TA/Prabhupada 0072 - எல்லோரும் வேலை செய்ய வேண்டும்



Lecture on CC Madhya-lila 20.108-109 -- New York, July 15, 1976

ஆகையால் ஒருவரும் எஜமானராக முடியாது, அது சாத்தியமல்ல. இந்த விதிமுறையில் நீங்கள் காணலாம், எகலெ ஈஸ்வர கிருஷ்ண ஆர சபா ப்ரித்ய (ஸி.ஸி.ஆதி5.142). கிருஷ்ணர் மட்டுமே எஜமானர், மற்ற எல்லோரும் சேவகர்கள். இதுதான் நம், உண்மை நிலைப்பாடு. ஆனால் நாம் செயற்கையாக எஜமானராக முயற்சிக்கிறோம். அதுதான் தொடர்ந்து உயிர்வாழ போராட்டம். நாம் அல்லாத ஏதோ ஒன்றுக்கு நாம் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு இந்த வார்த்தைகள் தெரியும், "தொடர்ந்து உயிர் வாழ போராடு," "திறமைசாலிகள் தொடர்ந்து உயிர் வாழ." ஆகையால் இதுதான் போராட்டம். நாம் எஜமானர்கள் அல்ல; இருப்பினும், நாம் எஜமானராக முயற்சிக்கிறோம். மாயாவத தத்துவம், அவர்களும் கடுமையாக எளிமையான பிராயச்சித்தம், தவத்திற்கு உடன்படுகிறார்கள், ஆனால் அதன் எண்ணம் என்ன? எண்ணம் யாதெனில் "நான் இறைவனுடன் இருப்பவர்களில் ஒருவராவேன்." அதே தவறு. அதே தவறு. அவர் இறைவனல்ல, ஆனால் அவர் இறைவனாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிறைய கடுமையான பிராயச்சித்தம் புரிந்த போதிலும், வைராக்ய, துறவறம், அனைத்தும், சில சமயங்களில் ஜட மகிழ்ச்சியை துறந்துவிடுவார்கள், காட்டிற்குச் சென்று, கடுமையான பிராயச்சித்தம் மேற் கொள்வார்கள். அதன் எண்ணம் என்ன? "இப்பொழுது நான் இறைவனுடன் இருப்பவரில் ஒருவராவேன்." அதே தவறு. ஆகையால் மாயா மிகுந்த பலம் பொருந்தியது, அதாவது இந்த தவறுகள் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைந்த ஒருவரிடமு தொடர்கிறது. இல்லை. ஆகையினால் சைதன்ய மஹாபிரபு உடனடியாக முக்கியமான கருத்தை தன் வழிமுறைகளால் தொடுகிறார். அதுதான் சைதன்ய மஹாபிரபுவின் தத்துவாம். கிருஷ்ணர் கடைசி வார்த்தையாக கூறுகிறார், ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (ப.கீ18.66). அவர் நிலைப்பாட்டைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்; அவர்தான் கிருஷ்ணர், முழுமுதற் கடவுள். அவர் கேட்கிறார், அதிகாரத்துடன் கேட்கிறார், "அயோக்கியர்களாகிய நீங்கள், அனைத்தையும் கைவிட்டுவிடுங்கள். சும்மா என்னிடம் சரணடைந்துவிடுங்கள். பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்." இதுதான் பகவத் கீத்தையின் கடைசி அறிவுரை. சைதன்ய மஹாபிரபு, அதே கிருஷ்ணரே ஆனால் கிருஷ்ணரின் பக்தராக நடிக்கிறார்; ஆகையினால் அவர் ஒரே கருத்தை கூறுகிறார். கிருஷ்ணர் கூறுகிறார், "நீங்கள் சரணாடையுங்கள்," அத்துடன் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார் அதாவது "ஒவ்வொரு உயிர்வாழிகளும் கிருஷ்ணரின் சேவகர்கள்." அப்படியென்றால் அவர் சரணடைய வேண்டும். சேவர்களின் வேலை சரணடைவது, "நான் உங்களுக்குச் சமமானவர்." என்று வாக்குவாதம் செய்யவோ அல்லது உரிமைக்கொரவொ அல்ல. இதுவெல்லாம் மதவெறித்தனம், பைத்தியக்கார ஆலோசனை. பிஸாஸீ பாலெ யெந மதி-சசன்னா ஹய மாயா-க்ரஸ்த ஜீவரசெ தாஸ உபஜெய ஒரு சேவகன் எஜமானராக முடியாது. அது சாத்தியமல்ல. ஆனால் இயன்றவரை விரைவாக. இந்த தவறான எண்ணத்துடன் வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்கும் காலம் வரை, அதாவது "நான் எஜமானர் அல்ல; நான் சேவகன்," அல்ல "நான் சேவகன் அல்ல; நான் எஜமானர்," பிறகு அவர் கஷ்டப்படுவார். பிறகு மாயா அவருக்கு துன்பமிளிப்பார். தைவி ஹ்யேஷா. உதாரணத்திற்கு ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், வஞ்சகர்களும் திருடர்களும், அவர்கள் அரசாங்கத்தின் சட்டத்தை மீறுவார்கள்: "அரசாங்கத்தை பற்றி எனக்கு அக்கறை இல்லை." ஆனால் அப்படியென்றால் அவர்கள் தானே விரும்பி துன்பத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அரசாங்கத்தின் சட்டத்திற்கு அவர்கள் அக்கறை காட்ட வேண்டும். அவர் சாதாரணமாக அக்கறை கொள்ளாவிட்டால், ஒதுக்கப்பட்டுவிடுவார், பிறகு அவர் சிறையில் தள்ளப்படுவார் மேலும் பலவந்தமாகவும், அடிப்பதன் வழியும், தண்டிப்பதின் மூலமும், அவர் ஏற்றுக் கொள்ள வைக்கப்படுவார்: " சரி, சரி நான் ஏற்றுக்கொள்கிறேன்." ஆகையால் இதுதான் மாயா. தைவி ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா (ப.கீ.7.14). நாம் மாயாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறோம். ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ (ப.கீ.3.27). ஏன்? ஏனென்றால் நாம் எஜமான் என்று பிரகடனம் செய்துக் கொண்டிருக்கிறோம். சேவகன் எஜமானராக பிரகடனம் செய்துக் கொண்டிருக்கிறார்; ஆகையினால் கஷ்டப்படுகிறார். "நான் எஜமான் அல்ல; நான் சேவகன்," என்று உடனடியாக ஏற்றுக் கொண்டதும், பிறகு அங்கு கஷ்டம் இல்லை. மிகவும் எளிமையான தத்துவம். அதுதான் முக்தி. முக்தி என்றால் சும்மா சரியான தளத்திற்கு வருவது. அதுதான் முக்தி. முக்தி ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, முக்திர் ஹித்வான்யதா ரூபம் ஸ்வ-ரூபேண வ்யவஸ்திதி: (ஸ்ரீ. பா.2.10.6). முக்தி என்றால் பொருத்தமற்ற தொழிலை விட்டுவிடுதல், அன்யதா. அவர் ஒரு சேவகன், ஆனால் தான் எஜமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் அன்யதா, சும்மா எதிர்மறை. ஆகையால் அவர் வாழ்க்கையின் எதிர்மறை கருத்தை அதாவது தான் ஒரு எஜமான் என்பதை கைவிட்டால், பிறகு அவர் முக்தி அடைவார்; அவர் உடனடியாக விடுதலை அடைகிறார். முக்தி அதிக நேரம் எடுக்காது அதாவது நீங்கள் கடுமையான துறவறம் மேற்கொள்ள மேலும் காட்டிற்குச் சென்றும் இமயமலைக்குச் சென்று தியானம் செய்து உங்கள் மூக்கை அழுத்தியும் இன்னும் நிறைய விதங்கள் செய்ய தேவையில்லை. அதற்கு நிறைய காரியங்கள் தேவையில்லை. வெறுமனே சாதாரண காரியங்களை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள், அதாவது "நான் கிருஷ்ணரின் சேவகன்" - நீங்கள் உடனடியாக முக்தா ஆகிவிடுவீர்கள். அதுதான் ஸ்ரீமத் பாகவதத்தில் முக்திக்கு கொடுக்கப்பட்ட விளக்கம். முக்திர் ஹித்வான்யதா ரூபம் ஸ்வ-ரூபேண வ்யவஸ்திதி: எவ்வாறு என்றால் சிறைச்சாலையில் இருக்கும் கைதி கூட, அவர் பணிவுள்ளவராக மாறி "இப்பொழுதிலிருந்து நான் சட்டத்திற்கு அடிபணிவேன். நான் பிறகு அரசாங்கத்தின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து பணிந்து நடப்பேன்," பிறகு சிலசமயம் அவர் பிரகடனம் செய்ததின் மூலம் முன் கூட்டியே விடுதலை பெறுவார். ஆகையால் நாம் உடனடியாக சிறைச்சாலை என்னும் ஜட வாழ்க்கையிலிருந்து விடுதிலை பெறுகிறோம். நாம் சைதன்ய மஹாபிரபு கற்பித்ததை ஏற்றுக் கொண்டால், ஜீவெர ஸ்வரூப ஹேய நித்ய கிருஷ்ணர தாஸ (ஸி.ஸி.20.108.109).