TA/Prabhupada 0105 - இந்த விஞ்ஞானம் சீடர்கள் பாரம்பரையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது
Lecture on BG 18.67 -- Ahmedabad, December 10, 1972
பக்தர்: ஸ்ரீலா பிரபுபாதா, யாரோ ஒருவர் ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார், அதாவது " தங்களுக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் தொடர்ந்து நடத்துவார்?"
பிரபுபாதர்: யார் என்னை கேள்வி கேட்கிறார்களோ, அவரே அதைச் செய்வார். (சிரிக்கிறார்)
தமிழன் (5): தொடர்ந்து நடத்தும் தங்களுடைய திட்டத்தை பற்றி என்னுடைய நல்ல பக்தர்களிடம் நான் கேட்கலாமா? இந்த இயக்கத்தை தங்களுக்கு பிறகு, அதாவது ஸ்ரீ பக்திவேதாந்த பிரபுக்கு பிறகு முன்னேற்ற, இந்த ஏணி, இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து உயர்த்த: ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா.
பிரபுபாதர்: அது பகவத்-கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது:
- இமம் விவஸ்வதே யோகம்
- ப்ரோக்தவானஹமவ்யயம்
- விவஸ்வான்மனவே ப்ராஹ
- மனுரிக்ஷ்வாகவே 'ப்ரவீத்
- (பகவத் கீதை 4.1).
முதன் முதலாக, கிருஷ்ணர் இந்த கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை சூரிய தேவனிடம் கூறினார். சூரிய தேவன் விவஸ்வான், தன் மகன் மனுவிற்கு இதை உபதேசித்தார். மேலும் மனு அவர் மகன் இஷ்வாகுவிற்கு உபதேசித்தார். ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: (பகவத் கீதை 4.2). ஆகையால் இந்த விஞ்ஞானம் சீடர்கள் பாரம்பரையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆகையால் இந்த சீடர்கள் பரம்பரை அமைப்பு என் குரு மஹாராஜவிடமிருந்து புரிந்துக் கொண்டதால், இதை புரிந்துக் கொண்ட என்னுடைய எந்த மாணவரானாலும், அவர் இதை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார். இதுதான் செயல்முறை. இது ஒன்றும் புதிய காரியமல்ல. இது பழமையான காரியம். நாம் வெறுமனே இதை சரியான முறையில் பரப்ப வேண்டும், நம்முடை முன்னோர்களாகிய ஆச்சாரியர்களிடமிருந்து கேட்டப்படி. ஆகையினால் இது பகவத்-கீதையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: ஆச்சாரிய உபாசனம்: "ஒருவர் ஆச்சாரியரை அணுக வேண்டும்." ஆச்சாரியவான் புருஸோ வேத. கல்வி உதவிநிதியாலும் வெறுமனே அனுமானித்தலாலும், அது சாத்தியமல்ல. அது சாத்தியமல்ல. ஒருவர் ஆச்சாரியரை அணுக வேண்டும். ஆகையால் ஆச்சாரியர் பரம்பரா முறைப்படி வருகிறார், சீடர்கள் மரபுவழி. ஆகையினால் கிருஷ்ணர் பரிந்துரைக்கிறார், தத்வித்தி பரணிபாதேன பரிப்ரஸ்னேன் ஸேவயா: (பகவத் கீதை 4.34). "ஒருவர் ஆச்சாரியரை அணுக வேண்டும் மேலும் பரணிபாத, சரணடைதல்." மூலம் புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இவை அனைத்தும் சரணடைவதை சார்ந்துள்ளது. யே யதா மாம் ப்ரபத்யன்தே. சரணடையும் முறை, சரணடைதலின் விகிதாசாரம், கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளும் உபாயமாகும். நாம் முழுமையாக சரணடைந்தால், பிறகு நாம் கிருஷ்ணரை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியும். நாம் ஒரு பகுதியாக சரணடைந்தால், பிறகு நாமும் கிருஷ்ணரை ஒரு பகுதிதான் புரிந்துக் கொள்ள முடியும். ஆகையால் யே யதா மாம் ப்ரபத்யன்தே. சரணடைதலின் ஒரு விகிதாசாரம். முழுமையாக சரணடைந்த ஒருவருக்கு, இந்த தத்துவம் புரியும், மேலும் கிருஷ்ணரின் கருணையால், அவர் சமயச் சொற்பொழிவும் ஆற்றலாம்.