TA/Prabhupada 0106 - பக்தி என்னும் மின்தூக்கியை மேற்கொண்டு நேரடியாக கிருஷ்ணரிடம் செல்லுங்கள்



Lecture on BG 18.67 -- Ahmedabad, December 10, 1972

ஆகையால் மம வர்தமானுவர்தன்தே என்றால், எவ்வாறு என்றால் உச்சியில் இருப்பது போல், அமெரிக்காவில் பல வானளாவிய கட்டிடங்கள் இருக்கின்றன. ஒரு நூற்றி-ஐந்து அடுக்குமாடி. இது சமீபத்தில் கட்டப்பட்டது என்று நினைக்கிறேன். ஒருவேளை நீங்கள் ஆக உச்சியில் இருக்கும் மாடிக்கு செல்ல வேண்டுமென்றால், அங்கு படிக்கட்டுகள் உள்ளன. ஆகையால் அனைவரும் அங்கு செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் யாரோ ஒருவர் கடந்து சென்றுவிட்டார்., சுமார் பத்து படிக்கட்டுகள். மற்றொருவர் சுமார் ஐம்பது படிக்கட்டுகள் கடந்துவிட்டார். மேலும் மற்றொருவர் நூறு படிக்கட்டுகள். ஆனால் நீங்கள் சுமார் இரண்டாயிராம் படிக்கட்டுகள், பூர்த்தி செய்ய வேண்டும். ஆகையால் படிக்கட்டுகள் ஒரே மாதிரியானவை. மம வர்தமானுவர்தன்தே. ஏனென்றால் அதன் நோக்கம் ஆக உச்சியில் இருக்கும் அடுக்குமாடிக்குச் செல்வதாகும். ஆனால் பத்து படிகளை கடந்தவர், ஐம்பது படிகளை கடந்தவரைவிட தாழ்ந்திருக்கிறார். மேலும் ஐம்பது படிகளை கடந்தவர், நூறு படிகளை கடந்தவரைவிட தாழ்ந்திருக்கிறார். ஆகையால் அதேபோல், அங்கே பலவிதமான செயல்முறைகள் உள்ளன. ஆனால் அனைத்து செயல்முறையும் ஒரே மாதிரியானவை அல்ல. அவர்கள் ஒரே இலக்கை நோக்கி குறிவைக்கிறார்கள், கர்ம, ஞான, யோக, பக்தி, ஆனால் பக்திதான் மிக உயர்ந்த படிக்கட்டு. ஏனென்றால் நீங்கள் பக்தி தளத்திற்கு வந்தபின், பிறகு நீங்கள் கிருஷ்ணர் யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். கர்ம, ஞான, யோக இவற்றால் அல்ல. அது சாத்தியமல்ல. நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், நீங்கள் அந்த இலக்கை நோக்கி போய் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், பக்த்யா மாமபிஜானாதி (பகவத் கீதை18.55). "ஞானத்தால், கர்மாவால், யோகாவால்" என்று அவர் கூறவில்லை, இல்லை. அதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் படிக்கட்டுகளில், முன்னேறிக் கொண்டு போகலாம். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அப்போது பக்தி. பக்த்யா மாமபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்வத: (பகவத் கீதை18.55). இதுதான் செயல்முறை. ஆகையினால் மம வர்தமானுவர்தன்தே என்றால் "எல்லோரும் என்னிடம் வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய சக்திக்கும், திறமைக்கும் ஏற்றபடி, ஆனால் உண்மையிலேயே என்னை புரிந்துக் கொள்ள விரும்புவோருக்கு, எளிமையான செயல்முறை," எவ்வாறு என்றால் அந்த படிக்கட்டுகள் அங்கிருப்பதைப் போல், ஆனால் இந்த நாட்டில் இல்லை, ஐரோப்பாவிலும், அமெரிக்க நாடுகளிலும், அருகருகே, அங்கே மின்தூக்கி, தூக்கும் இயந்திரம் இருக்கிறது. ஆகையால் ஒவ்வொரு படியாக எடுத்து ஆக உயர்ந்த அடுக்குமாடிக்கு செல்வதற்கு பதிலாக, நீங்கள் இந்த மின்தூக்கியின் உதவியுடன் செல்லுங்கள். நீங்கள் உடனடியாக, ஒரு விநாடிக்குள் செல்வீர்கள். ஆகையால் பக்தி என்னும் மின்தூக்கியை நீங்கள் எடுத்தால், பிறகு உடனடியாக கிருஷ்ணருடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்வீர்கள். ஒவ்வொரு படியாக போவதற்கு பதிலாக. நீங்கள் ஏன் அவ்வாறு எடுக்க வேண்டும்? ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ: (பகவத் கீதை18.66). "நீங்கள் வெறுமனே என்னிடம் சரணமடையுங்கள். உங்கள் வேலை முடிந்துவிடும்." நீங்கள் ஏன் இவ்வளவு வேலை மேற்கொள்ள வேண்டும், ஒவ்வொரு படியாக?