TA/Prabhupada 0081 - சூரிய கோளத்தில் உடல்கள் நெருப்பை போன்று இருக்கும்



Lecture on BG 2.13 -- New York, March 11, 1966

ஆகவே, இங்கே சொல்ல பட்டு இருப்பதாவது, தீரா, தீரா தேஹினோ 'ஸ்மின் யத்ā டேஹே கௌம்āராṁ யௌவனṁ ஜார்ā தத்ā டெāந்தார-ப்ர்āபிதிர் ட்īராஸ் ட்யாட்ர நா முஹயடி (ப்க் 2.13) தேஹினா. தேஹினா என்றால் இந்த உடலை ஏற்று கொண்டவர்களை குறிப்பது. அஸ்‌மிந். அஸ்‌மிந் என்பதன் பொருள், "இந்த உலகத்தில்" அல்லது "இந்த வாழ்க்கையில்" ய்யாத என்பது தேஹி. தேஹி என்பது "இந்த உடலுக்குள்" ஏனென்றால் தேஹினா என்பதன் பொருள், " யார் ஒருவர் இந்த உடலை ஏற்று கொண்டார்களோ" , தேஹி என்பது "இந்த உடலுக்குள்" ஆகவே, நான் இந்த உடலுக்குள் உட்கார்ந்து இருக்கிறேன். ஆனால் நான் இந்த உடல் அல்ல. நீங்கள் உங்கள் ஆடைக்குள் இருப்பதுபோல. அதைப்போலவே நானும் இந்த உடலுக்குள் இருக்கிறேன், ஒன்று உருவ உடல். மற்றொன்று சூட்சுமமான உடல். இந்த உருவ உடல் நீர், நிலம், காற்று,ஆகாயம் மற்றும் நெருப்பினால் செய்யப்பட்டுள்ளது. இந்த உருவ உடல், இது நமது உலகியல் சார்ந்த உடல். இந்த பிரபஞ்சத்தில், பூமி மிக முக்கியம் வாய்ந்தது. எல்லா இடங்களிலும் இந்த உடல், பூத உடல் ஐந்து பொருட்களால் செய்ய பட்டுள்ளது. நீர், நிலம்,காற்று, ஆகாசம் மற்றும் நெருப்பு. இதுவே அந்த ஐந்து பொருட்கள். ஒரு கட்டிடத்தை போல. இந்த கட்டிடம் பூமி, நீர் மற்றும் நெருப்பினால் கட்டப்பட்டுள்ளது. ஏதோ ஒரு இடத்தை தெரிவு செய்து, பின்பு செங்கல் செய்து அதன் பின் நெருப்பு போடுகிறீர்கள். மணலை தண்ணீரில் குழைத்து, செங்கல் வடிவில் செய்து அதன் பின் செங்கல் சூளையில் போடுகிறீர்கள். அது நன்கு கடினமான பின்பு, அதை பெரிய கட்டிடம் போல செய்கிறீர்கள். கட்டிடம் என்பது மண், நீர், மற்றும் நெருப்பு சேர்ந்த கலவை தவிர வேறு ஒன்றும் கிடையாது. அவ்வளவே. அதை போலவே, நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பு இவைகளை கொண்டே நமது உடலும் செய்ய பட்டுள்ளது. காற்று. காற்று உள்ளே புகுகிறது. நாம் சுவாசிக்கிறோம். உங்களிலுக்கு தெரியும். காற்று எப்போதும் இருக்கும். நமது புறத்தோல் பூமி. நெருப்பு வயிற்றில் உள்ளது. வெப்பம் இல்லாமல் உங்களால் எதையும் ஜீரணிக இயலாது. நீங்களே பார்க்கலாம். வெப்பம் குறைய குறைய, உங்கள் ஜீரன சக்தி குறைக்கிறது. இது போன்று நிறைய விஷயங்கள். இதுதான் ஏற்பாடு. இந்த பிரபஞ்சத்தில், மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த பூமியில் நாம் இந்த உடலை பெற்று உள்ளோம். இதைப்போலவே, வேறு சில கிரகங்களில், நீர் மிக முக்கியமானது, வேறு சில இடங்களில், நெருப்பு மிக முக்கியமானது, சூரிய கிரகத்திலும் உடல் உண்டு. அங்கேயும் கூட உயிரினங்கள் இருக்கிறது. ஆனால் அவைகளின்உடல் நெருப்பில் எரிவதற்கு ஏற்றார் போல உள்ளது அந்த நெருப்பில் கூட அவைகளால் உயிர் வாழ முடியும். அதைப்போலவே, வருண உலகத்திலும், வெள்ளி கிரகத்திலும். அனைத்து கிரங்கங்களிலும், அவர்கள் வித்தியாசமான உடல் அமைப்பை பெற்று உள்ளார்கள். இங்கே நீங்கள் நீரில் அந்த அனுபவத்தை பெறுவது போல. நீர்வாழ் உயிரினங்கள், அவைகள் வேறு விதமான உடல் அமைப்பை பெற்று உள்ளன. காலம் காலமாக நீர்வாழ் உயிரினங்கள் தண்ணீருக்கு உள்ளேயே இருப்பதால், மிக வசதியாக இருக்கின்றன. தண்ணீரில் இருந்து நீங்கள் அவைகளை வெளியில் தரைக்கு கொண்டுவந்த சில நொடிகளில் அது இறந்துவிடும். அதைப்போலவே, நீங்கள் பூமியில் மிக இயல்பாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களை தண்ணீரில் போட்ட சில நிமிடங்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள். ஏனெனில், உங்களுடைய உடல் அமைப்பு வேறு விதமானது, அவைகளின் உடல் அமைப்பு வேறு விதமானது. பறவைகளின் உடல் கூறு பறவை, பெரிய பறவை, அதனால் பறக்க முடியும். கடவுள் அவைகளை பறக்கும் இயந்திரமாக படைத்துள்ளார். ஆனால், மனித்தால் செய்யப்பட்ட இயந்திரம், நொறுங்கிவிடும். ஏனென்றால், அது செயற்கையானது. ஆகவே இதுதான் ஏற்பாடு. ஒவ்வோர் உயிரினமும் தனக்கென ஒரு உடல் அமைப்பை பெற்று உள்ளன. தேஹினோ 'ஸ்மின் யத்ā டேஹே (ப்க் 2.13). அந்த உடலின் இயற்கை அமைப்பு என்ன? இப்பொழுது, எப்படி நமது உடலை மாற்ற முடியும் என்கிற கருத்து விளக்கப்பட்டுள்ளது. எப்படி... ஆனால்..ஆனால். அது நமக்கு கடினமான பிரச்னை ஏனென்றால் நாம் முழுவதுமாக ஈர்க்க பட்டுள்ளோம். இந்த உடலை ஆன்மாவுடன் அடையாள படுத்தும் சிந்தனை நான் இந்த உடல் அல்ல என்பதை புரிந்து கொள்ளுவதேஆன்மீக அறிவிற்கு முதல் படி. யாரொருவர் நான் இந்த உடல் அல்ல என்பதை ஏற்று கொள்ள மறுக்கிறார்களோ, அவர்கள் ஆன்மீக வழிக்கு வர முடியாது. ஆகவே, பகவத் கீதையின் முதல் படம் இதன் வழியிலேயே உள்ளது. ஆகவே இங்கே, . அஸ்‌மிந். இங்கே தேஹி, ஆன்மா. ஆன்மா. தேஹி என்றால் ஆன்மா. யாரொருவர் இந்த உடலை, பூத உடலை ஏற்று கொண்டு உள்ளார்களோ, அவர் தேஹி என்று அழைக்கப்படுவார். ஆகவேஅஸ்‌மிந், அவர் அங்கு இருக்கிறார். ஆனால் அவர் உடல் மாறிக்கொண்டே இருக்கிறது.