TA/Prabhupada 0063 - நான் ஒரு சிறந்த மிருதங்க விளையாட்டுகாரராக இருந்து இருப்பபேன்



Arrival Lecture -- Dallas, March 3, 1975

ஆகையால் இங்கிருக்கும் சூழ்நிலையை பார்க்கும் பொழுது எனக்கு மிகுந்த நிறைவாக இருக்கிறது. கல்வி என்றால் கிருஷ்ணர் உணர்வு. அதுதான் கல்வி. நாம் வெறுமனே புரிந்துக்கொண்டால் அதாவது "கிருஷ்ணர் நித்தியமானவர். அவர் அபாரம் நிறைந்தவர், நாம் அனைவரும் ஊழியர்கள். ஆகையால் நம் கடமை கிருஷ்ணருக்கு சேவை செய்வதாக்கும்." இந்த இரண்டு வரிகளை, நாம் புரிந்துக் கொண்டால், பிறகு நம் வாழ்க்கை பூரணமாகும். நாம் வெறுமனே கிருஷ்ணரை எவ்வாறு வணங்குவது என்று கற்றுக் கொண்டால், எவ்வாறு அவரை திருப்திபடுத்துவது, எவ்வாறு அவருக்கு அழகாக ஆடை அணிவிப்பது, எவ்வாறு சுவையான உணவு வகைகளை அளிப்பது, அழகான ஆபரணங்களும், மலர்களும் கொண்டு அவரை எவ்வாறு அலங்கரிப்பது, எவ்வாறு நம் மரியாதையான அஞ்சலியை அவருக்கு அளிப்பது, அவருடைய திருநாமத்தை எவ்வாறு ஜபிப்பது, இந்த வழியில், நாம் வெறுமனே சிந்தித்தால், எவ்வகை கல்வியும் கற்காமலே இந்த பூகோளத்தில் நாம் குறையற்ற முழுமையான மனிதனாக இருக்கலாம். இதுதான் கிருஷ்ணர் உணர்வு. இதற்கு அ-ஆ-இ-ஈ என்னும் கல்வி தேவையில்லை. இதற்கு வெறுமனே உணர்வு மாற்றம் தேவை. ஆகையால் இந்த குழந்தைகள் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலிருந்து கற்பிக்கப்பட்டால், எங்களுக்கு எங்கள் பெற்றோர்களால் இவ்வாறு ஆரம்பத்திலிருந்து பயிற்றுவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல துறவிகள் என் தந்தையின் வீட்டிற்கு வருகை தருவது வழக்கம். என் தந்தை வைஷ்ணவர். அவர் நானும் வைஷ்ணவராக வேண்டும் என்று விரும்பினார். எப்பொழுதெல்லாம் துறவிகள் வருகிறார்களோ, அவர்களிடம் அவர் கேட்பார், "தயவுசெய்து என் மகனை ஆசீர்வதியுங்கள் அவர் ராதாராணியின் சேவகனாக வேண்டும் என்று." அதுதான் அவருடைய பிரார்த்தனை. வேறு எதையும் வேண்டி பிரார்த்திக்கவில்லை. அத்துடன் அவர் எனக்கு மிருதங்கம் விளையாட கல்வி கொடுத்தார். என் தாயார் இதற்கு ஏதிர்பு தெரிவித்தார். அங்கு இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள் - ஒருவர் அ-ஆ-இ-ஈ கற்றுக் கொடுக்க மற்றவர் மிருதங்கம் கற்றுக் கொடுக்க. ஆகையால் ஒரு ஆசிரியர் காத்துக் கொண்டிருந்தார் மற்றவர் எனக்கு எப்படி மிருதங்கம் விளையாடுவது என்று கற்றுக் கொடுத்தார். ஆகையால் என் தாயாருக்கு கோபம் வந்தது "என்ன முட்டாள்தனம் இது? நீங்கள் மிருதங்கம் கற்றுக் கொடுக்கிறீர்கள்? இந்த மிருதங்கத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்வார்?" ஒருவேளை எதிர்காலத்தில் நான் ஒரு பெரிய மிருதங்கம் வாசிப்பாளராக வேண்டும் என்று என் தந்தை விரும்பி இருக்கலாம். (சிரிப்பொலி) ஆகையினால் நான் என் தந்தைக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன், அதனால் நான் என் .புத்தகத்தை, கிருஷ்ணா புத்தகத்தை, அவருக்கு சமர்பணித்தேன், அவர் அதை விரும்பினார். நான் சமயச் சொற்பொழிவாளராக வேண்டும் என்று விரும்பினார் பாகவத, ஸ்ரீமத்-பாகவதம், அத்துடன் மிருதங்கம் விளையாடவும், மேலும் ராதாராணியின் சேவகனாகவும் வர வேண்டும் என்று விரும்பினார். ஆகையால் ஒவ்வொரு பெற்றோரும் அவ்வாறு நினைக்க வேண்டும்; இல்லையென்றால் ஒருவர் தாய் தந்தையாக கூடாது. அதுதான் சாஸ்திரத்தில் இருக்கும் கட்டளை. அது ஸ்ரீமத்-பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, ஐந்தாம் காண்டம், பிதா ந ச ஸயாஞ் ஞநனீ ந ச சியாட் குரு ந ச சியாத் ஸவ-ஜநொ ந ச சியாத். இதன் வழியாக, இதன் முடிவுரை, ந மொசயெட் யஹ சமுபெத-ம்ரித்யும். தன் சிஷ்யனை காப்பாற்ற முடியாத ஒருவர் நிகழவிருக்கும் இறப்பு என்னும் ஆபத்திலிருந்து, அவர் குருவாக ஆகக் கூடாது. தன்னால் செய்ய முடியாவிட்டால் ஒருவர் அப்பா அல்லது அம்மாவாக கூடாது. இதன் வழியாக, நண்பர்கள் இல்லை, உறவினர்கள் இல்லை, தந்தை இல்லை, ஒருவரால் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியாவிட்டால் சாவின் பிடியிலிருந்து எவ்வாறு காப்பாற்ற முடியும். ஆகையால் அந்த கல்வி உலகம் முழுவதும் தேவைப்படுகிறது. அத்துடன் சாதாரண விஷயம் யாதெனில் இதை தவிர்க்க ஒருவர் இந்த பிறப்பின் சிக்கல், இறப்பு, முதுமையும் நோயும், வெறுமனே கிருஷ்ணர் உணர்வாகும் பொழுது.