TA/Prabhupada 0079 - எனக்கு எந்த ஆதாயமும் இல்லை



Lecture on SB 1.7.6 -- Hyderabad, August 18, 1976

இதோ இந்த வெளிநாட்டு வாசிகள், அவர்கள் இந்துகளோ, இந்தியர்களோ அல்லது பிராமணர்களோ இல்லை.. அவர்கள் எப்படி ஏற்று கொள்கிறார்கள்? அவர்கள் முட்டாள்களோ அல்லது மூர்க்க தனமானவர்களோ அல்ல... அவர்கள் மரியாதை மிகுந்த குடும்பங்களில் இருந்து வந்து இருக்கிறார்கள்...நன்கு படித்தவர்கள். நமது கிருஷ்ண பக்தி சங்கங்கள் இராணில் கூட இருக்கிறது. நான் அங்கிருந்து தான் சற்று முன்னர் தெஹ்ராநில் இருந்து தான் வந்தேன்.. நாம் நிறைய முஸ்லிம் சமுதாய மாணவர்களை பெற்றுள்ளோம். அவர்களும் இதை ஏற்று கொண்டுளார்கள். ஆஃப்ரிகா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலும் நமது மார்கங்களை ஏற்று கொண்டுளார்கள்.. இந்த உலகம் முழுவதும். இதுவே சைதன்ய மகா பிரபுவின் குறிக்கோள்... ப்ṛதீவ்īதே āசே யாத நகர்āடி க்ர்āமா சர்வற்ற ப்ராக்āரா ைபே மோரா ன்āமா இதுவே சைதன்ய மகா பிரபுவின் கணிப்பு... இந்த உலகத்தில் நிறைந்துள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் போல, கிருஷ்ண பக்தி இயக்கத்தின் செயல்பாடுகள் விரிந்து பரவும்.. ஆனால் அந்த புகழ் என்னை சேர்ந்தது அல்ல.. ஒரு சிறிய முயற்சி.. பணிவான முயற்சி.. யாராவது ஒருவரால் செய்ய முடியும் என்றால், அதில் சிறிய வெற்றியும் இருக்குமேயனால்.... ஏன் நாமெல்லாம் செய்ய கூடாது? சைதன்ய மகா பிரபு இந்தியர்கள் அனைவருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கி உள்ளார்.. ப்āராதா-ப்ūமீதே ஹைல மனுṣய-ஜன்ம ய்āரா (ஸீஸீ அடி 9.41). அவர் மனிதர்களிடம் பேசுகிறார். நாய் அல்லது பூனை இடம் அல்ல.. ஆகவே, மனுṣய-ஜன்ம ய்āரா ஜன்ம ச்āறித்தக கரி'. முதலில், வாழ்க்கையின் பயன் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. அதுதான் ஜென்ம சார்தக.. ஜன்ம ச்āறித்தக கரி' கார பார-உப்பக்āரா செல்லுங்கள்... கிருஷ்ண பக்திக்கு எல்லா இடங்களிலும் நல்ல தேவை இருக்கிறது...