TA/Prabhupada 0068 - கோஸ்வாமீக்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி பழக்கப்பட்டவர்கள்



Lecture on SB 6.1.45 -- Laguna Beach, July 26, 1975

நித்தாய்: "இந்த பிறவியில் ஒருவன் புரிகின்ற வேலைகளின் வகைகளுக்கு ஏற்றப்படி, தர்மமாக அல்லது அதர்மமாக இருந்தாலும், புரிந்தப்படியே அடுத்த பிறவியிலும் , அதே ஒருவன், அதே அளவிற்கும் அதே வகையில், தனது கர்மத்தின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் அல்லது துன்பப்படவேண்டும்." " பிரபுபாதர்: யேன யாவான் யதாதர்மோ தர்மோ வேஹ ஸம்ஹித: ஸ ஏவ தத்-பலம் புங்க்தே ததா தாவத் அமுத்ர வை (ஸ்ரீ.பா.6.1.45) ஆகையால் முந்தைய சுலோகத்தில் நாம் கலந்துரையாடினோம், தேஹவான் ந ஹி அகர்ம-க்ருத். இந்த ஜட சரீரத்தை பெற்ற அனைவருமே, வேலை செய்ய வேண்டும். எல்லோருமே வேலை செய்ய வேண்டும். ஆன்மிக சரீரத்திலும் நீங்கள் வேலை செய்ய வேண்டும். இந்த ஜட சரீரத்திலும் நீங்கள் வேலை செய்ய வேண்டும். ஏனென்றால், ஆன்மாவே அடிப்படையாக இயங்குகின்ற தத்துவம் - ஆன்மாவே வாழ்க்கையின் சக்தி- ஆகையினால் அவன் ஓய்வில்லாமல் இருப்பான். உயிரோடு உடல் இருந்தால், நடமாட்டம் இருக்கும். வேலை இருக்கும். அவர் பயனற்று உட்கார்ந்திருக்க முடியாது. பகவத் கீதையில் சொல்லிருக்கப்பட்டுள்ளது, "ஒரு கணத்திற்க்கும், ஒருவர் பயனற்று இருக்க முடியாது." அதுவே ஒரு உயிரினத்தின் அறிகுறி. ஆகையால், இந்த வேலை அந்தந்த உடலுக்கு ஏற்றப்படி நடந்து வருகின்றது. நாயும் ஒடுகின்றது, மனிதனும் ஓடுகிறார். ஆனால் மனிதன் மட்டும் வாகனங்களில் ஓடுகின்ற காரணத்தால் அவர் நாகரீகம் அடைந்ததாக நினைக்கின்றான். இருவருமே ஒடுககின்றார்கள், ஆனால் மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உடலை பெற்றிருக்கிறார்கள் அந்த உடலை வைத்து அவர் ஒரு வாகனத்தையோ அல்லது மிதிவண்டியையோ தயாரித்து ஒட்ட முடிகிறது. அவர் "நான் நாயை விட வேகமாக ஓடுகிறேன்; ஆகையால், நான் நாகரீகம் அடைந்துள்ளேன்." என்று நினைக்கிறார். இது தான் நவீன மனப்பான்மை. அவருக்கு தெரியாவிலை அதாவது ஓடிக்கொண்டிருப்பதற்கு உள்ள வித்தியாசம் என்ன ஐம்பது மைல்கல் வேகம் அல்லது ஐந்து அல்லது ஐந்தாயிரம் மைல்கல் வேகம் அல்லது ஐந்து இலட்சம் மைல்கல் வேகம் இந்த இடம் எல்லையற்றது. எந்த வேகத்தை நீங்கள் கண்டுபிடித்தாலும், இன்னும் போதவில்லை. இன்னும் போதுமற்றது. ஆகையால் இது வாழ்க்கையல்ல, "என்னால் நாயை விட அதிக வேகமாக ஓட முடியும், ஆகையினால் நான் நாகரீகம் அடைந்துள்ளேன்." பந்தாஸ் து கோடி-சத-வத்ஸர-ஸம்ப்ரம்யோ வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானாம் ஸோ'பி அஸ்தி யத் ப்ரபத-ஸீம்னீ அவிசிந்த்ய-தத்த்வே கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி (பி.ச.5.34) நம்முடைய வேகம்... எதற்க்கு வேகம்? நம்முடைய இலக்கை அடைவதற்க்குத்தான் நமது வேகம். ஆக உன்மையான இலக்கு, கோவிந்தா, விஷ்னு. அண்த் ந தே விது சவார்த்த-கதிம் ஹி விஷ்னு. அவர்கள் வெவ்வேறு வேகங்களில் ஒடுகின்றார்கள், ஆனால் அவர்கள் இலக்கு எது என்று தெரியவில்லை. நமது நாட்டில் புகழ்பெற்ற ஒரு கவிஞர், ரபின்தரநாத் தாகூர், அவர் ஒரு கட்டுரை எழுதினார் - நான் அதை பாடித்தேன் - அவர் லண்டனில் இருந்த போது. ஆகையால் உங்கள் நாட்டில், மேற்கத்திய நாடுகளில், வாகனங்கள், அவை மிக வேகமாக ஓடும். ரபின்தரநாத் தாகூர், அவர் ஒரு கவிஞர். அவர் நினைத்துக் கொண்டிருந்தார் அதாவது "இந்த ஆங்கிலேயர் நாடு மிகவும் சிறியது, மேலும் அவர்கள் அதிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் சமுத்திரத்தில் விழுந்துவிடுவார்கள்." அவர் அவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர்கள் ஏன் இத்தனை வேகமாக ஓடுகிறார்கள்? அதேபோல் நாமும் நரகத்திற்குச் செல்ல மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் நிலை, ஏனென்றால் நாம் போய்ச்சேர வேண்டிய இடம் நமக்குத் தெரியாது. நான் போகவேண்டிய இடம் எதுவென்று தெரியாமல் என் வாகனத்தை முழு வேகத்தில் ஓட்ட முயற்சி செய்தால், பிறகு அதன் முடிவு என்னவாகும்? அதன் முடிவு பேரழிவாகும். நாம் ஏன் ஓடுகிறோம் என்று நமக்குத் தெரிய வேண்டும். உதாரணத்திற்கு நதி மிக உயர்ந்த நீர்மட்டத்தில் ஓடுகிறது, வழிந்தோடுகிறது, ஆனால் அது போய்ச்சேரும் இடம் கடலாகும். நதி கடலுக்கு வரும் பொழுது, பிறகு அதன் போய்ச்சேர வேண்டிய இடம் முடிவடைந்துவிடும். ஆகையால், அதேபோல், போய்ச்சேர வேண்டிய இடம் எதுவென்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். போய்ச்சேர வேண்டிய இடம் விஷ்ணு, இறைவன். நாம் இறைவனின் அங்க உறுப்புகளாவோம். ஏதோ எப்படியோ, நாம் இந்த ஜட உலகில் வந்து விழுந்துவிட்டோம். ஆகையினால் நம் வாழ்வில் நாம் போய்ச்சேர வேண்டிய இடம் முழுமுதற் கடவுளை அடைதல். அதுதான் நாம் போய்ச்சேர வேண்டிய இடம். வேறு எந்த இடமும் இல்லை. ஆகையால் எங்களுடைய கிருஷ்ணர் பக்தி இயக்கம் இதை கற்பிக்கிறது. "நீங்கள் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை உறுதிப்படுத்துங்கள்." மேலும் அந்த வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? "வீடுபேரு அடைதல், முழுமுதற் கடவுளை சென்று அடைதல். நீங்கள் இந்த வழியில் போகிறீர்கள், எதிர்புறமாக, நரகத்தை நோக்கி. அது நீங்கள் போய்ச்சேர வேண்டிய இடம் அல்ல. நீங்கள் இந்த வழியில் போங்கள், முழுமுதற் கடவுளிடம்." அதுதான் எங்கள் பிரகடனம்.