TA/Prabhupada 0061 - இந்த உடல், தோல், எலும்பு, இரத்தம் நிறைந்த ஒரு பை



Northeastern University Lecture -- Boston, April 30, 1969

எனதருமை இளைஞர்களே, யுவதிகளே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்தடிருப்பதற்கு மிக்க நன்றி நாங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்பிவருகிறோம் ஏனென்றால், உலகெங்கும் இந்த இயக்கம் மிக பெறும் தேவையாக உள்ளது இந்த வழிமுறை மிக எளிதானது அதுவே இதன் சிறப்பு முதலில், உன்னத தளம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள் எங்களது வாழ்கை தரத்தை எடுத்துகொண்டால், நாங்கள் வேறுபட்ட தளத்தில் உள்ளோம் அதனால், நாம் முதலில் உன்னத தளத்தில் நிலை பெறவேண்டும். பிறகுதான் உன்னத தியானம் என்ற கேள்விக்கே இடம். பகவத் கீதை முன்றாவது அத்தியாயத்தில், நாம் வேறுபட்ட கட்டுண்ட நிலையில் உள்ளோம் என்பதை காணலாம். முதலில், இந்திரியாணி பரான் யாஹூர். சமஸ்க்ரிதம், இந்திரியாணி உடல் என்னும் கருத்துடைய வாழ்கை இந்த ஜட உலகில் உள்ள நாம் அனைவரும், உடல் என்னும் கருத்துடன் வாழ்கிறோம் . நான் இந்தியன் என நினைக்கிறேன் நீங்கள் அமெரிக்கர்கள் என நினைக்கிறீர்கள். சிலர் நினைக்கின்றனர் நான் ரஷ்யன், சிலர் வேறு ஏதவதாக நினைக்கின்றார்கள். அதனால், எல்லோருமே நான் இந்த உடல் என்றே நினைக்கின்றனர். இது ஒரு தரம், அல்லது ஒரு நிலை இது புலன்கள் சார்ந்து இருக்கும் நிலை ஏனென்றால் நாம் உடல் என்னும் கருத்துடன் வாழும்வரை, நாம் நினைக்கிறோம் இன்பம் என்றால் புலனின்பம். அவ்வளவுதான். இன்பம் என்றால் புலனின்பம், ஏனென்றால் உடல் என்றால் புலன்கள். அதனால், இந்திரியாணி பரான் யாஹூர் இந்திரியேப்ய: பரம் மன: பகவான் கிருஷ்ணர் கூருவது என்னவென்றால், ஜடம் என்னும் கருத்துடைய வாழ்கை, அல்லது உடல் என்னும் கருத்துடைய வாழ்கையில், புலன்கள் பிரதானமானது. இப்பொழுது இதுதான் நடந்து கொண்டுள்ளது, இப்பொழுது மட்டுமல்ல, உலகம் தோன்றியது முதலே அதுதான் வியாதி "நான் இந்த உடல்" ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது யஷ்யாத்மா புத்தி குணபே த்ரி தாதுகே ஸ்வ தீ க்ளத்ராதீஷு பௌம இஜ்ய தி: (ஸ்ரீ பா 10.84.13), "யாரொருவருக்கு நான் இந்த உடல் என்னும் புரிதல் உள்ளதோ " ஆத்ம புத்தி குணபே த்ரி தாது. ஆத்ம புத்தி என்றால் தோலும் எலும்பும் நிறைந்த பையில் உள்ள ஆத்மா இது ஒரு பை. இந்த உடல் தோல், இரத்தம், எலும்பு, மலம், ஜலம் மற்றும் பல நல்ல விசயங்கள் நிறைந்த ஒரு பை. தெரியுதா? அனால், இரத்தம், எலும்பு, மலம், ஜலம் நிறைந்த இந்த பைதான் நான் என நினைக்கிறேன். அதுதான் நமது அழகு, அதுதான் நம்முடைய எல்லாமே" நிறைய நல்ல கதைகள் உள்ளன. உறுதியாகவே நமக்கு நேரம் குறைவாகவே உள்ளது இருந்தாலும், ஒரு சிறுகதையை சொல்ல விரும்புகிறேன் ஒரு இளைஞன் அழகான ஒரு பென் மீது கவர்சியடைந்தான் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனாலும் அவன் வற்புறுத்தினான் இந்தியாவில் பெண்கள் தங்களது கர்ப்பை மிகவும் பாதுகப்பர் அந்த பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு அவள் கூறினால் ஒரு வாரம் கழித்து நீங்கள் வாருங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு வரசொல்லி நியமித்தாள். இளைஞனுக்கும் மிக்க மகிழ்ச்சி அந்த பெண் ஏழு நட்களும் பேதி மருந்தை உட்கொண்டாள். அதனால் அவள் இரவு பகலாக மலம் கழிப்பதும் வாந்தி எடுப்பதுமாக இருந்தாள், அந்த மலம் வாந்தி எல்லாவற்றையும் ஒரு நல்ல பாத்திரத்தில் வைத்திருந்தாள். நியமித்த நேரம் வந்தது, இளைஞன் வந்தான், அந்த பெண் வாசலில் அமர்ந்திருந்தாள். இளைஞன் விசாரித்தான், எங்கே அந்த பெண்? அவள் கூறினாள் "நானே அந்த பெண்" இல்லை, இல்லை, நீ அந்த பெண்ணல்ல, நீ அசிங்கமானவள், அவள் மிக அழகானவள். இல்லை, "நானே அந்த பெண்" அனால் எனது அழகை பாத்திரங்களில் பிரித்து வைத்துள்ளேன் "என்ன அது " அவள் காட்டினாள் "இதுதான் அழகு" மலமும் வாந்தியும். இதுதான் மூலப்பொருள். உண்மையில் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம் அவன் மூன்று அல்லது நான்கு முறை மலம் கழித்தால் உடனடியாக எல்லாமே மாறிவிடும். அதனால், எனது கருத்து என்னெவென்றால், ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, உடல் சார்ந்த எண்ணத்தோடு வாழும் வாழ்கை நன்மையை ஏற்படுத்தாது. யஷ்யாத்மா புத்தி குணபே த்ரி தாதுகே (ஸ்ரீ பா 10.84.13)