TA/Prabhupada 0108 - அச்சிடுதலும், மொழிபெயர்த்தலும் கண்டிப்பாக தொடர வேண்டும்
Room Conversation "GBC Resolutions" -- March 1, 1977, Mayapura
அதனால் எவ்வாறாவது, அச்சடித்தலும் மொழி பெயர்ப்பும் கண்டிப்பாக தொடர வேண்டும். அதுவே நமது முதன்மையான வேலை. இது நிறுத்தப்படகூடாது. கண்டிப்பாக தொடர வேண்டும். விடாப்பிடித்தன்மையினால், நம்மிடம் ஏராளமான ஹிந்தி இலக்கியங்கள் இருக்கின்றது. நான் எளிமையாக விடாப்பிடியாக, " எங்கே ஹிந்தி? எங்கே ஹிந்தி?" என்றேன். ஆகையால் அது உறுதியான அமைப்பு பெற்றது. நான் எளிமையாக அவரை திணித்துக்கொண்டிருந்தேன்: " எங்கே ஹிந்தி? எங்கே ஹிந்தி?" அதனால் அவர் கொண்டுவந்து செயல் படுத்தினார். அதேப்போல் ப்ரென்ச் மொழியும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, நாம் அதை முடிந்த அளவு மொழி பெயர்த்தும் அச்சடிக்கவும் வேண்டும். "புத்தகம் அச்சடிக்கவும்" என்றால் நம்மிடம் முன்பே புத்தகங்கள் இருக்கின்றது என்று பொருள். தெளிவாக குறிப்பிட்ட மொழியில் மொழி பெயர்த்தும் அச்சடிக்கவும் வேண்டும். அவ்வளவுதான். உட்கருத்து ஏற்கனவே அங்கிறுக்கிறது. நீங்கள் எந்த கருத்தையும் உருவாக்க வேண்டாம். பிரான்ஸ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடு. அச்சடித்தலும் மொழி பெயர்ப்பும் கண்டிப்பாக தொடர வேண்டும். இதுவே என் கோரிக்கை.