுடைய நிலைப்பாட்டை நீங்கள் எவ்வாறு புரிந்துக் கொள்வீர்கள்? நீங்கள் இறைவனை, கிருஷ்ணரை, புரிந்துக் கொண்டு, அத்துடன் நீங்கள் இறைவனின் அங்க உறுப்பு என்பதை புரிந்துக் கொண்டு, அல்லது கிருஷ்ணர், பிறகு நீங்கள் உங்களுடைய நிலைப்பாட்டை புரிந்துக் கொள்வீர்கள்: "ஒ, நாம் இறைவனின் அங்க உறுப்புகளாவோம்." கிருஷ்ணர் பரமபுருஷர் ஆவார், ஸத்-ஐஸ்வரிய-பூர்ணம், சகல ஐஸ்வரியமும் நிறைந்தவர். உதாரணத்திற்கு ஒரு பைத்தியக்காரன் தெருவில் அலைந்துக் கொண்டிருக்கிறான், அவர் சுய நினைவில் புரிந்துக் கொள்ளும் பொழுது "என் தந்தை பெரும் செல்வந்தர், மிகுந்த செல்வாக்கு உடையவர், இருந்தும் நான் ஏன் தெருவில் பைத்தியக்காரனைப்போல் அலைந்துக் கொண்டிருக்கிறேன்? எனக்கு உணவு இல்லை, இருப்பிடம் இல்லை. நான் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கிறேன்," பிறகு அவர் சுயநினைவுக்கு வருகிறார். அதை ப்ரம-பூதா நிலை என்று கூறுவார்கள் (ப.கீ. 18.54). "ஒ, நான் இந்த கருப்பொருள் அல்ல. நான் ஆன்மா, நான் இறைவனின் அங்க உறுப்புகளில் ஒன்று. ஒ." அதுதான் உணர்வு. இந்த உணர்வை நாங்கள் தூண்டிவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் மக்களுக்குச் சிறந்த சமூக சேவை, அவருடைய இழந்த உணர்வை விழிப்புறச் செய்வது. அவர்கள் முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதாவது " நான் பௌதிக உற்பத்தி தன்மையுடையவன், மேலும் இந்த பௌதிக உலகில் என் பொருள்களை நான் சரிபடுத்த வேண்டும். இதுதான் முட்டாள்தனம். உண்மையிலேயே அறிவாற்றல் என்றால் ப்ரம-பூத, அஹம் ப்ரமாஸ்மி. அஹம் ப்ரமாஸ்மி "நான் இறைவனின் அங்க உறுப்பு. இறைவன் நித்தியமான ப்ரமன். நான், அங்க உறுப்பாக இருக்கிறேன்," உதாரணத்திற்கு தங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது போல், தங்கச் சுரங்கம், அது சிறிய தோடாக இருக்கலாம். அதுவும் தங்கம் தான். அதேபோல், கடலில் இருக்கும் சிறு துணிக்கைகளுக்கும் அதே தன்மை, உப்பு. அதேபோல், நாம், இறைவனின் அங்க உறுப்புகளாக இருப்பதால் நமக்கும் அதே தன்மை இருக்கும். தன்மைகளை பொறுத்தவரை, நாம் ஒன்றே. நாம் ஏன் காதலிப்பதில் அதிக ஆசை கொள்கிறோம். ஏனென்றால் கிருஷ்ணரிடம் காதல் இருக்கிறது. நாம் இங்கு ராதா-கிருஷ்ணரை வழிபடுகிறோம். ஆதியிலிருந்து அங்கே காதல் இருந்தது. ஆகையினால் நாம், இறைவனின் அங்க உறுப்பாக இருப்பதால், நாமும் காதலிக்க முயற்சிக்கிறோம். ஒரு ஆடவன் மற்றொரு பெண்ணை காதலிக்க முயற்சிக்கிரான், பெண் மற்றொரு ஆடவனை காதலிக்க முயற்சிக்கிராள். இது இயற்கையே. இது செயற்கையானதல்ல. ஆனால் பௌதிக போர்வையில் இது முறையற்ற நடத்தை. அதுதான் இதன் தவறு. இந்த பௌதிகபோர்வையிலிருந்து நாம் விடுப்பட்டதும், பிறகு தன்மைகளைப் பொறுத்தவரை நாம் ஆனன்டமயொ அப்யாசாத் (வேதான்த சூத்ர 1.1.12), மகிழ்ச்சியாக, கிருஷ்ணர் எப்பொழுதும் நடனம் ஆடிக் கொண்டிருப்பது போல், கிருஷ்ணரை நீங்கள் மகிழ்ச்சியற்று காண முடியாது. நீங்கள் கிருஷ்ணரின் படத்தை பார்த்து இருப்பீர்கள். அவர் காலியா பாம்புடன் சண்டை போடுகிறார். அவர் நடனம் ஆடுகிறார். பாம்பிற்கு பயப்படவில்லை. அவர் நடனம் ஆடுகிறார். அவர் கோபிகளுடன் ராச-லீலாவில் நடனம் ஆடுவதைப் போல், அதேபோல், அவர் பாம்புடன் நடனம் ஆடுகிறார். ஏனென்றால் அவர் ஆனன்டமயொ அப்யாசாத். அவர் ஆனன்டமயா, எப்பொழுதும் மகிழ்ச்சியுடையவர். எப்பொழுதும். நீங்கள் கிருஷ்ணரை காண்பீர்கள், கிருஷ்ணர், குருஷேத்ராவில் போர் நடந்துக் கொண்டு இருந்ததைப் போல். கிருஷ்ணர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அர்ஜுனர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் ஏனென்றால் அவர் உயிர் வாழி, ஆனால் கிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதுதான் இறைவனின் குணாதிசயம். ஆனன்டமயொ அப்யாசாத். இதுதான் சூத்ரா, ப்ரம-சூத்ராவில், அதாவது "இறைவன் ஆனன்டமயா, எப்பொழுதும் மகிழ்ச்சி, எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பார்." ஆகையால் நீங்களும் உற்சாகம் அடைவீர்கள் நீங்கள் வீடு பெரு பெற்று, முழுமுதற் கடவுளை அடையும் பொழுது. அதுதான் நம்முடைய பிரச்சனை. ஆகையினால் நாம் எவ்வாறு அங்கே செல்ல முடியும்? முதல் வேலையாக நாம் கேட்க வேண்டும். ஸ்ரோதவ்ய: சும்மா இறைவன் என்றால் யார் என்று கேட்க முயலுங்கள், அவருடைய இராஜ்யம் எது, அவர் எவ்வாறு செயல்படுகிறார், அவர் எவ்வாறு ஆனந்தமாக இருக்கிறார். இவை அனைத்தும் கேட்கப்பட வேண்டிய விஷயங்கள். ஸ்ரவனம். பிறகு நீங்கள் திருப்தி அடைந்தவுடன், "ஒ, இறைவன் மிக அருமையானவர்," பிறகு நீங்கள் இவ்வுலகத்திற்கு இந்த செய்தியை நடத்திக் காட்டி அல்லது ஒலிபரப்ப மிக ஆவலாக இருப்பீர்கள். இதுதான் கீர்தனம். இதுதான் கீர்தனம்.