TA/Prabhupada 0071 - கடவுளின் முரட்டுத்தனமான நேர்த்தியில்லாத மைந்தர்கள்
Room Conversation With French Commander -- August 3, 1976, New Mayapur (French farm)
நாம் அனைவரும் கடவுளின் முரட்டுத்தனமான நேர்த்தியில்லாத மைந்தர்கள். நாம் கடவுளின் மைந்தர்கள், அதில் சந்தேகமில்லை, ஆனால் இன்றைய நிலையில், முரட்டுத்தனமான நேர்த்தியில்லாதவர்கள். நம்முடைய விலைமதிப்பற்ற வாழ்க்கையை கூட விணடிக்கிறோம், நாம் வீண் துணிச்சல்காரர்கள். ஆகையால் கிருஷ்ணர் பக்தி இயக்கம் அவர்களுடைய கவனக்குறையை கண்கானித்து வீடுபெரு பெற்று முழுமுதற் கடவுளை சென்றடைய அவர்களுக்கு பொறுப்புணர்ச்சியை அளிக்கிறார்கள். இதுதான் கிருஷ்ணர் உணர்வு. ஆனால் மக்கள் கவனம் செலுத்துவதில்லை, கடவுளை பற்றி ஏதாவது சொன்ன உடனடியாக, அக்கணத்திலேயே அவர்கள் சிரிக்கிறார்கள், "ஓ, என்ன முட்டாள்தனம், கடவுள்." இதுதான் மிகப்பெரிய முரட்டுத்தனம். இந்தியா கடவுள் வழிபாட்டில் மிகவும் உக்கிரமாக இருந்தது. இன்னும், இந்தியா உக்கிரமாகவே இருக்கிறது. தற்போதய தலைவர்கள், இந்தியர்கள் தவறு செய்கிறார்கள், வெறுமனே கடவுளை நினைத்துக் கொண்டு - அவர்கள் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் போல் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆகையால் இதுதான் நிலைமை, மேலும் இது மிகவும் கடினமானது, இருப்பினும் கிருஷ்ணர் பக்தி இயக்கத்தைப் பற்றி சமயச் சொற்பொழிவாற்றுவதன் மூலம், இந்த மனித இனத்திற்கு ஏதாவது செய்யலாம். அதிர்ஷ்டமிக்கவர்கள், அவர்கள் வருவார்கள், கடுமையாக பின் பற்றுவார்கள். இந்த முரட்டுத்தனமான ஊதாரி மகன்கள், நம்மிடம் பல உதாரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, எவ்வாறு என்றால் கையிருப்பில் கொஞ்சம் பெற்றோல் இருக்கிறது அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது, அதாவது பெற்றோலால் வாகனங்களை ஓட்டலாம் குதிரை வண்டி தேவையில்லை என்று. ஆகையால் கோடிக்கணக்கான வாகனங்கள் உற்பத்தி செய்து அனைத்து எண்ணைகளையும் சேதப்படுத்துகிறார்கள். இது வீண் துணிச்சல். அது முடிந்து போனவுடன், அவர்கள் அழுகிறார்கள். அது அத்துடன் முடிந்துவிடும். இது நடந்துக் கொண்டிருக்கிறது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காத கவனமின்மை. விளைவுகளைப் பற்றி சிந்திக்காத ஒரு பையனைப் போல், தந்தையார் சிறிது சொத்துக்களை வைத்திருந்தார், அதை செலவழித்து, செலவழித்து. அது அவருக்கு கிடைத்த உடனடியாக, சீக்கிரமாக முடிந்துவிட்டது, அவ்வளவுதான். அதுதான் வீண் துணிச்சல் உடையவர்கள். உடம்பில் அங்கே கொஞ்சம் வலிமை இருக்கிறது, உடலுறவின் ரசனையை வாழ்க்கையில் கிடைத்தவுடன், "ஓ, செலவிடு, அதை செலவிடு," அனைத்து சக்தியும் செலவிடப்படுகிறது. மூளை ஒன்றும் இல்லாத நிலையை அடைகிறது. பன்னிரண்டாவது ஆண்டு தொடங்கி, முப்பது வருடத்திற்குள், அனைத்தும் முடிந்துவிடும். பிறகு அவர் ஆண்தன்மையற்றவராவார். நம் குழந்தைப் பருவத்தில் - குழந்தைப் பருவம் என்றால், எண்பது வருடங்களுக்கு முன், அல்லது நூறு வருடங்களுக்கு முன் - அப்போது வாகனங்கள் இல்லை. ஆனால் இப்பொழுது, எங்கு சென்றாலும், எந்த நாடானாலும், நீங்கள் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான வாகனங்களைக் காணலாம். இதுதான் விளைவுகளைப் பற்றி சிந்திக்காதது. நூறு வருடங்களுக்கு முன் அவர்களால் வாகனமின்றி இருக்க முடிந்தது, ஆனால் இன்று அவர்களால் வாகனமின்றி வாழ முடியவில்லை. இதன் வழியாக, அவசியமில்லாமல், அவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது பௌதிக ரீதியாகவோ வாழ்க்கையின் தேவைகளை அதிகரிக்கிறார்கள். இதுதான் விலைவுகளைப் பற்றி சிந்திக்காதது. இந்த அசட்டையான விளைவுகளுக்கு ஊக்கமூட்டுபவர்கள், நல்ல தலைவர்கள் எனப்படுகிறார்கள். மேலும் யார் சொல்வார்கள், "இந்த முட்டாள்தனத்தை நிறுத்தி, கிருஷ்ணர் உணர்வுக்கு வாருங்கள்," என்று. ஒருவரும் அக்கறை கொள்ளமாட்டார்கள். அந்தா யதாந்தைர் உபனீயமானாஸ் தே 'பீஸ-தந்த்ரியாம் உரு-தாம்னி பத்தா: (ஸ்ரீ.பா. 7.5.31). இதைத்தான் குருட்டு தலைவர்கள், குருட்டு தொண்டர்களை வழிநடத்திச் செல்வது என்று கூறுகிறோம். அவர்களுக்கு தெரியாது அதாவது இருவரும் கண்டிப்பான, கடுமையான இயற்கையின் சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள் என்று. (இடைவேளை), இயற்கையின் சட்டம் எவ்வாறு வேலை செய்கிறது. அவர்கள் முழுமையாக அறியாமை நிறைந்தவர்கள். அவர்களுக்கு தெரியாது. இது நவீன நாகரீகம். இயற்கையின் சட்டம் தன்னிச்சையாக இயங்க வேண்டும். அதற்கு நீங்கள் கவலைப்படுகிறீர்களோ இல்லையோ, அது உங்கள் விருப்பம், ஆனால் இயற்கையின் சட்டம் இயங்கும். ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸ்ர்வஷ (ப.கீ. 3.27). ஆனால் இந்த அயோக்கியர்கள், இயற்கையின் சட்டம் எவ்வாறு இயங்கும் என்று அவர்களுக்கு தெரியாது. இயற்கையின் சட்டத்தை முறியடிக்க அவர்கள் இயற்கைக்கு மாறான முறையில் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள், முட்டாள்தனமாக. இது விஞ்ஞானம், அயோக்கியர்களின் விஞ்ஞானம், இது இயலாதது, ஆனால் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதை அயோக்கியத்தனம் என்று கூறுகிறோம். முட்டாள்தனம். விஞ்ஞானிகள் அவ்வாறு கூறவில்லையா? "நாங்கள் முறியடிக்க முயற்சிக்கிறோம்." போக்கிரி, உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் இந்த போக்கிரிதனம் நடந்துக் கொண்டிருக்கிறது. மேலும் அவர்கள் உற்சாகம் அளிக்கிறார்கள், "ஓ, மிக்க நன்று, மிக்க நன்று, மிக்க நன்று." "ஓ, நீங்கள் சந்திர கோளத்திற்குச் செல்கிறீர்கள்." ஆனால் அனைத்து முயற்சிகளுக்கும் பிறகு, திராட்சைப்பழம் புளிக்கிறது: "அது பயன்படாது." அவ்வளவுதான். உங்களுக்கு இந்த கதை தெரியுமா? அந்த நரி? அது திராட்சைக்காக முயற்சித்து, குதித்துக் கொண்டு, குதித்துக் கொண்டு, குதித்துக் கொண்டு. அது தோல்வியடைந்ததும், அது சொன்னது, "ஓ, அது பயனற்றது. அது புளிப்பானது, பயனற்றது." (சிரிப்பொலி) ஆகையால் அவர்களும் அவ்வாறு செய்கிறார்கள். நரிகள் குதிக்கின்றன, அவ்வளவுதான். இந்த போக்கிரிகள் எவ்வாறு பயனில்லாமல் குதிக்கின்றனர் என்று நாம் பார்க்க முடிகிறது. (சிரிப்பொலி) ஆகையால் நாங்கள் மக்களை எச்சரிக்கின்றோம் இந்த முட்டாள் நரியை பின்பற்ற வேண்டாம். விவேகமாக இருந்து கிருஷ்ணர் உணர்வில் இருங்கள். அது உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாகும்.