TA/Prabhupada 0054 - அனைவரும் வெறுமனே கிருஷ்ணருக்கு தொல்லை கொடுக்கிறார்கள்



His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Appearance Day, SB 6.3.24 -- Gorakhpur, February 15, 1971

ஆகையால், இறுதியான உண்மை நிராகார, அல்லது தனி ஒருவரை குறிக்காது என்று மாயாவாதீ நிரூபிக்க விரும்புகிறார். ஆகையால் கிருஷ்ணர் உங்களுக்கு அறிவை கொடுக்கிறார்: "சரி, நீங்கள் இதை முன் வையுங்கள். இந்த தர்க்கத்தை முன் வையுங்கள், இந்த தர்க்கம், அந்த தர்க்கம்." அதேபோல், கிருஷ்ணர் கொடுக்கிறார், இதோ ஒரு வங்காளி பழமொழி இருக்கிறது அதாவது இறைவன் எவ்வாறு வேலை செய்கிறார் என்று, அதாவது ஒரு மனிதன், ஒரு இல்லறத்தார் இறைவனிடம் வணங்குகிறார், "என் பிரியமான பகவானே, இன்று இரவு என் வீட்டில் எந்த திருட்டும், களவும் எதுவும் நடக்க கூடாது. தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள்." ஆகையால் ஒரு மனிதன் பிராத்திக்கிரான், அவ்வாறு வேண்டுகிறான். மற்றொரு மனிதன் வேண்டுகிறான், திருடன், "என் பிரியமான பகவானே, இன்று நான் அந்த வீட்டில் என் திருட்டு தொழிலை புரிய வேண்டும். எனக்கு ஏதாகிலும் கிடைக்க உதவி புரியுங்கள்." இப்பொழுது, கிருஷ்ணரின் நிலமை என்ன? (சிரிப்பொலி) கிருஷ்ணரே அனைவருடைய இதயமாகும். ஆகையால் கிருஷ்ணர் அனைத்துப் பிரார்த்தனைகலையும் பூர்த்தி செய்யவேண்டும். திருடன், கள்வனும் ஒரு இல்லறத்தாரும், இத்தனை பிரார்ததனைகள். ஆகையால் கிருஷ்ணரின் சீரமைப்பு, இருப்பினும் அவர், அதுதான் கிருஷ்ணரின் அறிவாற்றல், அவர் எவ்வாறு சரி செய்தார் என்பது. அவர் எல்லோருக்கும் சுதந்திரம் கொடுத்தார். அனைவருக்கும் செளகரியம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இருந்தும் அவர் தொந்திரவு செய்யப்படுகிறார். ஆகையினால் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அறிவுரை கூறுகிறார் அதாவது "எதையும் திட்டமிடாதீர்கள். பாதகர்களே, முட்டாள்களே, நீங்கள் எனக்கு தொல்லை கொடுக்காதீர்கள். (சிரிப்பொலி) தயவுசெய்து என்னிடம் சரணடைந்து விடுங்காள். என் திட்டத்திற்கு பணியுங்கள்; நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் திட்டம் தீட்டுகிறிர்கள், நீங்கள் மகிழ்ச்சியற்று இருக்கிறீர்கள்; நானும் மகிழ்ச்சியற்று இருக்கிறேன். (சிரிப்பொலி) நானும் மகிழ்ச்சியற்று இருக்கிறேன். ஆகையால் பல திட்டங்கள் தினமும் வருகின்றன, அதையும் நான் நிறைவேற்ற வேண்டும்." ஆனால் அவர் கருணைமிக்கவர். இருந்தாலும், யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவபஜாம்யஹம் (ப.கீ. 4.11). ஆகையால் கிருஷ்ணர் பக்தர்களைத் தவிர, அனைவரும் வெறுமனே கிருஷ்ணருக்கு கொடுப்பது, தொல்லை, தொல்லை, தொல்லை. ஆகையினால், அவர்களை துஷ்க்ர்தின என்று அழைப்பார்கள். துஷ்க்ர்தின, மிகவும் கெட்டவன், கெட்டவர்கள். எந்த திட்டமும் தீட்டாதீர்கள். கிருஷ்ணரின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அது வெறுமனே கிருஷ்ணருக்கு தொல்லை கொடுப்பதாகும். ஆகையினால், ஒரு பக்தர் தன்னுடைய பராமரிப்புக்கு கூட வேண்டுவதில்லை. அதுதான் தூய பக்தி. தன்னுடை வெறுமையான பராமரிப்புக்கு கூட கிருஷ்ணருக்கு தொல்லை கொடுப்பதில்லை. அவருக்கு பராமரிப்பு இல்லையெனில், அவர் துன்புறுவர், உண்ணா விரதம்; இருந்தும், அவர் கிருஷ்ணரை கேட்கமாட்டார். "கிருஷ்ணா, எனக்கு ரொம்ப பசிக்கிறது. எனக்கு கொஞ்சம் உணவு கொடுங்கள்." நிச்சயமாக, கிருஷ்ணர் தன் பக்தருக்காக விழிப்புடன் இருப்பார், ஆனால் கிருஷ்ணரிடம் எந்த திட்டமும் வைக்கக் கூடாது என்பது ஒரு பக்தரின் கொள்கை. கிருஷ்ணரை செய்ய விடுங்கள். நாம் வெறுமனே கிருஷ்ணரின் திட்டத்தின்படி செயல்பட வேண்டும். ஆகையால் நம் திட்டம் என்ன? நம் திட்டம் யாதெனில், கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (ப.கீ.18.66). மன்-மநா பவ மத்-பக்தொ மத்-யாஜீ. ஆகையால் நம் திட்டம் ஒன்றே. நாம் வெறுமனே கிருஷ்ணருக்கு ஆதரவு திரட்டுகிறோம், அதாவது "நீங்கள் கிருஷ்ணர் உணர்வில் ஆர்வம் கொள்ளுங்கள்." நாம் எவ்வாறு கிருஷ்ணர் உணர்வில் ஆர்வம் கொள்கிறோம் என்பதற்கு, நாம் உதாரணம் காட்ட வேண்டும், நாம் எவ்வாறு கிருஷ்ணரை வணங்குகிறோம், எவ்வாறு வீதியில் போய்க் கொண்டு கிருஷ்ணரின் பெயரை அதிர்வுர செய்ய, திவ்யமான பெயரை.— இப்பொழுது நாம் கிருஷ்ணரின் ப்ரசாதம் விநியோகம் செய்கிறோம். இயன்றவரை விரைவாக, நம் வேலை மனிதர்களை எவ்வாறு கிருஷ்ணர் உணர்வில் சேர தூண்டுவது, அவ்வளவுதான். அந்த காரணத்திற்காக, நீங்கள் திட்டம் தீட்டலாம், ஏனென்றால் அதுதான் கிருஷ்ணரின் திட்டம். ஆனால் அதுவும் கிருஷ்ணரால் அனுமதிக்கப்பட வேண்டும். நீங்களாக சொந்தமாக உற்பத்தி செய்த ஜோடிப்புக்களை அளிக்காதிர்கள். ஆகையினால், உங்களுக்கு வழிகாட்ட, கிருஷ்ணரின் பிரதிநிதி தேவைப்படுகிறது. அவர்தான் ஆன்மீக குரு. ஆகையால் அங்கே மாபெரும் திட்டமும் மாபெரும் திட்டமுறையும் உள்ளது. ஆகையினால் நாம் மஹாஜனாவின் பாதையை பின்பற்ற வேண்டும். இங்கே கூறப்பட்டுள்ளது போல், அதாவது த்வாதசைதே விஜானீமோ தர்மம் பாகவதம் படா. அவர் கூறுவதாவது "நாம், தேர்ந்தெடுக்கப்பட்ட மஹாஜனங்கள், கிருஷ்ணரின் பிரதிநிதிகள், நமக்கு பாகவத-தர்மா என்னவென்று தெரியும், கிருஷ்ண-தர்மா என்னவென்று தெரியும்." த்வாதச. த்வாதச என்றால் பன்னிரண்டு பெயர்கள், ஏற்கனவே குறிப்பிடப்பட்டது: ஸ்வயம்பூர் நாரத: சம்பு: (ஸ்ரீ.ப6.3.20). நான் விவரித்துவிட்டேன். ஆகையால் யமராஜா சொன்னார், "நாம் மட்டுமே, இந்த பன்னிரண்டு ஆடவர், கிருஷ்ணரின் பிரதிநிதிகள், நமக்கு பாகவத-தர்மா என்னவென்று தெரியும்." த்வாதசைதே விஜானீமோ. விஜானீமோ என்றால் "நமக்கு தெரியும்." தர்மம் பாகவதம் படா: குஹ்யம் விசுத்தம் துர்போதம் யம் ஞாத்வாம்ருதம் அஸ்னுதே. "நமக்கு தெரியும்." ஆகையினால் இது அறிவுறுத்தப்படுகிறது, மஹாஜனோ ஏனா கதா: ச பந்தா: (ஸி.ஸி. மத்திய17.186). இந்த மஹாஜனங்கள், அவர்கள் ஏற்படுத்திய விதிமுறைகள், அதுதான் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளக்கூடிய உண்மையான வழி, அல்லது ஆன்மீக விமோசனம். ஆகையால் நாம் பிரம்ம-சம்பிரதாயத்தை பின்பற்றுகிறோம், முதலாவது, சுவாயம்பூ. பிரம்மா. பிரம்மா, பிறகு நாரதா, நாரதாவிலிருந்து, வியாஸடெவ். இந்த வழியாக மத்வாசார்ய, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, இந்த வழியாக. ஆகையால் இன்று, ஏனென்றால் நாம் அந்த வழியை பின்பற்றுவதால் ஸ்ரீ பக்தி சித்தாந்த ஸரஸ்வதீ கொஸ்வாமீ பிரபுபாதா, ஆகையால் இது, இன்று அவர் தோன்றிய நாள். ஆகையால் நாம் இந்த திதியை மிகவும் மரியாதையுடன் கெளரவிக்க வேண்டும் மேலும் பக்தி சித்தாந்த ஸரஸ்வதீ கொஸ்வாமீயை வணாங்கி அவரிடம் "நாங்கள் உங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளோம் ஆகையால் எங்களுக்கு வல்லமை கொடுங்கள், அறிவாற்றல் கொடுங்கள். அத்துடன் நாங்கள் உங்களுடைய தாசர்களால் வழிநடத்தப்பட வேண்டும்." இந்த முறையில் நாம் வழிபட வேண்டும். அத்துடன் நான் நினைக்கிறேன் மாலையில் நாம் ப்ரசாதம் வினியோகிக்க வேண்டும்.