TA/Prabhupada 0073 - வைகுண்டம் என்றால் மனக்கவலை இல்லாதது



Lecture on BG 10.2-3 -- New York, January 1, 1967

இந்த சங்கத்தில்தான் நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. நீங்கள் இந்த கலையை கற்றுக்கொண்டு, பிறகு உங்கள் வீட்டிலேயே நீங்கள் நடத்தலாம். நீங்களும் இது போன்ற முன்னேற்பாடாக தயாரித்து, நல்ல தயாரிப்புகளை, உங்கள் இல்லத்தில் செய்து, கிருஷ்ணருக்கு சமர்ப்பியுங்கள். அது ஒன்றும் சிரமமானதல்ல. நாங்கள் தினமும் உணவு தயாரித்து கிருஷ்ணருக்கு சமர்ப்பிப்போம் அத்துடன் மந்திரம் ஜபிப்போம், நமோ ப்ராமண்ய-தேவாய கோ-ப்ராமண-ஹிதாய ச ஜெகத்-தித்யாய கிருஷ்ணாய கோவிந்தாய நமோ நமஹ அவ்வளவுதான். அது ஒன்றும் மிக கடினமல்ல. ஒவ்வொருவரும் உணவு தயாரிக்கலாம் மற்றும் கிருஷ்ணருக்கு சமர்ப்பித்து, பிறகு பிரசாதத்தை எடுத்துக் கொள்ளலாம், அதன் பிறகு குடும்ப அங்கத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ நீங்கள் அமர்ந்து கிருஷ்ணரின் படத்திற்கு முன் ஜபிக்கலாம், ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மேலும் தூய்மையான வாழ்க்கை வாழுங்கள். சும்மா அதன் பலனை பாருங்கள். அனைத்து இல்லங்களிலும், ஒவ்வொரு மனிதனும், கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளும் கொள்கையை எடுத்துக் கொண்டால், அது வைகுண்டமாகிவிடும் உலகம் முழுவதும் வைகுண்டமாகிவிடும். வைகுண்தா என்றால் அங்கு கவலை என்பது இல்லை. வைகுண்தா. வை என்றால் இல்லாமை, மேலும் குண்தா என்றால் கவலை. இந்த உலகம் மிகுந்த கவலை நிறைந்தது. ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத் (ஸ்ரீ.பா.7.5.5). நாம் இந்த தற்காலிக பௌதிக வாழ்க்கையை ஏற்றுக் கொண்டோம், ஆகையால் நமக்கு எப்பொழுதும் கவலையால் தடங்கள் ஏற்படுகிறது. ஆன்மீக உலகில் இதற்கு நேர்மாறாக உள்ளது, கொள்கள் அவ்விடம் வைகுண்த என்று அழைக்கப்படுகிறது. வைகுண்த என்றால் கவலை இல்லாதது. நாம் கவலைகளிலிருந்து விடுதலை பெற விரும்புகிறோம். ஒவ்வொருவரும் தன்னைத்தானே கவலையிலிருந்து விடுதலை பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு எவ்வாறு வெளியேறுவது என்று தெரியவில்லை. இந்த போதைப் பொருளில் புகலிடம் கொள்வது கவலையிலிருந்து ஒருவர் விடுதலை பெற உதவாது. அது போதைப் பொருள். அது மறந்து போகும் நிலை உண்டாக்கும். சில நேரம், சில நேரத்தில் நாம் அனைத்தையும் மறந்துவிடுவோம், ஆனால் மறுபடியும் சுயநினைவு பெறும்பொழுது அதே கவலையும் அதே காரியங்களும் அங்கே இருக்கும். ஆகையால் இது உங்களுக்கு உதவாது. நீங்கள் கவலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், மேலும் உங்களுக்கு உண்மையிலேயே வேண்டுமானால் வாழ்க்கை நித்தியமான நிறைவான அத்துடன் அறிவு, மேலும் இதுதான் செயல்முறை. இதுதான் செயல்முறை, நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக்கொள்ள வேண்டும். இங்கு இது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது அதாவது ந மே விது: ஸுரகணா: (ப.கீ.10.2) ஒருவருக்கும் புரியாது. ஆனால் அதற்கு ஒரு வழியுண்டு. செவொன்முக்ஹி ஜிவாடோ ஸ்வயம் ஏவ ஸ்வுரதி அதஹ (ப. ச.1.2.234) இதுதான் செயல்முறை. ஸ்ரீமத் பாகவதத்தில் பல இடங்களில் இந்த செயல்முறை வேறுபட்ட முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒரு இடத்தில் கூறப்பட்டது ஜ்ஞானே ப்ரயாஸம் உதபாஸ்ய நமந்த ஏவ ஜீவந்தி ஸன்-முகரிதாம் பவதீய-வார்தாம் ஸ்தானே ஸ்திதா: ஸ்ருதி-கதாம் தனு-வாங்-மனோபிர் யே ப்ராயஸோ (அ)ஜித ஜிதோ (அ)பி அஸி தைஸ் த்ரி லோக்யாம் (ஸ்ரீ.பா.10.14.3) இது மிக அருமையான கவிதை. இங்கு சொல்லப்படுவது யாதெனில் அஜித, ஒருவருக்கும் தெரியாது. இறைவனின் மற்றொரு பெயர் அஜித. அஜித என்றால் ஒருவராலும் அவரை வெற்றிக் கொள்ள முடியாது. ஒருவராலும் அவரை அணுக முடியாது. ஆகையினால் அவர் பெயர் அஜித. ஆகையால் அஜித வெற்றிக் கொள்ளப்படுகிறார். அஜித ஜிதொ அப்யாஸி. இறைவன் அறியப்படாதவராயினும், இறைவன் வெற்றிக் கொள்ளப்படாதவராயினும், இருப்பினும், அவர் வெற்றிக் கொள்ளப்பட்டார். எவ்வாறு? ஸ்தானே ஸ்திதா:.