TA/Prabhupada 0098 - கிருஷ்ணரின் அழகால் கவரப்படுங்கள்



The Nectar of Devotion -- Vrndavana, November 11, 1972

மதன-மோஹன. மதன என்றால் பாலியல் ஈர்ப்பு. மதன, பாலியல் ஈர்ப்பு, மன்மதன், மற்றும் கிருஷ்ணர், மதன-மோஹன என்று அழைக்கப்படுகிறார். ஒருவர், கிருஷ்ணரால் கவரப்பட்டிருந்தால் பாலியல் ஈர்ப்பைக் கூட புறக்கணிக்கலாம். அதுதான் சோதனை. மன்மதர் இந்த ஜட உலகையே கவர்கிறார். எல்லோரும் பாலியல் வாழ்க்கையால் கவரப்பட்டிருக்கிறார்கள். இந்த ஜட உலகம் முழுதும் பாலியல் வாழ்க்கையின் அடிப்படையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.45). இங்கு சந்தோஷம் என்பது மைதுன, மைதுனாதி. மைதுனாதி என்றால் இங்கு சந்தோஷம் மைதுனாவிலிருந்து தொடங்குகிறது, அதாவது உடலுரவு. பொதுவாக, மக்கள்... ஒருவன் திருமணம் செய்கிறான். அதன் நோக்கம், பாலியல் ஆசையை திருப்தி படுத்துவது தான். பிறகு பிள்ளைகளை பெறுகிறான். மறுபடியும், பிள்ளைகள் வளர்ந்தவுடன், அவர்கள், பெண் ஒரு ஆணை மணம் புரிகிறாள், ஆண் ஒரு பெண்ணை மணம் புரிகிறான். அதுவும் அதே நோக்கத்துடன் தான்: உடலுறவு. பிறகு மறுபடியும் பேரப்பிள்ளைகள். இப்படியாக, இந்த பௌதிக இன்பம் - ஸ்ரீயைஷ்வர்ய - ப்ரஜெப்ஸவ:. அன்றொரு நாள் நாம் கலந்துரையாடினோம். ஸ்ரீ என்றால் அழகு, ஐஸ்வரிய என்றால் செல்வம், மேலும் ப்ரஜா என்றால் சந்ததிகள். ஆக பொதுவாக, மக்கள் அதை விரும்புகிறார்கள் - நல்ல குடும்பம், வங்கியில் ஒரு அம்சமான சேமிப்பு, மேலும் நல்ல மனைவி, நல்ல மகள், மருமகள். ஒரு குடும்பத்தில் அழகான பெண்களும், செல்வமும், புகழ்வாய்ந்த... பல பிள்ளைகளும் நிறைந்திருந்தால், அவன், வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாக கருதப்படுகிறான். அவன் வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றிபெற்ற மனிதனாக கருதப்படுகிறான். எனவே சாஸ்திரம் கூறுகிறது, "இது என்ன வெற்றி? இந்த வெற்றி உடலுறவுடன் ஆரம்பமாகிறது. அவ்வளவுதான். மேலும் அதன் விளைவுகளை பராமரிப்பது." ஆக, யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.45). இங்கு சந்தோஷம் என்பது உடலுறவிலிருந்து ஆரம்பமாகிறது, மைதுனாதி. நாம் இதை வேறுவிதமாக அழகுபடுத்தி செய்யலாம், ஆனால் இந்த மைதுனா, பாலியல் இன்பம், பன்றிகளிடமும் உள்ளது. பன்றிகளும் நாள் முழுதும் உண்ணுகின்றன, இங்கும் அங்கும் சென்று: "கழிவு எங்கே? "எங்கே கழிவு?" மேலும் வித்தியாசம் பார்க்காமல் பாலுறவு கொள்கிறது. பன்றிகள், அம்மா, தங்கை அல்லது மகள் என்று வித்தியாசப்படுத்துவதில்லை. எனவேதான் சாஸ்திரம் கூறுகிறது, "இங்கு, இந்த ஜட உலகில், நாம் சிக்கியிருக்கிறோம், நாம் இந்த ஜட உலகில் வெறும் இந்த பாலியல் இன்பத்திற்காக சிறைப்பட்டு இருக்கிறோம்." அதுதான் மன்மதர். மன்மதர் பாலியல் வாழ்க்கைக்கு பொறுப்பான தேவர், மதன. ஒருவன் மன்மதனால் தூண்டப்பட்டு இருந்தால் ஒழிய, அவனால் பாலியல் வாழ்க்கையில் மகிழ்வடைய முடியாது. மேலும் கிருஷ்ணரின் பெயர் மதன-மொஹன. மதன-மொஹன என்றால் கிருஷ்ணரால் கவரப்பட்டவன், அவன் பாலுறவினால் ஏற்படும் சுகத்தை மறந்து விடுவான். இதுதான் சோதனை. எனவேதான் அவர் பெயர் மதன-மொஹன. இவர் தான் மதன-மொஹன. சனாதன கோஸ்வாமீ, மதன-மொஹனரை வழிபட்டார். மதன அல்லது மாதன. மாதன என்றால் பைத்தியம் ஆவது. மேலும் மதன என்றால் மன்மதன். ஆக அனைவரும் பாலியல் வாழ்க்கையின் தாக்கலால் கடுப்படைந்திருக்கிறார்கள். இது இடங்களில் ... பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது, பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பாவம் ஏதத் தயோர் மிதோ ஹ்ருதய-க்ரந்திம் ஆஹுர். ஜட உலகம் அனைத்தும் இப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றது: ஆண் பெண்ணால் ஈர்க்கப்படுகிறான், ஒரு பெண் ஆணால் ஈர்க்கப்படுகிறாள். மேலும், இந்த ஈர்ப்பை நாடி, அவர்கள் இணையும் போது, இந்த ஜட உலகின்மீதுள்ள பற்றும் மேன்மேலும் அதிகரிக்கிறது. இப்படியாக, ஒன்று சேர்ந்த பிறகு, அதாவது திருமணம் ஆனபிறகு, ஒரு ஆணும் பெண்ணும், அழகான வீட்டை தேடுகிறார்கள், க்ருஹ; க்ஷெத்ர, செயல்பாடுகள், வியாபாரம், தொழிற்சாலை அல்லது விவசாயம். ஏனென்றால் ஒருவன் பணம் சம்பாதித்தாகவேண்டும். பிறகு உணவு பெற வேண்டும். க்ருஹ-க்ஷெத்ர; ஸுத, குழந்தைகள், மேலும் ஆப்த, நண்பர்கள்; வித்த, செல்வம்.. அத: க்ருஹ-க்ஷெத்ர-ஸுதாப்த-வித்தைர் ஜனஸ்ய மோஹோ அயம் (ஸ்ரீமத் பாகவதம் 5.5.8). இந்த ஜட உலகின்மீது உள்ள ஈர்ப்பு மேன்மேலும் இறுக்கமானதாக ஆகிவிடுகிறது. இதை மதன என்றழைக்கிறோம், மதனரால் ஈர்க்கப்படுதல். ஆனால் இந்த ஜட உலகின் மின்மினுப்பினால் கவரப்படுவது நம் தர்மம் அல்ல, கிருஷ்ணரால் கவரப்படுவது தான் நம் தர்மம். அதுதான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். கிருஷ்ணருடைய அழகினால் ஒருவன் ஈர்க்கப்படாமல் இருந்தால், நாம் இந்த ஜட உலகின் பொய்யான அழகை வைத்து திருப்தி அடைய வேண்டியிருக்கும். ஆகையினால் ஸ்ரீ யமுனாச்சாரியார் கூறுகிறார்: யதாவதி மம சேத: க்ருஷ்ண-பதாரவிந்தயோர் நவ-நவ-தாம ரந்தம் ஆஸீத்: "கிருஷ்ணரின் அழகால் நான் கவரப்பட்ட ஆரம்பித்ததிலிருந்து, மேலும் அவர் தாமரைப் பாதங்களுக்கு சேவை செய்ய தொடங்கியதிலிருந்து, எனக்கு ஒவ்வொரு நிமிடமும் புதிய சக்தி கிடைக்கிறது, மற்றும் நான் உடலுறவைப் பற்றி நினைத்தவுடன், எனக்கு அதன்மேல் காறித்துப்பவேண்டும் போல் இருக்கிறது. அதுதான் விதிர்ஷ்ணா, பற்று தீர்ந்துவிட்ட நிலை... இந்த ஜட உலகின் பற்றின் மையப் புள்ளி இந்த பாலியல் வாழ்க்கை, மற்றும் ஒருவனுக்கு இந்த பாலியல் வாழ்க்கையின் மீது உள்ள பற்று அடங்கியவுடன் ... ததாவதி மம சேதா..., யதாவதி மம சேத: க்ருஷ்ண-பதாரவிந்தயோர் நவ-நவ-(ரஸ-)தாம (அநுத்யத) ரந்தும் ஆஸீத் ததாவாதி பத நாரீ-சங்கமே ஸ்மர்யமானே பவதி முக-விகாரஹ ஸுஷ்டு நிஷ்டீவனம் ச "உடலுறவை பற்றி நினைத்தவுடனே, என் வாய் மறுபுறம் திரும்புகிறது, மேலும் எனக்கு காறித்துப்பவேண்டும் போல் இருக்கிறது." ஆகையினால் கிருஷ்ணர் மதன-மோஹன. மதன அனைவரையும் கவருகிறார், அதாவது பாலியல் வாழ்க்கை, மற்றும் கிருஷ்ணர், ஒருவர் கிருஷ்ணரால் கவரப்பட்டால், பிறகு அந்த மதனரும் வீழ்த்தப்படுகிறார். அந்த மதனர் வீழ்த்தப்பட்டவுடனே, நாம் இந்த ஜட உலகை வென்று விடுகிறோம். இல்லையெனில் இது மிகவும் கடினம்.