TA/Prabhupada 0069 - நான் மரணமடைய போவதில்லை



Conversation Pieces -- May 27, 1977, Vrndavana

கீர்த்தானந்த: நீங்கள் நலமோடு இல்லாதபோது, எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

பிரபுபாதர்: நான் என்றும் நலமோடு இருக்கிறேன்.

கீர்த்தானந்த: உங்களது முதுமையை எங்களிடம் ஏன் தரமுடியாது?

பிரபுபாதர்: காரியங்கள் நல்ல முறையில் செயல்படுவதை காணும் பொழுது, நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உடம்பில் என்ன உள்ளது? இது வெறும் உடல். நாம் உடல் அல்ல.

கீர்த்தானந்த: தன் இளமையை தனது தந்தைக்கு கொடுத்தவர் புருதாசர் அல்லவா?

பிரபுபாதர்: ஹ்ம்?

ராமேஸ்வரா: யயாதி. யயாதி மன்னன் தன்னுடைய முதுமையை பரிமாற்றிக்கொண்டார்.

கீர்த்தானந்த: தன்னுடைய மகனோடு. தாங்கள் அவ்வாறு செய்யலாம்.

பிரபுபாதர்: (சிரிக்கின்றார்) யார் அவ்வாறு செய்தார்?

ராமேஸ்வரா: யயாதி மன்னன்.

பிரபுபாதர்: ஆ. யயாதி. இல்லை ஏன்? நீங்கள் என்னுடைய உடல் ஆகையால் நீங்கள் மேலும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வித்தியாசம் இல்லை. எவ்வாறு என்றால் நான் வேலை செய்துக் கொண்டிருக்கிறேன், என் குரு மகராஜரும் அங்கே இருக்கிறார், பக்திசித்தாந்த சரஸ்வதி. உடல் ரீதியாக இல்லாவிட்டாளும், அனைத்து செயல்களிலும் அவர் இருக்கின்றார். இதை நான் எழுதிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தமால கிருஷ்ண: ஆம், அது பாகவதத்தில் இடம் பெற்றிருக்கிறது, அதாவது "அவரோடு வாழ்வோர், நித்தியமாக வாழ்வார்." அவருடைய வார்த்தைகளை சிந்தையில் வைத்திருப்பவர் நித்தியமாக வாழ்வார்.

பிரபுபாதர்: ஆகையால் நான் இறக்க போவதில்லை. கீர்த்திர் யஸ்ய ச ஜீவதி:எவர் ஒருவர் கணிசமான ஒன்றை சாதித்திருக்கிறாரோ, அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்." நம் நடைமுறை வாழ்க்கையிலும் கூட, அவர் இறப்பதில்லை. நிச்சயமாக, இது ஜட உலகம். கர்ம பல. ஒருவர், தன்னுடைய கர்மத்தின் படியே, மற்றொரு உடலை ஏற்றுக்கொள்ளவேண்டும் ஆனால் ஒரு பக்தருக்கு இது போல் இல்லை. அவர் எப்பொழுதும் கிருஷ்ணருக்கு சேவை புரிவதற்கே, உடலை ஏற்றுக்கொள்கிறார். ஆகையால் அங்கே கர்ம-பல இல்லை.