TA/Prabhupada 0055 - கிருஷ்ணரை பற்றி கேட்பதன் மூலம் அவரை நெகிழவைக்கிறார்கள்



Lecture on BG 2.18 -- Hyderabad, November 23, 1972

சைதன்ய மஹாபிரபுவின் தீர்க்க தரிசனம்: "எவ்வளவுக்கு நகரங்களும் கிராமங்களும் இந்த பூகோளததின் மேற்பரப்பில் இருக்கிறதோ எங்கும் இந்த ஹரே கிருஷ்ணா மந்திரம், அல்லது பகவான் சைதன்யாவின் பெயர், பாராட்டப்படும்." அது நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த ஹரே கிருஷ்ணா சமய நம்பிக்கையை உலகமெங்கும் அறிமுகப்படுத்த எல்லையற்ற அளவில் இடம் இருக்கிறது. அது நடைமுறைக்குரியது. துரதிஷ்டவசமாக, சைதன்ய மஹாபிரபு இந்த காரியத்தை அனைத்து இந்தியர்களிடமும் ஒப்படைத்தாலும், அவர் வங்காளத்தில் பிறந்ததாள், வங்காளிகளிடம் மட்டுமல்ல. அவர் வங்காளிகளுக்கு மட்டும் என்று கூறவேயில்லை. அவர் கூறினார், பாரத-பூமிதெ மனுஸ்ய-ஜன்ம ஹைல யார (ஸி. ஸி.ஆதி9.41) "பாரதவர்ஸா என்ற இந்த புனிதமான பூமியில், யாராயினும் மனிதப்பிறவி எடுத்திருந்தால், அவர் தன் வாழ்க்கையில் பூரணத்துவம் பெற வேண்டும்." ஜன்ம சார்தக கரீ. உங்கள் வாழ்க்கையில் முதலில் பூரண நிலை அடையாமல் நீங்கள் சமயச் சொற்பொழிவாற்ற முடியாது. நான் குறைபாடுகளுடன் இருந்தால், நான் சமயச் சொற்பொழிவாற்ற முடியாது. ஒருவர் பூரணத்துவம் பெற வேண்டும். அது கடினமானதல்ல. நமக்கு முனிவர்கள், துறவிகள் மேலும் இறைவன், கிருஷ்ணர் ஆகியவர்களிடமிருந்து செயல்முறை கிடைத்துள்ளது. ஆகையால் நம் வாழ்க்கையில் பூரணத்துவம் பெறுவது கடினமே அல்ல. நாம் வெறுமனே தவிர்க்கிறோம். அது நம்முடைய துர்ப்பாக்கியம். மந்தா: ஸுமந்த-மதயோ மந்த-பாக்யாஹி (ஸ்ரீ.ப.1.1.10). ஏனென்றால் நாம் மந்தா, மந்தா-மதஹ, நாம் சில பொய்யான தர்க்கத்தில், நம் நேரத்தை வீணாக்குகிறோம். உண்மையான பாதையை நாம் ஸாஸ்திரத்திலிருந்து எடுக்க வேண்டும். பிறகு நாம் அறிவாற்றல் உள்ளவர்களாகாலம். ஸு-மெதஸ:. யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ். (ஸ்ரீ.ப. 11.5.32). குறுக்கு வழிமுறை. திறமைசாலிகளின் வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஸங்கீர்த்தன இயக்கத்தை ஆன்மீக வாழ்க்கையின் நிலைத் தோற்றமாக எடுத்துக் கொள்வார்கள். இது உண்மை, இது அறிவுப்பூர்வமானது, இது அதிகாரமளிக்கப்பட்டது. ஆகையால் இதை உதாசீனப்படுதாதீர்கள். ஹரே கிருஷ்ணா ஜபித்தலை ஆத்மபூர்வமாக மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள், எந்த இடத்திலும், நியமித: ஸ்மரனே ந கால:. அதற்கு சட்டமும் விதிமுறைகளும் இல்லை. அதாவது "நீங்கள் இந்த நேரத்தில் அல்லது அந்த நேரத்தில், இந்த நிலையில் அல்லது அந்த நிலையில் ஜபிக்க வேண்டும்." இல்லை. ஏனென்றால் இது குறிப்பிட்டு தடம் தவறிய ஆத்மாக்களுக்காக உள்ளது, இது கடினமான-வேகமான திட்டம் அல்ல. நாம்நாம் அகாரி பஹுதா: நிஜ-சர்வ-ஸக்திஸ் தத்ராபிதா நியமித: ந காலஹ. அந்த பெயர், கிருஷ்ணரின் புனிதமான பெயர், கிருஷ்ணரையப் போலவே சக்தி வாய்ந்தது. கிருஷ்ணருக்கும் அவருடைய பெயருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கிருஷ்ணர் பூரணத்துவம் பெற்றவர். ஆகையினால் கிருஷ்ணரின் பெயருக்கும் அவர் வடிவத்திற்கும் எந்த வேற்றுமையும் இல்லை, கிருஷ்ணாவில் இருந்து, கிருஷ்ணரின் தன்மை, கிருஷ்ணரின் சுற்றுப்புறம், கிருஷ்ணரின் பொழுது போக்கு, அனைத்தும் கிருஷ்ணரே. நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி கேட்டால், நீங்கள் கிருஷ்ணரை நெகிழவைப்பதன் மூலம் வரவேற்கிறீர்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணரை நீங்கள் பார்த்தால், அது நீங்கள் கிருஷ்ணரை நேரில் பார்க்கிறீர்கள். ஏனென்றால் கிருஷ்ணர் பூரணத்துவம் பெற்றவர். அவர் உங்களுடைய சேவையை ஏற்றுக் கொள்ள முடியும், எவ்வழியிலும். ஏனென்றால் அனைத்தும் அவரே. ஈஸாவாசயம் இதம் சர்வம் (ஐசோ 1). அவருடைய சக்தி. ப்ரஸய ப்ரமணஹ ஸக்திஸ் ததிடம் அகிலம் ஜகத். அனைத்தும் கிருஷ்ணரின் சக்தி. ஆகையால் நாம் கிருஷ்ணரின் சக்தியுடன் தொடர்பு கொண்டால், சிறிது ஞானத்துடன், நாம் நேரடியாக கிருஷ்ணருடன் தொடர்பு கொள்கிறோம். இதுதான் செயல்முறை. நீங்கள் தொடர்ந்து கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டால், அதுதான் கிருஷ்ணர் உணர்வு. பிறகு நீங்கள் புனிதமடைவீர்கள். புனிதம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு இரும்பு கோலை நெருப்பில் வைத்தால், அது சூடாகும், மேலும் சூடு, கடைசியில் அது சிவப்பாகிவிடும். அது சிவப்பாகும் வரை சூடானால், அது நெருப்பு. அது இனிமேல் இரும்பு அல்ல. அதேபோல், நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணர் உணர்வில் இருந்தால், நீங்கள் கிருஷ்ணர் ஞானம் பெறுவீர்கள். இதுதான் செயல்முறை. பிறகு அனைத்தும் புனிதமடைந்துவிடும்; பிறகு உங்கள் ஆன்மீக வாழ்க்கை வெளிப்படும். அதன்பின் உங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்.