TA/Prabhupada 0060 - கருப்பொருளில் இருந்து உயிர் உற்பத்தி செய்ய முடியாது
Room Conversation with Svarupa Damodara -- February 28, 1975, Atlanta
பிரபுபாதர்: நாம் சொல்கிறோம் அதாவது உயிர், உயிர்வாழிகள், விந்துக்குள் இருக்கும் பொழுது மேலும் அது பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படுகிறது, பிறகு உடல் வளர்ச்சி பெறும். ஆரம்பம் உயிர். இது நடைமுறைக்குரியது. அத்துடன் இந்த உயிர் பரமன் உயிரின் ஓர் அங்க உறுப்பு. ஆகையினால் ஆரம்பம் இறைவனே. ஜன்மாதி அஸ்ய யதா: (ஸ்ரீ.பா.1.1.1) அதாது ப்ரமா ஜிஞாசா. ஆகையால் நாம் இந்த தத்துவத்தை இந்த வழித்தவரிச் செல்லும் உலகத்தில் நிலைநாட்ட வேண்டும். இதை தவிர, அவர்களால் ஏன் கருப்பொருளில் இருந்து உயிர் உற்பத்தி செய்ய முடியவில்லை? அவர்களுடைய அறிக்கையின் மதிப்பென்ன? அதாவது அவர்களால் அதை செய்ய முடியவில்லை. கருப்பொருளில் இருந்து உயிர் வருகிறது என்பதற்கான ஆதாரம் எங்கே? நீங்கள் அதை செய்யுங்கள். ஸ்வரூப தாமொதர: ஆதாரம் விசாரணையில் இருக்கிறது. பிரபுபாதர்: அது அர்த்தமற்ற சொற்கள். அது அர்த்தமற்ற சொற்கள். இந்த ஆதாரம், அது உயிரிலிருந்து, உயிர் வருகிறது, அங்கே ஆதாரம் இருக்கிறது, பல ஆதாரம். ஒரு மனிதன், மிருகம், மரம் - அனைத்தும் உயிரிலிருந்து வருகிறது. இன்றுவரை, ஒருவரும் மனிதன் ஒருவன் கல்லில் இருந்து பிறந்ததை பார்த்ததில்லை. ஒருவரும் பார்த்ததில்லை. சில சமயங்களில் அதை விரிஷ்சிக-தன்டூல-ந்யாய என்று அழைக்கிறார்கள். உங்களுக்கு அது தெரியுமல்லவா? விரிஷ்சிக-தன்டூல-ந்யாய. விரிஷ்சிக என்றால் தேள், தன்டூல என்றால் அரிசி. சில நேரங்களில் நாம் குவிக்கப்பட்ட அரிசி பார்க்கிறோம், தேள் வருகிறது. ஆனால் அரிசி தேளை பெற்று இருக்கிறது என்று கருதக் கூடாது. நீங்கள் உங்கள் நாட்டில் பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் அதை பார்த்திருக்கிறோம். அரிசியிலிருந்து, குவிக்கப்பட்ட அரிசியிலிருந்து ஒரு தேள், சிறிய தேள், வந்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் நடந்ததாவது தேளின் பெற்றோர்கள், அவர்கள் முட்டையை அரிசிக்குள் வைத்தனர், பின் பொரித்ததும், தேள்கள் வெளியே வருகின்றன, அரிசியிலிருந்து தேள்கள் உற்பத்தியாகவில்லை. ஆகையினால் அது விரிஷ்சிக-தன்டூல-ந்யாய. விரிஷ்சிக என்றால் தேள், மேலும் தன்டூல என்றால்அரிசி. ஆகையால் "உயிர் கருப் பொருளில் இருந்து வருகிறது" - இதைத்தான் விரிஷ்சிக-தன்டூல-ந்யாய என்று கூறுகிறோம். உயிர் கருப்பொருளில் இருந்து வர முடியாது. இதைத் தவிர, உதாரணத்திற்கு உயிர் இருக்கும் பொழுது, உயிர்வாழிகளின் உடல் வளர்கிறது, உடல் மாற்றம் அல்லது வளர்ச்சி அடைகிறது, நீங்கள் சொல்வது போல். ஆனால் குழந்தை இறந்துவிட்டாலோ அல்லது இறந்தே பிறந்தாலோ, பிறகு உடல் வளர்ச்சி அடையாது. பிறகு கருப்பொருள் உயிரின் மேல் வளர்கிறது.