TA/Prabhupada 0134 - நீங்கள் கொலை செய்யக் கூடாது, ஆனால் நீங்கள் கொன்றுக் கொண்டிருக்கிறீர்கள்



Morning Walk -- October 4, 1975, Mauritius

பிரபுபாதர்: கிறிஸ்துவ மத குருக்கள், அவர்கள் என்னிடம் கேட்டார்கள் அதாவது " என் கிறிஸ்துவ மதம் குறைந்துக் கொண்டிருக்கிறது? நாங்கள் என்ன செய்தோம்?" நான் அவர்களிடம் கூறினேன், "நீங்கள் என்ன செய்யவில்லை?" (சிரிப்பொலி)

சியாவன: ஆம்.

பிரபுபாதர்: "கிறிஸ்துவின் கட்டளையை, நீங்கள் ஆரம்பம் முதற்கொண்டு மீறிவிட்டீர்கள், 'நீங்கள் கொலை செய்யக் கூடாது,' ஆனால் நீங்கள் கொன்றுக் கொண்டிருக்கிறீர்கள், கொலை மட்டுமே. ஆகையால் நீங்கள் என்ன செய்யவில்லை?"

பக்தர் (1): மிருகங்களின் மேல் மனிதன் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிரபுபாதர்:ஆகையினால் நீங்கள் அவற்றைக் கொன்று உண்ண வேண்டும். அருமையான நியாயம். "தந்தை பிள்ளைகளின் மேல் ஆதிக்கம் செலுத்த வேண்டும்; ஆகையினால் பிள்ளைகள் கொன்று உண்ணப்பட வேண்டும்." சரியான அயோக்கியர்கள், மேலும் அவர்கள் மதசார்ந்த தலைவர்கள் என்று சபதம் ஏற்றுக் கொள்கிறார்கள்.

புஸ்த கிருஷ்ண: பிரபுபாத, நாம் ஒவ்வொரு கணமும், சுவாசிக்கும் போதும், நடக்கும் போதும் கொன்றுக் கொண்டு, மேலும் பல காரியங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம், மேலும் அது கூறுகிறது, " நீங்கள் கொலை செய்யக் கூடாது," ஆகையால் பகவான் சிரமமான ஒரு ஆணையை நமக்கு கொடுத்திருக்கிறார் அல்லவா?

பிரபுபாதர்: இல்லை. மனச்சாட்சிபடி நீங்கள் செய்யக் கூடாது. ஆனால் உணர்விழந்த நிலையில், நீங்கள் செய்தால், அது மன்னிக்கப்படும். (இடைவேளை)..... நபுநர் பட்தயதெ. ஆலாதினீ-ஷக்தி, இது சந்தோஷ வலிமை. ஆகையால் இன்பமளிக்கும் சக்தி கிருஷ்ணருக்கு வேதனையல்ல. ஆனால் அது வேதனை தான். அது நமக்கு வேதனை, கட்டுண்ட ஆத்மாக்கள். இந்த தங்க நிலா (மதுக்கடையின் பெயர்), எல்லோரும் அங்கு சந்தோஷத்திற்காக வருகிறார்கள், ஆனால் அவர்கள் பாவச் செயல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆகையினால் அது சந்தோஷமல்ல. அது அவனுக்கு வேதனையை கொடுக்கும். ஆகையால் பல பின் விளைவுகள். உடலுறவு வாழ்க்கை, அது முறைக்கேடானதாக இல்லாவிட்டாலும், அதன் பின் விளைவுகள், வேதனை தரும். நீங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் குழந்தைகளை சுமக்க வேண்டும். அது வேதனையானது. பிரசவத்திற்காக மருத்துவாமனைக்கு செலவழிக்க வேண்டும், பிறகு கல்வி, பிறகு .மருத்துவர் செலவு - பல வேதனைகள். ஆகையால் இந்த சந்தோஷம், உடலுறவு சந்தோஷத்தைத் தொடர்ந்து பல வேதனையான விளைவுகள். தாப-கரீ. இதே மாதிரியான இன்பமளிக்கும் சக்தி சிறிய அளவிலான உயிரினத்திடமும் உள்ளது, அவர்கள் அதை பயன்படுத்திய உடனடியாக, அது வேதனையை கொடுக்கிறது. மேலும் இதே இன்பமளிக்கும் சக்தி ஆன்மீக உலகில் உள்ளது, கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடுகிறார், அது வேதனையல்ல. அது இதமானது. (இடை வேளை)..... மனிதன், அவன் நல்ல உணவு உண்டால் அது வேதனை கொடுக்கிறது. ஒரு நோயாளி, அவன் உண்டால்...

சியாவன: அவன் மேலும் நோய்வாய்படுவான்.

பிரபுபாதர்: அதிக நோய். ஆகையினால் இந்த வாழ்க்கை தபஸ்யவிற்கேற்றது, ஏற்றுக் கொள்ள அல்ல - மனமார தவிர்க்க வேண்டும். அப்போது தான் நல்லது.